இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை போட்டு வைப்பதை தடுக்க இது வரை உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் எத்தனிக்கும் கள்ளத்தனம் பெருமளவில் குவிந்திருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த 1948 முதல் 2008 வரை கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் பணம் கறுப்பு பணமாக வெளிநாடுகளில் 20 லட்சம் கோடி வரை டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆய்வு நடத்திய பொருளாதார நிபுணர் தேவ்கர் என்பவர் இந்த திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்தல் மற்றும் கணக்கில் வராத பணத்தை சுவிஸ் நாட்டில் உள்ள பாங்குளில் போட்டு வருகின்றனர். இந்த கள்ளப்பணத்தை கணக்கில் எடுத்து . யார், யார் ஈடுபட்டுள்ளனர் என கண்டறிந்து இதுவரை உருப்படியான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தப்பாடில்லை.
இதற்கிடையில் சுவிஸ் நாட்டு பாங்குகளில் கணக்கு வைத்திருப்போரை இந்திய அரசுக்கு தெரிவிக்கும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் நடந்து வருகிறது. ஆனால் இந்த ஒப்பந்தம் எந்தளவுக்கு நடைமுறை வந்தது என்பது இன்னும் உரிய தகவல்கள் இல்லை.
இது போன்ற கறுப்பு பணம் வெளிநாடுகளில் எவ்வளவு டிபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதை கண்டறியும் விதமாக சர்வேதச பொருளாதார நிதிய வல்லுனர் தேவ்கர் ஆய்வு நடத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவின் கள்பப்பணம் டிபாசிட் ஆண்டுக்கு 11. 5 சதவீதம் வளர்ந்து வந்திருக்கிறது.1948 முதல் 2008 கடந்த 60 ஆண்டுகளில் இந்திய பணம் 462 பில்லியன் டாலர் ( 20, 556, 848 000, 000 ) ஆகும். இந்த பணத்தின் மூலம் நாட்டில் வறுமை , மின்சாரம் இல்லாத கிராமங்கள் மேம்படுத்துதல், தடுப்பூசி, குடி நீர் வசதி போன்றவற்றை செய்து முடிக்க முடியும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பணம் போடுபவர்கள் யார் ? : இது போன்ற பணத்தை யார் போட்டுள்ளனர் என்ற கேள்விக்கு அவர் அளித்திருக்கும் விளக்கத்தில் பொருள் உற்பத்தியாளர்கள், மற்றும் முக்கிய பிரபல புள்ளிகள், பாலிவுட் நடிகர்கள் , கிரிக்கெட் நட்சத்திரங்கள் அடங்குவர். ஆனால் யார் பெயர் என்ன என்ற விவரத்தை சொல்ல மறுத்து விட்டார்.
நன்றி; தினமலர்