கோவை மத்திய சிறையில்ஆயுள் தண்டனைமுஸ்லிம் சிறைவாசியாக இருப் பவர் கோவை சேர்ந்த அபுதாஹிர். இவருக் கு இரண்டு கிட்னியும், இருதயமும் மற்றும் இரண்டு கண்களும் பாதிக்கப் பட்டா நிலையில் S L E என்ற ஓரு கொடிய நோய் தாக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் 13 ஆண்டு சிறைவாசம் இருந்து வருகிறார்.
நமது சமுதாய இயக்கங்கள் அபுதாஹிரை விடுதலைசெய்ய தமிழக அரசுக்கு தெடர்ந்து குரல் கொடுத்து வந்த காரணத்தினால் இவர்க்கு 2 ஆண்டுகளாக இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. 3 மாதம் ஜாமீன் அரசு உத்தரவு இட்டது. முன்று மாதம் கழித்து மீண்டும் அரசுக்கு கோரிக்கை வைத்தால் மறுபடியும் ஜாமீன் வழங்கும். இந்த நிலை தொடர்ந்து நீடித்து வந்தது.
இதற்கிடையில் முஸ்லிம் லீக் எம்.பி. அப்துர் ரஹ்மான் அவர்கள் கோவை வந்த போது அபுதாஹிர் விட்டுக்கு சென்று இவரின் உடல் நிலையை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். இப்படியா? உனது உடல் நிலை என நேரில் விசாரித்தார். உனக்காக என்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்கிறேன் என்று வாக்கு உறுதி அளித்தார்.
பிறகு உடனே சிறைதுறை அமைச்சர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளையும், சிறைதுறை அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு அபுதாஹிரின் இடைகால ஜாமீன் விபரம்களை தெரிந்து கொண்டு இவருகாக அரசு பொது மன்னிப்பு வழங்க முயற்சி செய்து வருகிறார். அதுபோல் தமுமுக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லாஹ்அவர்கள், பொதுச் செயளாளர் ஹைதர் அலி அவர்கள் அபுதாஹிர்க்கு பொது மன்னிப்பில் விடுதலை வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து ள்ளனர்.
கோவை மாவட்ட தமுமுக மருத்துவ அணி சார்பாக கோவை அரசு மருத்துவமனையில் அபுதாஹிர் சிகிச்சைக்கு டாக்டர்யிடம் பேசி வருகிறார்கள். அவ்வாறே, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மாநிலத் துனணத் தலைவர் கோவை இஸ்மாயில் அவர்களும் மற்றும் நிர்வாகிகளும் தமிழக அரசுக்கும், சிறைத்துறை அதிகாரிகளுக்கும் நேரிலும் ஃபோனிலும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
மேலும் ஜாக் ஜமாத், அபுதாஹிர் விடுதலைக்கும் இவரது நோய் குணமடையா ஜும்ஆ மேடைகளில் பேசி வருகிறார்கள். அது போல் இந்தியா தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் S.M.பாக்கர் அவர்களும் அபுதாஹிர் விடுதலை செய்ய குரல் கொடுத்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு உளவுத்துறை சில அதிகாரிகள் அபுதாஹிர் இடைகால ஜாமீன்யை ரத்து செய்ய அரசுக்கு அறிக்கை கொடுத்து இவரது இடைக்கால ஜாமீன்யை ரத்து செய்து. மீண்டும் சிறையில் அடைத்துவிட்டார்கள். இவர் சிறையில் மிகவும் அவதிபட்டு வருகிறார்.அபுதாஹிர் இடைக்கால ஜாமீன் இருக்கும் போது இவருக்கு தினமும் தனியார் மருத்துவமனையில் வாரம் ஒரு முறை ரூபாய் 3000க்கு மேல் செலவு செய்ய வேண்டும். அப்போதுதான் இவர் உயிருடன் வாழ முடியும். என்ற நிலையில் இருக்கிறார்.
சிறையில் இருக்கும் போது இந்த மருத்துவ வசதி கிடையாது. இந்த நிலையில் சிறையில் இவருக்கு மூச்சு தினறல் ஏற்பட்டு சிறைத்துறை உடனே அரசு மருத்துவமனையில் அவசர பிரிவுயில் அனுமதிக்கபட்டார்கள். உடனே சிறுபான்மை உதவி அறக்கட்டளை நிர்வாகிகள் தமுமுக மாநில நிர்வாகிகளுக்கும், முஸ்லிம் லீக் எம்.பி.அப்துல் ரஹ்மான் அவர்களுக்கும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில நிர்வாகிகளுக்கும், இந்தியா தவ்ஹீத் ஜமாத் மாநில நிர்வாகிகளுக்கும், தொடர்பு கொண்டு மீண்டும் இடைக்கால ஜாமீன் வழங்க தமிழக அரசுக்கும், சிறைத்துறை அமைச்சருக்கும், கோரிக்கை வைத்து ஜாமீன் வழங்க வேண்டும் என்று சிறுபான்மை உதவி அறக்கட்டளை நிர்வாகி கேட்டு கொண்டனர். அபுதாஹிர் விடுதலைக்கும் உடல் நிலை சரியாகவும் அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்
செய்தி, படம் : கோவை தங்கப்பா