திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Friday, November 19, 2010

எய்ட்ஸ் அபாயத்தைக் குறைக்கும் 'கத்னா'

,
ஆண்கள் கத்னா செய்து கொள்வது எய்ட்ஸ் அபாயத்தை பெருமளவு குறைக்கும் என்று ஆராய்ச்சியில் தெரிய வருவதாக கனடா நாட்டைச் சேர்ந்த இரண்டு மருத்துவ ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றார்கள்.
    மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அழித்து உயிருக்கே ஆபத்தை உண்டாக்கக் கூடிய ஆட்கொல்லி எய்ட்ஸ் பரவுவதிலிருந்து இவ்வுலகத்தைக் காக்க, ஆண்கள் கத்னா செய்து கொள்வதை இவ்வுலகின் எல்லாப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துவது மிகவும் அவசியம் என்று அந்த நிபுணர்கள் சொன்னதாக கனடா நாட்டைச் சேர்ந்த பிரஸ் நியூஸ் ஏஜென்ஸி என்ற பத்திரிக்கைகளுக்காக செய்திகளை சேகரிக்கும் நிறுவனம், இந்தக் கூடுதல் விபரத்தை தெரிவிக்கிறது.
    ஆண்கள் கத்னா செய்து கொள்வதை உலக அளவில் நடைமுறைப்படுத்தினால் எய்ட்ஸை அதிக அளவில் தடுக்கலாம் என்று அகில உலக எய்ட்ஸ் ஆராய்ச்சியின் முன்னோடியான டாக்டர் ஃப்ராங்க் பிளம்மர் கண்டுபிடித்துள்ளதாக மத்திய கனடாவின் மனிடோபா பிரதேசத்தின் தலைநகரமான வின்னிபெக்கிலிருந்து வெளியாகும் ஒரு பத்திரிக்கையிலும் இந்த செய்தி வெளியாகியிருக்கிறது.
    அந்த பத்திரிக்கையில் வெளியான செய்தியில், இரண்டு ஆராய்ச்சியாளர்கள் கென்யா நாட்டு நைரோபி பல்கலைக்கழகத்தோடு சேர்ந்து கூட்டு ஆராய்ச்சித் திட்டத்தை நடத்தி எய்ட்ஸ் ரகசியங்களை வெளிக் கொண்டு வர ஆரம்பித்துள்ளனர். ஆப்பிரிக்காவில் நடத்திய இந்த ஆராய்ச்சியையே அவர்களது மேற்கண்ட முடிவுகளுக்கு அடிப்படையாக கொள்கின்றனர்.
    டாக்டர் பிளம்மர் மற்றும் பெல்ஜிய நாட்டைச் சேர்ந்த டாக்டர் பீட்டர் பையோட் ஆகியோரின் தலைமையின் கீழ் செயல்பட்ட அந்த ஆராய்ச்சிக் குழுவினர்கள், ஹெச் ஐ வி என்று சொல்லப்படுகிற எய்ட்ஸ் வைரஸ் கிருமிகள் எவ்வாறு பரவுகிறது? ஆண், பெண் இன உறுப்புகளில் அது எவ்வாறு வளர்கிறது? போன்ற புரியாத புதிர்களுக்கு விடை கண்டுள்ளனர். ஹெச் ஐ வி ஆண்களுக்கு பரவுவதில் ஆண் இன உறுப்பின் முன் தோல் பாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. 'ஆண்களுக்கு மத்தியில் ஹெச் ஐ வி பரவுவதில் இதுதான் மிக முக்கிய அபாயகரமான காரணியாக திகழ்கிறது என்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது' என்று டாக்டர் பிளம்மர் கூறுகிறார்.
    ஹெச் ஐ வி வைரஸ் கிருமிகள் சிறுநீரகக் குழாய் வழியாக நுழைந்து உடலுக்குள் செல்கிறது என்று முதலில் எண்ணப்பட்டு வந்தது. ஆனால் அது அப்படி அல்ல என்று டாக்டர் ரொனால்டு கூறுகிறார். அது மியூக்கஸ் மெம்ப்ரெய்ன் என்ற தோலின் மேற்பகுதி மூலமாகவே உடலுக்குள் செல்வதாக இப்போது நம்பப்படுகிறது. கத்னா செய்யப்படாத முன் தோலின் வெதுவெதுப்பும், ஈரத்தன்மையும் வைரஸை பெருகச் செய்கிறது. அது உடலுக்குள் செல்லும் வழியைத் தேடிக் கொள்ளும் வரை அங்கேயே பாதுகாக்கப்படுகிறது என்கிறார்.
    அதனாலேயே டாக்டர் ரொனால்டு அவர்கள், ஆண்கள் உலக அளவில் கத்னா செய்து கொள்வது அவர்களின் உடல் நலத்தை அதிக அளவில் காக்கும் என்றும், கத்னா செய்து கொண்டவர்களின் சிறுநீரகப்பை, கிட்னீ போன்றவை பாக்டீரியா போன்ற கிருமிகளால் பாதிக்கப்படும் அளவைவிட, கத்னா செய்து கொள்ளாதவர்கள் 15 மடங்கு அதிகமாக பாதிக்கப்படுகின்றார்கள். கத்னா செய்து கொண்டால் அதிகமான இப்பாதிப்பு இருப்பதில்லை என்றும் வலியுறுத்துகிறார்.
    கத்னா செய்வதை தீவிரமாக எதிர்த்துக் கொண்டிருந்த அமெரிக்கன் பெடியாட்டிரிக் அசோசியேசன் அதை ஆதரிப்பதாக வெளிப்படையாகவே சொல்ல ஆரம்பித்திருக்கிறது என்று டாக்டர் ரொனால்டு சொன்னதாக அந்தப் பத்திரிக்கைச் செய்தி கூறுகிறது. மணலி . அஷ்ஃபாக்

0 comments to “எய்ட்ஸ் அபாயத்தைக் குறைக்கும் 'கத்னா'”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates