திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Monday, November 15, 2010

காரைக்காலில் TNTJ இரண்டாக உடைந்தது!

,

சதிக்காரர்களுக்கு எல்லாம் சதி செய்யும் வல்ல அல்லாஹ்வை மறந்து தனது ஆணவத்தில் அதிகாரம் செலுத்தும் பிஜெ என்பவரின் செயலுக்கு எதிராக மறுமைக்கு பயப்படும் நியாயமான எண்ணம் கொண்ட சகோதரர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து விலகி கொண்டு இருக்கிறார்கள் என்பதை நாம் சென்ற செய்தியில் குறிப்பிட்டு இருந்தோம். அதை காரைக்கால் சகோதரர்கள் தற்பொழுது உண்மைப்படுத்தி உள்ளனர்.

புதுவை மாநிலத்தைச் சேர்ந்த காரைக்காலில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்ச் சேர்ந்த சகோதரர்களுக்கிடையில் பிஜெயின் இந்த பித்தலாட்டம் விவாகாரம் இன்று பூதகரமாக வெடித்து கிளம்பியதின் எதிரொலியாக அங்கு TNTJ இரண்டாக உடைந்தது. TNTJ விலிருந்து பிரிந்த சகோதரர்கள் ஹஜ் பெருநாளை வரும் 17ஆம் தேதி திடல் தொழுகையுடன் கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

வமக்ரூ மக்ரல்லாஹ் வல்லாஹு கைரில் மாக்கிரீன். (அல்குர்ஆன் 3:54) என்ற தாத்பரியமான இறைவசனத்தை நாங்கள் மறந்து விட மாட்டோம்.
இன்று தியாகத்தை போற்றும் உன்னத நாள். சகோதரர் பாக்கரின் கீழ் நின்று உருவாக்கப்பட்ட அமைப்பை களவாட நினைத்தவர்களுக்கு அல்லாஹ் தக்க பாடம் புகட்டுவான்.
இந்த அநியாயம் குறித்து நாளைய நிலையில் அல்லாஹ்விடம் கேட்கப்படும் கேள்விக்கு பதில் சொல்லும் நிலையை நினைத்து சகோதரர்களே! பயந்து கொள்ளுங்கள்.

சனிக்கிழமை அன்று மீன் பிடிக்கச் சென்ற அநியாயக்காரர்களை கண்டிக்காத நன் மக்களை அல்லாஹ் தண்டித்ததுப் போல் நம்மை அல்லாஹ் தண்டிக்காமல் காப்பாற்றற்றுமாக! ஆமீன்.

0 comments to “காரைக்காலில் TNTJ இரண்டாக உடைந்தது!”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates