கடந்த 2 வருடமாக தனது வீரியமான போரட்டத்தால், மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை தக்கமுறையில் தடம் பதித்த மக்கள் பேரியக்கம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ)
அல்லாஹ் பள்ளியான பாபரி மஸ்ஜித்தை இடித்த கருப்பு நாளான நேற்று (06-12-2010) அன்று மீட்கும் போராட்டத்தை தமிழகம் முழுவதும் வீரியமாக நடத்தியது.
இப்போரட்டத்தை நடத்த ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற சங்பரிவார் பிஜெபி (BJP) அமைப்புகள் தான் தடுக்கும் என்றிருந்த நேரத்தில் பிஜெபி (PJP) அதாவதுபி.ஜெய்னுலாபுதீன் பார்டியும் தடுக்கும் என்பதை அறிந்து ஆரம்பத்தில் அதிர்ச்சியாக இருந்தாலும், இவரின் தன் மனோ இச்சைக்காக எதையும் செய்யும் இந்த அநியாயக்காரன் செயல் ஒன்றும் நமக்கு பெரிதாக தெரியவில்லை.
அல்லாஹ்வின் மாபெரும் அருளால் கடந்த 20 தினங்களுக்கு மேலாக கொட்டித்தீர்க்கும் மழைக்கும் மத்தியிலம் சென்னை முதல் தமிழகத்தின் எல்லா இடங்களிலும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்த டிஸம்பர்-6 கண்டன ஆர்ப்பாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பாபரி பள்ளியின் இடத்தில் ஒரு இன்ச்யை கூட விட்டு விட மாட்டோம். அலகாபாத் நீதிமன்றத்தின் பாராபட்ச தீர்ப்பை கடுமையாக கண்டித்தும், முறையான தீர்ப்பு வரவில்லை என்றால், அயோத்தி நோக்கி பயணிப்போம் என்ற கோரிக்கை வலுவாக அரசிடம் வைக்கப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் S.M.பாக்கர், பொதுச் செயலாளர் முஹம்மது சீத்தீக் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார். முன்னதாக மாநிலப் பொதுச் செயலாளர் முஹம்மது இக்பால், பாபரி மஸ்ஜித் ஆர்ப்பாட்டத்தை தடுக்க முயற்சி எடுத்த பிஜெயை கடுமையாக கண்டித்தார். மாநிலச் செயலாளர்கள் ஷிப்லி, ஃபிர்தவ்ஸ், இனாயத்துல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென் சென்னை, வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடும், அவர்களின் கடும் உழைப்பின் அடையாளமாக நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
மகளிர் அணி பொறுப்பாளர் மசூதா ஆலிமா, குழந்தைகளுடன் அணி வகுத்த பெண்களுக்கு மத்தியில் உணர்ச்சிப்பூர்வமான கண்டன உரையை நிகழ்த்தினார். குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அத்வானி, வாஜிபாய், உமாபாரதி, மனோகர் ஜோஷி உள்ளிட்ட 68 பேர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கடுமையாக வற்புறுத்தினார்.