ஐ.நா., பொதுச்சபையில் முதல் முறையாக பேச அனுமதிக்கப்பட்ட அவர், தனக்கு அளிக்கப்பட்ட 15 நிமிடம் என்றிருந்த போதும் 100 நிமிடங்கள் உரையாற்றியள்ளார். இதனால் அவையில் சற்று குழப்பநிலை தோன்றியது.
இந்தியாவுக்கும் சரி, பாகிஸ்தானுக்கும் சரி, இருவருக்குமே சொந்தமாக காஷ்மீர இருக்கக்கூடாது. அது தனிநாடாகவே இருக்க வேண்டும்.
அதே போல அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இந்தியாவும், பாகிஸ்தானும் ஐ.நா., பாதுகாப்பு சபையில் இடம் பெற அனுமதிக்கக் கூடாது.
ஐ.நா.இ பாதுகாப்பு சபையில் அதிக அளவில் பெரிய நாடுகள் அனுமதிக்கப்படுவது அதிக ஏழ்மைஇ அதிக அநீதியை உலகில் உருவாக்கும். இன்றைக்கு இருக்கும் ஐ.நா.இ பாதுகாப்பு சபையே ‘பயங்கரவாத கவுன்சிலாக’ இருக்கிறது. இவ்வாறு கடாபி பேசினார்.