பாகம் - ஒன்று
இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த காலம் அது,
சீராத் என்பது இந்திய நாட்டின், குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமமாகும். அங்கு 1918ம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி ஹுஸைன் காஸிம் தீதாத் மற்றும் பாதிமா தம்பதியினருக்கு பிறந்தவர்தான் அந்த வீரமிகு, விவேகமிகு சிறுவன், அஹ்மத் தீதாத்.
தனது ஊரில் தந்தை ஒரு விவசாயி, தாய் அதற்கு உதவியாக இருந்து நாட்கள் நகர்ந்தன. விவசாயத்தில் தொடர்ந்த ஹுஸைன் காஸிம் தீதாத் அவர்கள் தனது உழைப்பு குடும்ப வாழ்க்கைக்கு போதியதாக இல்லை என்பதை கருத்தில் கொண்டு தென்னாபிரிக்காவுக்குப் பயணமானார். அங்கு ஒரு தையல்காரனாக தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தார்.
சிறிய வயதிலேயே தந்தையை தூரப்படுத்திய அஹ்மத் தீதாத் தனது தாய் தந்தையருடன் சேர்ந்து வாழும் காலத்தை எதிர்பார்த்திருந்த அந்த கனாக் காலம் நீங்கி தனது அறுமை தாயை 1925ம் ஆண்டு இழந்தார்கள். மகனின் தனிமையை கவனத்தில் கொண்ட தந்தை மகனை தன்னுடன் இணைத்துக் கொள்ளும் வகையில் தன்னுடன் வாழ தென்னாபிரிக்காவுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்தியாவில் வாழ்ந்த அஹ்மத் தீதாத் என்ற ஒன்பது வயது சிறுவன் தென்னாபிரிக்காவுக்கு இந்திய கடவுச்சீட்டு மூலம் போகமுடியாத நிலைக்குள்ளானார். பிரித்தானிய ஆட்சியில் இந்தியா முடங்கிக் கிடந்த காலம் அது. அதனால் பிரித்தானிய கடவுட் சீட்டுடன் 1926ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் கால் பதித்தார். வாழ்க்கையில் முதல்தடவையாக கப்பல் பயணம் மேற்கொண்ட அனுபவம் அவருக்கு.
புதிய மண், சரியாக தெரியாத சூழல், மாற்று உலகம், அறிமுகமற்ற முகங்கள், அதிசய அனுபவம் என்று ஆரம்பித்தது தென்னாபிரிக்க வாழ்க்கை.
தொடரும்......... நன்றி:மாற்றங்கள் தேவை