இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் விசயங்கள் யாவை ? பத்து விசயங்கள் ஒருவனை இஸ்லாத்தை விட்டே வெளியேற்றிவிடுகின்றன. அவை பின்வருமாறு :- 1. பலதெய்வ வழிபாடு. (இணைவைத்தல்). 2. பலதெய்வ வழிபாடு செய்பவர்களை நிராகரிப்போர் என நம்பாமலிருத்தல். அல்லது அவர்களின் பலதெய்வக்கொள்கை சரியாகஇருக்குமோ என சந்தேகித்தல். 3. தனக்கும் அல்லாஹ்வுக்குமிடையே இடைத்தரகர்களை ஏற்படுத்தி அவர்களிடம் தம்தேவைகளை நிறைவேற்றப் பிரார்த்தனை புரிந்துகொண்டு அல்லாஹ்விடம் தமக்கு பரிந்துரை செய்யுமாறு வேண்டுதல். 4. நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலைவிட பிறருடைய வழிகாட்டுதலை சிறந்தது என நம்புதல். 5. நபி(ஸல்) அவர்கள் கொண்டு வந்த அனைத்தையும் வெறுத்தல். 6. நபி(ஸல்) அவர்களின் மார்க்கத்தை ஏற்க மறுத்தல். அந்த மார்க்கத்தைப் பின்பற்றுவதால் கிடைக்கும் நற்கூலியைப்பற்றியும் , அதைப் புறக்கணிப்பதால் கிடைக்கும் தண்டனையைப் பற்றியும் பரிகாசம் செய்தல். 7. சூனியம் செய்தல். 8. முஸ்லிம்களுக்கு எதிராக இணைவைப்பவர்களை ஆதரித்தல். 9. மூஸா (அலை) அவர்களின் சட்டங்களுக்கு உட்படாது கிள்ரு(அலை) விதிவிலக்காக இருந்ததைப்போல் நம்முடைய ஷரீஅத்தை பின்பற்றி நடப்பதிலும் நம்மில் சிலருக்கு விதி விலக்கு உண்டு என்று நம்புதல். 10. அல்லாஹ்வின் மார்க்கத்தை அறிந்து கொள்ளாமலும், அதை நடைமுறையில் பின்பற்றாமலும் விலகிச்செல்லுதல் இஸ்லாம் அழைக்கிறது இஸ்லாம் குறிப்பிட்ட மொழியினருக்கோ, பகுதியினருக்கோ, குலத்திற்கோ அல்லது நிறத்திற்கோ உரிய மார்க்கம் அன்று. அது மனித குலம் அத்தனைக்கும் சொந்தமான முழமையான ஒரு வாழ்க்கைத் திட்டம்.இஸ்லாத்தில் பிறப்பால், நிறத்தால், மொழியால், குலத்தால், எவரும் உயர்ந்தவராகவோ தாழ்ந்தவராகவோ முடியாது. இஸ்லாமிய மார்க்கத்தில் கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே இடைத்தரகர் எவருமில்லை.புரோகிதருக்கும் இஸ்லாத்தில் இடமில்லை. இஸ்லாத்தில் ஏக இறைவனைத் தவிர வேறு எவர் முன்னிலையிலும், எதன் முன்னிலையிலும் எவரும் தன் சுயமரியாதையை இழக்கக் கூடாது. குனிவது, பணிவது, சாஷ்டாங்கமாக விழுவது உள்ளிட்ட எல்லா மரியாதைகளும் ஏக இறைவன் ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானவை என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. இஸ்லாமிய சட்டங்கள் அனைத்தும் அறிவுக்குப் பொருத்தமானவை. நடைமுறைப்படுத்த எளிமையானவை. கடந்த பதினான்கு நூற்றாண்டு களாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. இஸ்லாம், மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை சந்திக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் சிறப்பாக வழிகாட்டுகிறது. மனிதன் தன்மானத்துடனும் நேர்மையுடனும் வாழச்செய்கின்றது. எனவே தூய இஸ்லாத்தின் உயர் போதனைகளை அறிந்து பின்பற்றுவீர்! எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே! இதை எல்லா மக்களின் இதயங்களில் பதிய வைப்போமாக... மணலி . அஷ்ஃபாக் |
தற்போதைய பதிவுகள்
Friday, December 10, 2010
இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் விசயங்கள்
Posted by
I.N.T.J
,
at
9:30 PM
Subscribe to:
Post Comments (Atom)