அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...இஸ்லாத்தை தூய்மையான வடிவில் சொல்ல புறப்பட்ட அந்த தூய்மையற்றவர்
மார்க்கத்தின் பெயரால் இஸ்லாமியர்களிடத்தில் கலந்து விட்ட கலப்படத்தை அகற்ற புறப்பட்ட அந்த அறிஞர்[?], ஒன்றும் இல்லாத விஷயங்களை அதில் அவருக்கு லாபம் இருந்தால் பூதாகரமாக்கி காட்டுவதும் இல்லை என்றால் அதன் வீரியத்தை குறைத்து காட்டுவதும் வழக்கம்.
தமிழகஅரசு கட்டாய பதிவு சட்டத்தை கொண்டுவந்த
பொழுது,அதில் உள்ள ஷரத்துகள் முஸ்லிம் சமூதாயத்துக்கு பாதிப்புகள்
உண்டாக்கும் வகையில் இருந்ததால் அதை முதலில் நமது அமைப்பு [இதஜ] சார்பாக
எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் பதிவு செய்தோம். அதன் பிறகு, ”தனிநபர் அமைப்பு” தவிர்த்து, ஏனைய அமைப்புகளின் கூட்டு முயற்ச்சியாலும் படைத்தவனின்
உதவியோடும் வெற்றிக்கனியை ஈட்டினோம்.
கட்டாய திருமன பதிவு சட்ட பிரச்னையை நாம் கையில் எடுத்த ஒரே
காரணத்துக்காக காழ்புணர்ச்சி மற்றும் பொறாமையின் காரணமாக அதில் உள்ள
முஸ்லிம் விரோத ஷரத்துகளைஎல்லாம் தனக்கே உரிய பாணியில் வியாக்கியானம் கொடுத்து, அதன் வீரியத்தை குறைத்து, சப்பை விஷயமாக சித்தரித்து, சரி காண முற்பட்டார். ஆளும் அரசிடம் சமூகத்தை அடகு
வைத்ததிற்காக, அரசின் இந்த முஸ்லிம் விரோத போக்கை ஆதரித்தார்.தனது
சுயநலத்தால் சமூதாயத்தை நாசப் படுகுழியில் தள்ள முற்பட்டார். ஓங்கி
ஒலித்த ஒற்றுமையின் குரலால் இறைவன் காப்பாற்றினான.அல்ஹம்துலில்லாஹ்.
ஒன்றுமில்லாத நக்கீரன் விஷயம் :
ஆனால் ஒன்றும் இல்லாதநக்கீரன் விஷயத்தை தனது சுய ஆதாயத்திற்காக பெரிதாக்கி காட்டி , தன்னையே ஒரு முஸ்லிம் சமூதாயமாக சித்தரித்து அதன் வீரியத்தை அதிகப்படுத்தி ,பெண்களை நா கூசும் கோஷங்களை போடச்செய்து நக்கீரனுக்கு எதிராக
போராட்ட களத்தை கண்டு தான் நினைத்ததை சாதித்தார். ஆனாலும் நக்கீரன்
பணியாமல் முகத்தில் கரியை பூசியது என்பது வேறு கதை.
வைகோவை அமெரிக்காவின் கைக்கூலியாக்கி ஆதாயம் :
அதே போல் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகையை நேரடியாக கண்டிக்க திராணியின்றி, ஒபாமாவின் வருகையை ஆதரித்ததற்காக எந்த
அதிகாரமும் அற்ற வைகோவை, "அமெரிக்காவின் கைக்கூலி வைகோ"
என்று கண்டித்து கண்டன போஸ்டர்களை ஒட்டி பெரிய அளவில் பில்டப்
பன்னினார். ஒபாமாவை இந்தியாவிற்கு அழைத்த காங்கிரசையும், அந்த காங்கிரஸ் அரசில் அங்கம் வகிக்கும் இவரது கூட்டணிக் கட்சியான திமுகவையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். காரணம் சமுதாயத்தை அவர்களிடம் அடகு வைத்து
பெறவேண்டியது பெற்று விட்டதாலோ என்னவோ?
இப்படி தனது ஆதாயத்திற்காக கடுகை பெரிய மலையளவும்,
மலையை மடுவாகவும் காட்டும் இவர், தன்னை மட்டுமே சமுதாய பாதுகாவலர் என்றும், தனது அமைப்பு மாத்திரமே விலைபோகாத அமைப்பு என்றெல்லாம்
ரீல் விடுவார். உலக அளவில் முஸ்லிம்களை கருவறுக்க துடிக்கும் நாடுகளில்
பிரான்ஸும் ஒன்றாக இருந்தும், அதன் அதிபர் தற்பொழுது இந்தியா வந்தும்
அவருக்கு எதிராக எந்த வித போராட்டமோ ,கண்டன சுவரொட்டிகளோ, ஒரு அறிக்கையோ வெளியிடாதது ஏன்? சமூகம் இவர் விஷயத்தில் விழிப்படைந்து விட்டதாலா?
பிரான்ஸ் பங்களிப்பே அதிகம் :
ஈராக் மற்றும் ஆப்காணிஸ்தானில் முஸ்லிம்களை கொல்லுவதற்கும், நாட்டை ஆக்கிரமிப்பதற்கும் போர் தொடுத்த அமெரிக்காவின் நேசநாட்டுப் படைகளில் பிரான்ஸ் படைகளும் ஒரு அங்கமாகும். அதுமட்டுமன்றி நேசநாட்டுப் படைகளில் இடம்பெற்றிருந்த சில நாடுகள் தமது துருப்புகளை வாபஸ் பெற்ற நிலையிலும், சில நாடுகள் துருப்புகளை குறைத்த நிலையிலும், பிரான்ஸ் மட்டுமே பிடிவாதமாக அதே அளவு துருப்புகளை இன்றளவும் நிறுத்தி வைத்திருக்கிறது.
மேலும் உலக ரவுடி புஷ் கூட, ஈராக் போர் விஷயத்தில் தவறு செய்துவிட்டேன் என்று சுய சரிதை எழுதும் நிலையில், இராக் மீதான போர் குறித்து தொடர்ந்து வாய் திறக்க மாறுகிறது பிரான்ஸ். அதுமாத்திரமில்லாமல் நாடாளுமன்றத்தில் பர்தாவுக்கு எதிரான சட்டத்தை கொண்டுவந்ததும் இந்த பிரான்ஸ் அரசு தான். அதை தொடர்ந்துதான் ஏனைய நாடுகளிலும் பர்தா தொடர்பான சர்ச்சையும் எழுந்தது.
உலக பயங்கரவாதி அமெரிக்கா கூட பர்தாவுக்கு எதிரான சட்டத்தை
கொண்டுவரவில்லை மாறாக பிரான்ஸ் கொண்டுவந்ததிலிருந்து அதன் முஸ்லிம் விரோத போக்கை அறிந்துக்கொள்ளலாம்.
சர்கோசியுடன் சரண்டர் :
இப்படிப்பட்ட இஸ்லாமிய விரோத, முஸ்லிம் விரோத சர்கோசியின் வருகையை பற்றி இந்த பொய்யர் மூச்சு கூட விடாதது ஏன்? ஒபாமாவை விட சர்கோசி நல்லவர் என்பதாலா? அல்லது வைகோவை எதிர்த்தால் நமக்கு பாதிப்பில்லை. ஆனால் சர்கோசியை எதிர்த்தால்...? என்று பம்மி விட்டாரோ? ஒரு S M S -ல் பத்தாயிரம் பேரை[?] திரட்டும் இவர் சர்கோசிக்கு பயப்படலாமா?
புள்ள பூச்சியை[வைகோ] எதிர்க்க போர்வாளோடு கிளம்பிய இவர், புலியை கண்டவுடன் புறமுதுகிட்டது ஏன்? இதை இங்கே பதிவு செய்யும் நோக்கம் அவரது நிறங்களை அவரது அபிமானிகள் அரிந்து கொள்ளவேண்டும் என்பதற்குதான்.
இனியேனும் அபிமானிகள் இவரை அறிவார்களா? அல்லது அறியாமையில் உளறுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.
நன்றி :முபாரக், துணைச்செயலாளர்
குவைத் மண்டலம் : இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
தற்போதைய பதிவுகள்
Subscribe to:
Post Comments (Atom)