“கணக்குக் காட்டுகிறேன்; கண்ணுடையோர் காண” எனத் தமிழ்நாட்டு முதலமைச்சர் கருணாநிதி, தம் சொத்துக் கணக்கை வெளியிட்டுள்ளார். அதில் சன் டிவியிலிருந்து தம் பங்குத் தொகையாக நூறு கோடி ரூபாய் கிடைத்தது என்று சொல்லியிருந்த வரிகளைப் படித்ததும் என்னைத் தூக்கிப் புரட்டிப் போட்டதுபோல் இருந்தது; நூ.........று.........கோ............டி.......... ரூ........ பா.......ய்........ எனப் படிப்பதற்குள் வாய் உலர்ந்துவிட்டது.
குடிக்கக் கஞ்சியும் கிடக்கக் குடிசையும் உடுக்க நல்ல உடையும் இல்லா அன்றாடங்காய்ச்சிகள் இலட்சக்கணக்கில் வாழும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், மிகச்சுலபமாகத் தம் பங்குத் தொகையாக 1000000000 ரூபாய் கிடைத்தது என்று சொன்ன அறிக்கையைப் படித்தபோது மக்களுக்காகவே வாழ்ந்த - வாழ்ந்துகொண்டிருக்கும் பல முதல்வர்கள் மற்றும் தலைவர்களின் நினைவு வந்தது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.
தமிழனின் சராசரி மாத வருவாய் இரண்டாயிரம் ரூபாய் என்றும் அவர்களுள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களின் மாத வருவாய் ஐநூறு முதல் அறுநூறு என்றும் சில புள்ளி விபரங்கள் கூறுகின்றன. மக்களின் வாழ்க்கைத் தரம் இப்படி இருப்பதால்தான் கருணாநிதி மக்களுக்கு இலவசங்களை வழங்குகிறார்; மக்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.
"நான் சிசுப் பருவத்திலே இருந்த போதே, திருடர்கள் வீடு புகுந்து திருட வருகின்ற அளவிற்கும் - உயர்நிலைப் பள்ளியில் படிக்கவே திருவாரூரில் கொண்டு போய் சேர்க்கக் கூடிய அளவிற்கும் ஓரளவு வசதியுள்ள குடும்பம் தான் என்னுடையது" என்று தொடங்கிய கருணாநிதி 1949ஆம் ஆண்டில் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் ஐநூறு ரூபாய் மாதச்சம்பளத்திற்குத் திரைப்பட எழுத்தாளராகப் பணி புரியத் தொடங்கியதிலிருந்து இன்று வரை எழுபத்தைந்து திரைப்படங்களுக்கு மேல் திரைக்கதை, வசனம் எழுதிச் சம்பாதித்ததையும் 1957ஆம் ஆண்டு முதல் இன்று வரை சட்டமன்ற உறுப்பினராக இருப்பதையும் முரசொலி, முத்தாரம், குங்குமம், ரைஸிங்ஸன், வண்ணத்திரை போன்ற இதழகள் நடத்தி வருவாய் ஈட்டியதையும் சொல்லியிருக்கிறார்.
1949 முதல் அவர் ஈட்டிய வருவாயில் அவரது மூன்று மனைவிகளுக்கும் இரண்டு வீடுகளுக்கும் அவர் பெற்ற ஆறு பிள்ளைகளுக்கும் உணவு, உடை, மருத்துவம், கல்வி என அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து, அவர்களுக்கு மணம் செய்வித்துத் தனித்தனி வீடுகளில் வாழ வைத்ததற்கு இவர் கூறியுள்ள வருவாய் இனம் போதுமா என்றோ, சன் டி.வி.யில் நூறுகோடி பங்குத் தொகை பெறும் அளவிற்கு முதலீடு செய்திருக்க முடியுமா என்றோ பேரப்பிள்ளைகளுடன் பிணங்கி உடனடியாகக் கலைஞர் டி.வி. துவங்க முதலீடு எப்படி வந்தது என்றோ வினாக்களை எழுப்புவதும் ஆராய்ச்சி செய்வதும் இந்த அலசலுக்குத் தேவைப்படாதவை.
"கருணாநிதிக்கு கோபாலபுரத்தில் ஒரு வீடு. சி.ஐ.டி., காலனியில் ஒரு பங்களா. ஸ்டாலினுக்கு வேளச்சேரியில் ஒரு பங்களா. மகள் செல்விக்கு பெங்களூரில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மாளிகைகள், பண்ணை வீடுகள். அழகிரிக்கு மதுரையில் பல ஏக்கர் நிலங்கள், பண்ணை வீடுகள், வர்த்தகமாடி கட்டடங்கள், இன்ஜினியரிங் கல்லூரி உள்ளன. தமிழரசு, முத்து, கனிமொழி என அனைவரும் மாட மாளிகைகளில். பேரன்கள், பேத்திகள் உட்பட கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஆடம்பர மாளிகைகளும் ஏராளமான அசையா சொத்துக்களும் உள்ளன. ஆசியாவின் மிகப்பெரிய பணக்கார குடும்பமாக கருணாநிதி குடும்பம் விளங்கி கொண்டிருக்கிறது" என ஜெயலலிதா கூறுவதயும் நாம் அலசப்போவதில்லை.
கருணாநிதி கூட்டங்களில் பேசி, இரண்டு வடையும் ஒரு டீயுமே சம்பளம் பெற்றவர்; கருணாநிதி திருட்டு ரயில் ஏறிச் சென்னைக்கு வந்தவர் என்று அ.இ.அ.தி.மு.க.வின் மூன்றாம்தர மகளிரணிப் பேச்சாளார்களின் தரத்தில் ஜெயலலிதா கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. இந்நாள் முதல்வரைப் பற்றி முன்னாள் முதல்வர் கூறக்கூடாத ஒன்று இது. ஆனால் "எம்.ஜி.ஆ.ரின் மனவியான ஜானகி, மோரில் விஷம் வைத்து எம்.ஜி.ஆரைக் கொன்றார்" எனக்குற்றம் சுமத்திய ஜெயலலிதாவிடம் இதை விட நாகரீகமாக எதிர்பார்க்க முடியாது.
கிராமத்திலிருந்து திரைப்படத்துறையை நம்பி வந்து வெற்றி பெற்றவர்கள் எல்லாம் பணக்காரர்களாகும்போது கருணாநிதியும் திரைப்படத்துறையில் வருவாய் ஈட்டிச் சேமித்திருக்கலாம் என நம்புகிறோம். ஆனால் அலசலின் துவக்கத்தில் சொன்னபடி நம்மைப் புரட்டிப்போட்டது அந்த 100 கோடி தான்
கருணாநிதியை விடச் சிறந்த மக்கள் தலைவர்கள் இருந்துள்ளனர்; இருக்கின்றனர். அவர்களுள் ஒருவர் தோழர் ஜீவா. அவரைப் பற்றி விரிவாக ஓர் அலசல் எழுதப்படும். இங்கே சொல்லப்பட வேண்டிய ஒரு செய்தி, மக்களுக்காகவே வாழ்ந்த அந்தத் தலைவரின் எளிமைதான்.
ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகச் சென்ற முதலமைச்சர் காமராஜர் ஜீவாவையும் தம்முடன் அழைத்துச் செல்ல விரும்பி, ஒரு குடிசையில் வாழ்ந்து கொண்டிருந்த அந்தத் தலைவரைப் பார்க்கச் சென்றார். நிகழ்ச்சிக்கு வர ஒப்புக்கொண்ட ஜீவா முதலமைச்சர் காமராஜர் காத்திருக்க, தம்மிடமிருந்த ஒற்றை வேட்டியைத் துவைத்துக் காய வைத்துக் கொண்டிருந்தார் என்ற ஒரு செய்தியைப் பலரும் பதிவு செய்துள்ளனர்.
காமராஜர் மறைந்த போது அவரிடமிருந்த சொத்து அவரது சட்டைப்பையில் இருந்த நூற்றைம்பது ரூபாய் மட்டுமே! நூறு கோடி ரூபாய் பங்குத் தொகையாகப் பெற்ற கருணாநிதி, தி.நகரில் திருமலைப்பிள்ளை சாலையில் காமராஜர் வசித்திருந்த எட்டாம் எண் வாடகை வீட்டின் படத்தை போட்டு "ஏழைப்பங்காளர் வாழும் பங்களா" என விளம்பரப்படுத்தி மகிழ்ந்தவர்.
இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957 வரையும், 1957 முதல் 1967 வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பணியாற்றிய கக்கன் மிக எளிமையாகவே வாழ்ந்தார்.
ஒன்பது ஆண்டுகள் அமைச்சராகப் பணியாற்றிய கக்கன் அரசுப் பேருந்தில்தான் எங்கும் செல்வார். கக்கன் மதுரையில் அரசுப் பொது மருத்துவ மனையில் சிகிச்சைக்குச் சேர்ந்த அவருக்குப் படுக்கை கூட வழங்கப்படாமல் தரையில் படுக்க வைக்கப் பட்டிருந்தார். அவருக்கு வீடு கூட இல்லை. இறுதிக்காலத்தில் 1979 ஆம் ஆண்டில் அரசு வழங்கிய வீட்டில் வாழ்ந்து மறைந்தார்.
ஜீவா, கக்கன், காமராஜர் போன்றோரெல்லாம் கடந்த நூற்றாண்டிலோ கற்காலத்திலோ வாழ்ந்த மனிதர்களல்லர். கருணாநிதி பார்த்து, விமர்சித்து, இழித்து, பழித்து, புகழ்ந்து, பாராட்டியவர்களே!
இவர்கள் மட்டுமல்லர்.! திரிபுராவில் முதலமைச்சராக இருந்த மார்க்ஸிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிருபேந் சக்கரவர்த்தி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகும்போது இரண்டு டிரங்குப் பெட்டிகளுடன் கட்சி அலுவலகத்தில் குடியேறினார். அந்தப் பெட்டிகளில் இருந்தது சில மாற்றுத் துணிகளும் புத்தகங்களும் மட்டுமே.
அதே திரிபுராவில் முதலமைச்சராக இருக்கும் மார்க்ஸிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மானிக் சர்க்காருக்கும் சொந்த வீடு இல்லை; நிலம் இல்லை; வாகனம் இல்லை. அவர் பதவியேற்கும் போது வங்கி இருப்பு 13,920 ரூபாய் மட்டுமே. முதலமைசருக்கான சம்பளமாக அரசு தரும் 9,200 ரூபாயையும் படியாகத் தரும் 1,200 ரூபாயையும் மற்ற மார்க்ஸிஸ்ட் உறுப்பினர்களைபோலவே கட்சிக்கு வழங்கி விட்டுக் கட்சி தரும் உதவித் தொகையில் வாழ்கிறார்.தம் மனைவியுடன் வெளியே சென்றால் அரசு வாகனத்தைப் பயன்படுத் துவதில்லை; ரிக்ஷாவிலேயே அழைத்துச் செல்வார். அரசு நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது மத்திய அரசு ஊழியரான அவரது மனைவியும் அதே நிகழ்ச்சியில் பங்கெடுத்தால் மட்டும் அரசு வாகனத்தில் அழைத்துச் செல்வார்.
அப்படி ஓர் எளிமை.
மும்முறை கேரள முதலமைச்சராக இருந்து இப்போது மத்தியில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் எளிமைக்குப் பெயர் பெற்ற ஏ.கே அந்தோனியின் பெயரில் வீடோ வாகனமோ இல்லை. வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றும் அவரது மனைவி எலிஸபத்தின் வருவாயில் வாங்கப்பட்ட வீடு அவரின் பெயரில் உள்ளது.
மற்ற மாநில முதல்வர்களை விடவும் வசதி குறைந்த வீட்டிலேயே தாம் வாழ்வதாக தம் அறிக்கையில் கருணாநிதி கூறியிருந்தார். அரசு வீடுகளில் அமைச்சர்கள் வசித்தால் அவ்வீடுகள் பெரிதாகத்தான் இருக்கும். அதில் பிறரைக் குறை காண இடம் இல்லை. தாம் சொந்த வீட்டில் வசிப்பதாகக் கருணாநிதி கூறி இருப்பதிலும் அவருக்குப் பெருமை இல்லை. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் முதல்வர்களாக இருந்தபோதும் அவர்களின் சொந்த வீடுகளில்தாம் வசித்தனர்.

தாம் செய்யும் தியாகமாக இதைக் கூறும் கருணாநிதி, தம் சமகாலத்தில் அரசியலில் சந்தித்த ஜீவா, கக்கன், காமராஜர், நிருபேந் சக்கரவர்த்தி, மானிக் சர்க்கார், ஏ.கே அந்தோனி ஆகியோரின் வாழ்க்கையைத் தம்மோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நிச்சயம் வெட்கப்பட வேண்டியிருக்கும்.