அமெரிக்க பயங்கரவாதத்தின் மற்றுமொரு பதிவு என்றஆக்கம் அதனுடன் கூடிய The investigative organization WikiLeaks என்ற அமைப்பு வெளிப்படுத்திய வீடியோ காட்சிகளையும் மீள் பதிவு செய்கின்றோம் -முழுமையான வீடியோ
அமெரிக்கா பயங்கரவாதம் நடத்தி வரும் கொலை வெறியாட்டதில் பல இலச்சம் ஈராக் முஸ்லிம் மக்கள் படுகொலை ஆனார்கள் அவற்றுக்கு பதிவுகள் மிகவும் அரிது பதிவுகள் இருந்தாலும் அவற்றில் சிலது மட்டும்தான் வெளிவருவது உண்டு .
சில தினங்களுக்கு முன்னர் இரண்டு ஊடகவிலாளர்கள், சிறுவர்கள் , சிறுமிகள் , பெண்கள் , என்று 25 வரையிலான பொது மக்களை அமெரிக்க இராணுவ அப்பாச்சி ஹெலி கொப்டர்கள் சுட்டும், குண்டுவீசியும் கொலைசெய்யும் வீடியோ காட்சிகள் வெளிவந்துள்ளன இந்த வீடியோ காட்சிகள் எந்த பதிவும் இல்லாத இலச்ச கணக்கான் ஈராக் மக்கள் படுகொலையை மீண்டும் ஒரு முறை உலகிக்கு நினைவூட்டி வழமை போன்று .”This is shocking News” என்ற மேற்கின் வார்த்தைகளை மீடியாக்களில் உலா வர மட்டும் செய்துள்ளது விரிவாக பார்க்க Video
The investigative organization WikiLeaks என்ற அமைப்பு இந்த வீடியோ காட்சிகளை வெளிட்டுள்ளது இந்த அமைப்பு , இந்த தாக்குதல் சம்பவங்களில் கொல்லப்பட்ட அனைவரும் ஆயுதம் ஏந்தாத பொது மக்கள் என்றும் இதில் இருவர் Ruter ரின் ஊடகவிலாளர்கள் இவர்கள் வைத்திருந்த கமாராக்கள் , மற்றும் அதற்கு வேண்டிய ஸ்டான்ட் போன்ற வற்றை AK 47 ரக துப்பாகிகள் மற்றும் RBG ரக ஏவுகனைகள் என்று கூறும் அமெரிக்கா இராணுவம் 25 பொது மக்களை கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றது
இந்த தாக்குதல் படுகொலை பாக்தாத் நகரில் 2007 ஆண்டில் நடைபெற்றவை இதில் இரண்டு அப்பாச்சி ஹெலி கொப்டர்கள் பயன்படுத்த பட்டுள்ளது என்பதுடன் மூன்று விடியோ பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த சம்பவம் 2007 ஆண்டில் நடைபெற்ற போது 9 பயங்கரவாதிகளும் தவறுதலாக இரண்டு செய்தியாளர்களும் கொல்லப்பட்டதாக கூறி உண்மைகளை மறைத்தது அமெரிக்கா .இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட அனைவரும் பயங்கரவாதிகள் என்று கூறியிருக்கும் அனால் ஊடக துறை அதிலும் Ruter செய்தியளர்கள் என்பதால் அமெரிக்காவால் அதை மட்டும் அன்று மறைக்க முடியவில்லை – வீடியோ காட்சிகளை முழுமையாக பார்க்கவும்