கடந்த மே-17 ந் தேதி, இந்தியாவை இஸ்லாம் ஆள வேண்டும்! என்ற பெயரில் பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களுடனான ஒரு நேர்காணல் சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியாகி வாசகர்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 2010 டிசம்பர் 20ஆம் தேதி கத்தருக்கு வருகை தந்திருந்த பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களை சத்தியமார்க்கம்.காம் பிரதிநிதிகள் சந்தித்தனர். அந்தச் சந்திப்பினூடாக அனைவருக்கும் பயன் தரத்தக்க ஐந்து கேள்விகளை அவர்முன் வைத்தோம். அவற்றை சத்தியமார்க்கம்.காம் தள வாசகர்களுக்காக இங்கே அளிப்பதில் மகிழ்கிறோம். 1) "இறைவன் இல்லை" எனும் நாத்திகர்கள், பாதிக் கலிமாவை மொழிந்தவர்கள். இவர்களுக்கு "அல்லாஹ்வைத் தவிர" என்ற கூடுதல் அறிவைக் கொடுப்பது எளிது என்று டாக்டர் ஜாகி நாயக் போன்ற அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த அடிப்படையில் தங்களின் நண்பர்களான பெரியார்வழித் தோழர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய தெளிவினைத் தர மேற்கொண்டு வரும் முயற்சிகள் என்ன?
2) பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ள நீங்கள், அவற்றை எவ்வாறு இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு சாதகமாக பயன் படுத்த நாடியுள்ளீர்கள்? 3) பிரபல வரலாற்று நூலாசிரியர் Haykal அவர்களின் "முஹம்மது நபி(ஸல்)" நூலை மொழியாக்கம் செய்ய உள்ளதாகத் தாங்கள் கூறியிருந்தீர்கள், அதைப் பற்றியும் தாங்கள் வெளியிட நாடியுள்ள இதர நூல்களையும் பற்றிய விபரங்கள் யாவை? 4 ) சில அமைப்புகளின் அழைப்பை ஏற்று, தாங்கள் பேசும்போது விரும்பியோ விரும்பாமலோ "நீங்கள் ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சார்ந்தவர்" என்று மற்றொரு அமைப்பினரால் கருத்து வெளியிடப்படுவதைப் பற்றி தங்கள் பதில் என்ன?
5) ஒற்றுமை பற்றிய இறை வழிகாட்டல்கள் தெளிவாக உள்ள இஸ்லாத்தைப் பின்பற்றும் சகோதரர்கள்கூட, கிறித்துவ மற்றும் இதர சங்பரிவாரங்கள்போல் ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாகச் செயல்பட இயலாத நிலை பற்றித் தங்கள் கருத்து மற்றும் ஆலோசனை என்ன? நான் எந்த ஒரு இயக்கத்தையோ அமைப்பையோ சார்ந்தவனல்ல... - பேரா. அப்துல்லாஹ் நேர்காணல்! |
தற்போதைய பதிவுகள்
Wednesday, January 5, 2011
நான் யுனிவர்ஸல் தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்தவன்... - பேரா. அப்துல்லாஹ் கலகலப்பு நேர்காணல் (வீடியோ)
Posted by
I.N.T.J
,
at
6:19 AM
Subscribe to:
Post Comments (Atom)
assalamu alaikkum
ungal post nanraha ullathu yenathu valai manayilum (KALEELsms.com)
yetuthu payan payuthuhiren nanri natu nilai seythiyai mattume veliyituhiren