திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Wednesday, January 5, 2011

நான் யுனிவர்ஸல் தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்தவன்... - பேரா. அப்துல்லாஹ் கலகலப்பு நேர்காணல் (வீடியோ)

,


டந்த மே-17 ந் தேதி, இந்தியாவை இஸ்லாம் ஆள வேண்டும்! என்ற பெயரில் பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களுடனான ஒரு நேர்காணல் சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியாகி வாசகர்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 2010 டிசம்பர் 20ஆம் தேதி கத்தருக்கு வருகை தந்திருந்த பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களை சத்தியமார்க்கம்.காம் பிரதிநிதிகள் சந்தித்தனர்.

அந்தச் சந்திப்பினூடாக அனைவருக்கும் பயன் தரத்தக்க ஐந்து கேள்விகளை அவர்முன் வைத்தோம். அவற்றை சத்தியமார்க்கம்.காம் தள வாசகர்களுக்காக இங்கே அளிப்பதில் மகிழ்கிறோம்.

1) "இறைவன் இல்லை" எனும் நாத்திகர்கள், பாதிக் கலிமாவை மொழிந்தவர்கள். இவர்களுக்கு "அல்லாஹ்வைத் தவிர" என்ற கூடுதல் அறிவைக் கொடுப்பது எளிது என்று டாக்டர் ஜாகி நாயக் போன்ற அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த அடிப்படையில் தங்களின் நண்பர்களான பெரியார்வழித் தோழர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய தெளிவினைத் தர மேற்கொண்டு வரும் முயற்சிகள் என்ன?

"ஏர்போர்ட்டில் என்னைக் கொலை செய்யும் எண்ணத்துடன் ஹிந்துத்துவா இயக்கங்கள் ஒற்றுமையாக வந்திருக்கிறார்கள்... என்னை வரவேற்க முஸ்லிம் அமைப்புகள் தனித்தனியாக வந்திருக்கிறீர்களே?" - பேரா. அப்துல்லாஹ்
2) பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ள நீங்கள், அவற்றை எவ்வாறு இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு சாதகமாக பயன் படுத்த நாடியுள்ளீர்கள்?

3) பிரபல வரலாற்று நூலாசிரியர் Haykal அவர்களின் "முஹம்மது நபி(ஸல்)" நூலை மொழியாக்கம் செய்ய உள்ளதாகத் தாங்கள் கூறியிருந்தீர்கள், அதைப் பற்றியும் தாங்கள் வெளியிட நாடியுள்ள இதர நூல்களையும் பற்றிய விபரங்கள் யாவை?

4 ) சில அமைப்புகளின் அழைப்பை ஏற்று, தாங்கள் பேசும்போது விரும்பியோ விரும்பாமலோ "நீங்கள் ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சார்ந்தவர்" என்று மற்றொரு அமைப்பினரால் கருத்து வெளியிடப்படுவதைப் பற்றி தங்கள் பதில் என்ன?
"I never associate with any association... I dont dissociate from any muslims" - Prof. Abdullah
5) ஒற்றுமை பற்றிய இறை வழிகாட்டல்கள் தெளிவாக உள்ள இஸ்லாத்தைப் பின்பற்றும் சகோதரர்கள்கூட, கிறித்துவ மற்றும் இதர சங்பரிவாரங்கள்போல் ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாகச் செயல்பட இயலாத நிலை பற்றித் தங்கள் கருத்து மற்றும் ஆலோசனை என்ன?

நான் எந்த ஒரு இயக்கத்தையோ அமைப்பையோ சார்ந்தவனல்ல... - பேரா. அப்துல்லாஹ் நேர்காணல்!

மனித குலத்திற்கு வழிகாட்ட வேண்டி இறைவன் வழங்கிய இஸ்லாம், நடுநிலையாக வாசகர்கள் பார்வைக்குச் சென்றடைவதோடு முழுமனித சமுதாயமும் இறைவன் வழங்கிய சத்திய மார்க்கத்தை மனப் பூர்வமாக உணர்ந்து, ஏற்றுவாழ வேண்டும்; நிலையற்ற இம்மை வாழ்க்கையிலும் நிலையான மறுமை வாழ்கையிலும் வெற்றியும் ஈடேற்றமும் பெற வேண்டும் என்ற தூய எண்ணத்தின் அடிப்படையில் சத்தியத்தைப் பாரபட்சமின்றி, எவ்வித சார்புமின்றி, சத்தியமார்க்கம்.காம் மூலம் ஆக்கங்களாகவும் நேர்காணல்களாகவும் வழங்கி வருகிறோம். இதிலுள்ள குறைகள் இருப்பின் எங்களுக்குத் தெரியப்படுத்தி நெறிப்படுத்துங்கள். நிறைகளை உங்கள் உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். -நன்றி  சத்தியமார்க்கம்.காம்

1 comments:

  • January 5, 2011 at 2:12 PM
    Anonymous says:

    assalamu alaikkum
    ungal post nanraha ullathu yenathu valai manayilum (KALEELsms.com)
    yetuthu payan payuthuhiren nanri natu nilai seythiyai mattume veliyituhiren

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates