திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Sunday, January 30, 2011

ஐஎன்டிஜே கோரிக்கையை முதல்வர் ஏற்றார்

,
(கடிதத்தை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும் http://4.bp.blogspot.com/_m25dsPmYwkI/TUQ_WmSVkHI/AAAAAAAAAMk/p0v-Acng4l4/s1600/Page+3.jpg

தமிழக அரசு முஸ்லிம்களுக்கு வழங்கிய 3.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு அதிகாரிகள் செய்த குளறுபடிகளால் முஸ்லிம்களுக்கு உரிய பயன்கள் கிடைக்காமல் இருந்து வந்தது. தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் முலம் வேலை வாய்ப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கூட முஸ்லிம்கள் தங்களுக்குரிய இட ஒதுக்கீட்டின் பங்கை இழந்திருக்கின்றனர். இவற்றையெல்லாம் சரி செய்து முஸ்லிம்களுக்குக் கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டின் பயன்கள் முறையாகவும், முழுமையாகவும் கிடைக்க வழி வகை காண வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பலமுறை தமிழக அரசுக்கு சுட்டிக் காட்டியது. சமுதாய மக்கள் ரிப்போர்ட் இதழிலும் இது குறித்த செய்திகள் வெளியிடப்பட்டன. (பார்க்க செய்தி http://2.bp.blogspot.com/_m25dsPmYwkI/TTpveIqYigI/AAAAAAAAAJs/TrAqxRFxmoo/s1600/Page+16.jpg

இந்நிலையில் கடந்த ஜனவரி முதல் வாரத்தில் தமிழக முதல்வருக்கு ஐஎன்டிஜே தலைவர் எஸ்.எம். பாக்கர் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், 'தங்களுடைய ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத தனி இட ஒதுக்கீட்டிற்கான சட்டம் இயற்றி அதனை நடைமுறைப்படுத்தினீர்கள். ஆனால் தாங்கள் சட்டமாக்கிய 3.5 சதவீத தனி இட ஒதுக்கீடு முழுமையாக கிடைக்கிறதா என்ற சந்தேகம் சமுதாய மக்கள் மனதில் உள்ளது. நீண்ட நெடுங்காலமாக போராடிப் பெற்ற இட ஒதுக்கீடு முழுமையாக கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் சமுதாய இளைஞர்களிடையோயும் பரவி வருகிறது.

ஆகவே அண்மையில் அருந்ததியினர் சமுதாயத்தினருக்கு அளிக்கப்பட்ட தனி இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்படுகிறதா என கண்காணிக்கும் வகையில் தலைமைச் செயலாளர் தலைமையில் செயல்முறை ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதே போன்று முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 3.5 சதவீத தனி இட ஒதுக்கீடு முழுமையாக அமுல்படுத்தப்படுகிறதா? அதன் பயன்கள் முஸ்லிம் சமுதாயத்திற்கு கிடைக்கிறதா என்பதையும் கண்காணிக்கும் வகையில் செயல்முறை ஆய்வுக்குழு அமைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன். 

மேலும் முஸ்லிம்களுக்குகென தனி இட ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்ட பிறகு அளிக்கப்பட்ட அரசு வேலை வாய்ப்புகளில் 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது குறித்து வெள்ளை அறிக்கையினை 'இந்திய தவ்ஹீத் ஜமாஅத்' மற்றும் முஸ்லிம் சமுதாயத்தின் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்.' என்று குறிப்பிட்டிருந்தார்.  இது குறித்து முன்னணி பத்திரிகைகளிலும் இச்செய்தி வெளியாகி இருந்தது. 

இதனைத் தொடர்ந்து முதல்வரின் தனிச் செயலாளர் சண்முகநாதனை தொடர்பு கொண்டு முதல்வருக்கு எழுதிய கடிதம் குறித்து பேசிய இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைத் தலைவர் முஹம்மது முனீரிடம், ''உங்கள் கடிதத்தை முதல்வர் பார்வையிட்டார். நல்ல முடிவு வரும்...'' என்று சண்முகநாதன் தெரிவித்திருந்தார். இந்தச் செய்தியை ஜனவரி 21-27 சமுதாய மக்கள் ரிப்போர்ட்டரில் ‘ஹைலைட்' செய்திருந்தோம். (பார்க்க செய்தி http://4.bp.blogspot.com/_m25dsPmYwkI/TUKGWwzf8uI/AAAAAAAAAME/ZHNPxciBUHU/s1600/Page+8+%2526+9.jpg

இந்நிலையில் கடந்த 28-01-2011 அன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு முறையாக சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மாலதி தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐஎன்டிஜேவின் கோரிக்கையை ஏற்று கண்காணிப்பு குழுவை அமைத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளை முஸ்லிம்களின் 3.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்த வெள்ளை அறிக்கையும் வெளியிட வேண்டும் என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது                                                இஸ்லாமிய இடஒதுக்கீட்டு நடைமுறையைக் கண்காணிக்க குழு


சென்னை, ஜன.29- இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டு நடைமுறையைக் கண்காணிக்க தலைமைச் செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:இஸ்லாமிய சமுதாயத்தினரின் முன்னேற்றம் கருதி அவர்களுக்கு 3.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி முதல்வர் கருணாநிதி 15.9.2007 அன்று ஆணையிட்டு, நடைமுறைப்படுத்திவரும் இடஒதுக்கீட்டின்படி, இஸ்லாமிய சமுதாயத்தினர் தமிழக அரசின் கல்வி நிறுவனங்களிலும், வேலைவாய்ப்புகளிலும் உரிய இடங்களைப் பெற்றுப் பயனடைந்து வருகின்றனர்.  இந்த 3.5 சதவீத இடஒதுக்கீட்டின் செயல்பாட்டினைத் தொடர்ந்து கண்காணித்து, ஆய்வு செய்வதற்காகவும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்வதற்காகவும், தமிழக அரசின் தலைமைச் செயலாளரைத் தலைவராகவும், பிற்படுத்தப்பட்டோர்-மிகப் பிற்படுத்தப்பட்டோர்-சீர்மரபினர்-சிறுபான்மையினர் நலத்துறைச் செயலாளரை செயல் உறுப்பினராகவும், உள்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் செயலாளர், ஆசிரியர் தேர்வாணையக் குழுத் தலைவர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர், சிறுபான்மையினர் நல ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட குழு ஒன்றை அமைத்து முதல்வர் கருணாநிதி இன்று (29.1.2011) ஆணையிட்டுள்ளார். இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments to “ஐஎன்டிஜே கோரிக்கையை முதல்வர் ஏற்றார்”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates