விவரிப்புக்களுக்கு அவசியமற்ற இப்படங்கள் பாலஸ்தீன தேசத்தில் இராணுவத்தின் கொடுமைகளுக்குள்ளாகும் அப்பாவி ஆன்மாக்களின் வலியுணர்த்துபவன. இப் புனித நாட்களிலும் என்றும் உங்கள் பிரார்த்தனைகளில் அநீதியிழைக்கப்படும் இவர்களும் இருக்கட்டும் !
கொலை செய்யப்பட்டவன் இலக்கம் 18.
ஓலிவம் தோட்டம் ஒரு முறை பசுமையாக இருந்தது.
இருந்தது… வானம்
நீலத்தோட்டமாக… இருந்தது என் நண்பனே
இந்த மாலைப் பொழுதை மாற்றியது எது?
பாதையின் வளைவில் வைத்து தொழிலாளரின் வண்டியை நிறுத்தினர்.
அவர்கள் அமைதியாக இருந்தனர்.
கிழக்கு நோக்கி எம்மைத்திருப்பினார்கள்…
அவர்கள் அமைதியாய் இருந்தனர்.
என் உள்ளம் ஒரு முறை நீலச் சிட்டாக இருந்தது…
என் நண்பனின் கூடே
உனது கைக்குட்டைகள் என்னிடமிருக்கின்றன.
எல்லாமே வெள்ளையாக இருந்தன நண்பனே.
இந்த மாலைப்பொழுதை மாசு படுத்தியது எது?
என் நண்பனே எனக்கு எதுவும் விளங்கவில்லை!
அவர்கள் பாதையின் நடுவில் வைத்து தொழிலாளர் வண்டியை நிறுத்தினர்.
அவர்கள் அமைதியாய் இருந்தனர்.
அவர்கள் கிழக்கு நோக்கி எம்மைத் திருப்பினார்கள்…
அவர்கள் அமைதியாய் இருந்தனர்.
என்னிடமிருந்து உனக்கு எல்லாம் உண்டு.
உனக்கு நிழல் உண்டு.
உனக்கு ஒளி உண்டு.
திருமண மோதிரம், இன்னும் நீ விரும்பியவை,
ஒலிவம், அத்தி மரங்கள் கொண்ட வீட்டுக்கருகிலுள்ள தோட்டமும்
ஒவ்வொரு இரவிலும் போல நான் உன்னிடம் வருவேன்.
சாளரம் ஊடாக நுழைவேன்… கனவில் உனக்கு எறிவேன்.
நான் சற்றுப் பிரிந்தால் என்னைத் தூற்றாதே.
அவர்கள் என்னைச் சுற்றி வளைத்தனர்.
ஒலிவம் தோட்டம் எப்போதும் பசுமையாக இருந்தது.
என் நண்பனே இருந்தது.
ஐம்பது பலிகள்
அத்தனை பேரையும் அஸ்தமணத்தில் ஆக்கிவிட்டன.
செந்நிறக் குட்டையில் ஐம்பது சடலங்கள்
என் நண்பனே…
எனனைக் குறை கூறாதே…
அவர்கள் என்னைக் கொள்கிறார்கள்.
(பாலஸ்தீனக் கவிஞர் மஹ்மூத் தர்வீஷின் 'இரவின் இறுதி: 1967' நூலிலிருந்து, தமிழில் - ஏபிஎம்.இத்ரீஸ்)
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை