திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Thursday, January 27, 2011

அபுதாபி : சூரிய சக்தி மூலம்

,
கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்

அபுதாபி, ஜன.20-  கடல் நீரை சூரியஒளி எரிசக்தி மூலம் குடிநீராக்கும் புதிய திட்டத்தினை அய்க்கிய அரபு எமிரேட் முயற்சி செய்து வருகிறது.

இதற்காக 30 இடங்களை நாடு முழுவதும் தேர்வு செய்து முதற்கட்ட பரிசோதனை நடத்தவுள்ளது. வளைகுடா நாடான அய்க்கிய அரபு எமிரேட் நாட்டின் தலைநகரிலுள்ள அபுதாபி சுற்றுச்சூழல் மேம்பாட்டு ஆணையம் , கடல் நீரை சூரிய ஒளி மூலம் சுத்திகரிப்பு செய்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா என ஆய்வு செய்து வருகிறது.

இதன் மூலம் கரியமிலவாயு வெளியேறாமல் தடுப்பது, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இந்த திட்டம் நிறைவேற்றுவது உள்ளிட்ட அம்சங்களை பரிசீலனை செய்து வருகிறது.  முதற்கட்டமாக நாடு முழுவதும் 30 இடங்களை தேர்வு செய்து சோதனை அடிப்படையில் பயன்படுத்தவும் உள்ளது.

மேலும் இந்த திட்டத்தினால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் பாதிப்புகள் குறித்தும், அதனை சமாளிக்க வேண்டி நடவடிக் கைகள் குறித்தும் ஆய்வு செய்து வருவதாகவும் ஹமீம், மற்றும் சுவையாஹ் ஆகிய இரு நகரங்களில் இதற்கான பூர்வாங்க பணிகளில் தொடங்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments to “அபுதாபி : சூரிய சக்தி மூலம்”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates