வேளச்சேரி, தரமணி, மடுவங்கரை பகுதி மக்களின் பல வருட கோரிக்கையான அடக்கஸ்தல கோரிக்கையை கண்டு கொள்ளாமல் 'நாய்களை புதைக்க நகரின் மத்தியில் இடம் வழங்கிய' மாநகராட்சி மற்றும் தி.மு.க.மேயரை கண்டித்து இந்திய தவ்ஹித் ஜமாஅத் சார்பில் நேற்று (28.01.2011) மாபெரும் ஆர்பாட்டம் நடை பெற்றது!
சமுதயாத்திற்கு ஒன்று என்றால் முதலில் களமிறங்கும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் போர்க்குணம் மிக்க நிர்வாகிகள், எதையும் வித்தியாசமான கோணத்தில் கையில் எடுத்து இறையருளால் தொடர்ந்து வெற்றியும் பெற்று வருகிறார்கள். நேற்றைய தினம் வேளச்ரியில் நடந்த இந்த நூதனப் போராட்டத்தை சந்தூக்கு ஏந்திய போராட்டமாக அறிவித்து சந்தூக்குகளோடு வந்து குவிந்தனர்.
வேளச்சேரி மாநகராட்சி முற்றுகை என்றதும் அனுமதி மறுத்த காவல்துறை அனுமதி மறுத்து உணர்ச்சி மிகு பிரச்னை என்பதால் அசம்பாவிதங்கள் நிகழா வண்ணம் காவல் துறையினரின் படை குவிக்கப்பட்டு பத்திற்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் இருந்தும் ஆய்வாளர் உள்பட அனைவரும் குவிந்திருந்தனர்.
இறுதியாக பேசிய தலைவர் S.M..பாக்கர் இருபத்தோராம் நூற்றாண்டிலும் இறந்தவர்களை அடக்க இடம் கேட்டு போராடுவது தமிழக அரசுக்கே அவமானம் என்றார். இந்த நிலை நீடித்தால் அடுத்த மய்யித்தை கோபாலபுரத்தில் அடக்குவோம் என அதிரடியாக கூறியபோது “அல்லாஹு அக்பர்” என்ற கோஷதத்துடன் ஆர்ப்பரித்தது மக்கள் கூட்டம் !
சந்தூக்கில் பிணக் கோலத்தில் ஏறி படுத்த ஒருவரை தடுத்தது! எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த உரிமை இல்லையா? என பொங்கி எழுந்த மக்களை கண்டு போலீஸ் அடங்கியது! ஆரம்பத்தில் கெடுபிடி செய்த காவல்துறை பின்னர் பணிந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கைது செய்து கொண்டு செல்ல வாகனமின்றி திணறியது .
சந்தூக்கையும் போலீஸ் வேனில் ஏற்றிய போது இந்திய வரலாறில் ஒரு சந்தூக்கு கைது செய்யப்படுவது முதல் முறை என கமென்ட் அடித்து கலகலப்பூட்டினார் .அருகில் உள்ள மாநகராட்சி மண்டபத்தில் ஆண்களும் பெண்களும், குழந்தைகளும் அடைக்கப்பட்ட உடன் , அதையும் வழக்கம் போல் மக்களுக்கு மார்க்கத்தை சொல்லும் இடமக்கினார் , மாநில பேச்சாளர் மசுதா ஆலிமா.
அஸர் மற்றும் மக்ரிப் தொழுகைகளை ஜமாஅத்தாக தொழுத போது, நம்முடைய தொழுகை அணிவகுப்பையும் தொழும் முறையையும் கட்டுப்பாடு மிக்க இராணுவத்தின் செயல்களாக வியந்து பார்த்தனர் காவல் துறையினர். மக்ரிப் தொழுகைக்குப் பின் அனைவரையும் விடுவித்தனர். அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் ஸித்தீக், அப்துல் ஹமீது, ஷிப்லி, இனாயதுல்லாஹ், முஹம்மது முஹைதீன், வேளச்சேரி சிராஜ் உள்ளிட்டவர்களுடன் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.