திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Friday, February 18, 2011

நாகூர் பிரச்னையில் தவ்ஹீத்வாதிகளின் ஒருங்கிணைப்பால் சமரத்திற்கு வந்த தர்காவாதி!

,
கடந்த சில நாட்களுக்கு முன் நாகூர் இ.த.ஜ. நகரத் தலைவரை தமிழக தர்கா பேரவை தலைவரும் தி.மு.க. பிரமுகருமான சச்சா முபாரக் ஆட்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தி விட்டு தாக்கப் பட்டவர்கள் மீதே தங்களின் அரசியல் பலத்தால் காவல்துறையை கொண்டு வழக்கு போட்டதும் நாம் அறிந்ததே.

இந்த நிலையில் நாகூரில் மீலாது எதிர்ப்பு பொது கூட்டத்திற்காக சென்றிருந்த மாநில பேச்சாளர் முஹம்மத் மைதீன்,  “நாளைக்குள் இந்த பிரச்சனைக்கு தீர்வில்லை என்றால் இன்ஷா அலலாஹ் தாக்கப் பட்டவன் மீதே வழக்கு பதிந்த காவல் துறை அலுவலகத்தை முற்றுகை என” அந்த பொதுக்கூட்டத்திலேயே காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்த எச்சரிக்கையை இயக்க பேதமின்றி 200கும் மேற்பட்ட ஏகத்துவ சகோதரர்கள் ஒன்று திரண்டு வரவேற்றனர்.


நிலைமை மோசமடைவதை அடுத்து, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர காவல்துறையினர் “சச்சா முபாரக்கிடம் வேறு வழியில்லை, நீங்கள் சமரசம் பேசி முடித்துக் கொள்ளுங்கள்! இல்லையெனில் நாங்கள் உங்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்” என எச்சரித்தனர். இதையடுத்து,  சச்சா முபாரக் நேரில் வந்து மன்னிப்பு கேட்டதோடு இனி எந்த வகையிலும் ஏகத்துவ பிரசாரத்துக்கு இடையூறு செய்ய மாட்டோம் என இருபது ருபாய் ஸ்டாம்ப் பேப்பரில் எழுதிக் கையெழுத்திட்டார்.





இணைவைப்பின் கோட்டையான   நாகூரில் இனி ஏகத்துவப் பிரசாரத்துக்கு இடையூறு செய்யமாட்டோம் !என தமிழக தர்கா  பேரவை தலைவர் எழுதிக் கையெழுத்திட்ட சம்பவம் இஸ்லாமிய வரலாறுகளை நினைவு படுத்தியது!ஏகத்துவ வாதிகள் ஒன்றிணைந்தால் எந்நாளும் வெற்றி என்பதை எடுத்து சொல்லியதோடு , எல்லோரோடும் இணக்கமாக இருப்போம் ! ஏகத்துவத்தில் உறுதியாக இருப்போம் ! எனும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அதை ஒருங்கிணைக்கும் சக்தியாக விளங்கும் என்பதை இச்சம்பவம் உறுதி படுத்தியது! எல்லாப் புகழும் இறைவனுக்கே!
-இப்னு ஹுஸைன்.

0 comments to “நாகூர் பிரச்னையில் தவ்ஹீத்வாதிகளின் ஒருங்கிணைப்பால் சமரத்திற்கு வந்த தர்காவாதி!”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates