இதயம் காப்போம், மனிதம் வளர்ப்போம் எனும் முழக்கத்தோடு மாவட்டந்தோறும் இலவச இருதய பரிசோதனை முகாம்களை நடத்தி வரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுவர் மாவட்டம் ஆவடி கிளை& மெட்ராஸ் மெடிக்கல் மிஷனுடன் இணைந்து ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பால்வாடியில் (மதீனா பள்ளிவாசல் அருகில்) நடத்திய இலவச இருதய பரிசோதனை முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
அனைத்து நிலைகளிலும் அழைப்புப் பணி என்ற இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாகிகள் இருதய பரிசோதனை முகாமையும் இஸ்லாத்தை பிற சமய மக்களுக்கு எடுத்து சொல்லும் அழைப்புப் பணிக்கான களமாக ஆக்கினர்.
தாவா டெஸ்க் அமைத்து கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டமுஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு குரான் தமிழாக்கம் வழங்கி குரானைப் பற்றிய அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து , ஆணகளுக்கும் பெண்களுக்கும், தனிதனி வகுப்புகள் நடத்தப்பட்டன.
நிகழ்ச்சியில் தலைவர் S.M.பாக்கர், துணைப் பொதுச் செயலாளர் இக்பால், மாநில செயலாளர் ஜாகிர் ஹுசைன். தஃவா செயலாளர் இனாயதுல்லாஹ் மாநில பேச்சாளர் ஆவடி பாருக் மற்றும் மாவட்ட கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
0
comments to “அழைப்பு பணியின் களமான ஆவடி இருதய பரிசோதனை முகாம்...”