திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Thursday, March 17, 2011

ஊனமுற்ற படைப்புக்கள்.....!!

,


ண்கள் இல்லாத போது பாலின் நிறத்தை கண்டுகொள்ள ஆர்வப்படுவது, காதுகள் இல்லாத போது காகத்தின் சத்தத்தை கேட்கத்துடிப்பது, கைகள் இல்லாத போது கடலில் நீந்திப் பார்க்க ஆசைப்படுவது எல்லாமே இயல்புதான்.

இருப்பவர்கள் இருப்பதைக் கொண்டு ஒரு நாளும் திருப்திப்படுவதுமில்லை, அதற்கு நன்றி செலுத்துவதுமில்லை.

ஊனமுற்றுப் பிறப்பவர்களும் இருக்கிறார்கள், பிறந்தபின் ஊனமாகுபவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் ஊனமுற்ற எல்லோறும் அதை ஒரு சாட்டாக வைத்து அமைதியாக ஒதுங்குவதுமில்லை.

தன்னால் ஏதாவது சாதிக்கமுடியுமா என தனக்குள் கேள்வி கேட்டுக்கொண்டு முயற்xசிப்பவர்கள் சாதிக்கிறார்கள்.

உண்மையில் மனிதர்கள் செய்யும் சில தவறுகள், குற்றங்கள் காரணமாக ஏனைய சில மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

அது கூட ஊனமுற்றவர்கள் பிரப்பதற்கு ஒரு காரணம்.

இரண்டாம் உலக மகா யுத்த்த்தில் போது ஜப்பான் நாகசாய், நிரோசிமா நகரங்களில் நடந்த அனு ஆயுத தாக்குதல் காரணமாக இன்றும் பல குழந்தைகள் அந்த நாட்டில் ஊனமுற்றவர்களாக பிறக்கிறார்கள்.

ஊனமுற்ற படைப்புக்களில் மரணத்திற்கு பின்னுல் மனிதர்கள் எழுப்பப்டுவதற்கான நியாயம் நிறூபிக்கப்படுகிறது.

மனிதர்கள் குறைபாடுகளுடன் பிறப்பதற்கு நாம் அறியாத, அல்லாஹ் நாடுகிற அவன் திட்டமிட்டுள்ள பல காரணங்கள் இருக்கலாம்.

அதனை விளங்கி நாம் ஒவ்வொருவரும் அல்லாஹ்விடத்தில் நமது ஆரோக்கியத்த்றிகாக பிரார்த்திக்க வேண்டும்.

அல்லாஹ்வே மறைவானவற்றை அறியக்கூடியவன்.
  நன்றி:changesdo

0 comments to “ஊனமுற்ற படைப்புக்கள்.....!!”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates