ஒசாமா பின்லேடன் அமெரிக்காவால் சுட்டு கொல்லப்பட்டான். இருந்தபோதும் இந்த இயக்கத்தில் பின்லேடனுடன் இயக்க செயல்பாடுகளில் உதவியாக இருந்தவர்கள் பற்றிய சில விவரங்கள்:-
1) அபு யஹ்யா அல்-லிபி:
அல்கொய்தா இயக்கத்தில் ஜிஹாத் என்னும் புனித போரில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தான். பின்லேடனுடன் அதிகமாக தொடர்பு கொண்டவன். பல வீடியோ காட்சிகளில் தோன்றி அல்கொய்தா இயக்கத்திற்கு ஆதரவு திரட்டியுள்ளான். தனது 40 வயதில் இவ்வியக்கத்தின் செயல்பாடுகளில் அதிக ஈடுபாடு கொண்டு இருந்தான். தற்போது அவன் இருப்பிடம் தெரியவில்லை.
அல்-கொய்தா இயக்க தலைவர் பின்லேடன் அமெரிக்க படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டார். இந்த தீர செயலை அமெரிக்காவின் சீல் (எஸ்.ஈ.ஏ.எல்.) டீம் சிக்ஸ் ஆனது திறம்பட செய்துள்ளது. கடந்த 1980-ஆம் ஆண்டு டெஹ்ரானில் அமைந்த அமெரிக்க தூதரகத்தில் பிணைக்கைதியாக இருந்த 52 அமெரிக்கர்களை மீட்பதற்காக இந்த கமாண்டோ படை அமைக்கப்பட்டது. சீல் என்ற வார்த்தையில் எஸ்.ஈ. ஆனது கடலையும், ஏ-காற்றையும், எல்-நிலத்தையும் குறிக்கும். அதாவது இந்த வீரர்கள் அனைவருமே கடல், வான், தரை என மூன்று பகுதியிலும் போரிடும் திறமை வாய்ந்தவர்கள். பெரும்பாலானோர் ஒன்றிற்கு மேற்பட்ட பன்னாட்டு மொழிகளில் புலமை பெற்றவர்கள். மேலும், எந்த சூழ்நிலையையும் கையாள தெரிந்தவர்கள். கடுமையான பயிற்சிகள் பெற்ற இக்குழுவினர் பின்லேடனை சுமார் 40 நிமிடத்தில் அவனது இருப்பிடத்தில் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி சுட்டு வீழ்த்தியுள்ளனர். ஹாலிவுட் திரைப்படங்களில் 'பிளாக் ஆப்பரேடிவ்ஸ்' என்ற பெயர் இவர்களை குறிக்கும்
பின்லேடன் கொல்லப்பட்டது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல்கள்:
மனைவி மற்றும் 12 வயது மகள் கண் எதிரே ஒசாமா பின்லேடன் தலை மற்றும் மார்பில் சுட்டு கொல்லப்பட்டார்;
பின்லேடன் நிராயுதபாணியாக இருந்தார்;
பின் லேடனுக்கு பாதுகாப்பாக நின்ற பெண் சுடப்பட்டார் ஆனால் கொல்லப்படவில்லை;
பின் லேடனுக்கு அரணாக நின்ற பெண் அவரது மனைவியல்ல;
ஆப்கானிஸ்தானிலிருந்து, அமெரிக்க படைகள் வெளியேறுவதில் பிரச்சனையில்லை.
பின்லேடனுக்கு மிகவும் பிடித்தமான அவரது மனைவி மற்றும் 12 வயது மகள் கண்ணெதிரேயே அவர் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டார். அவர்கள் இருவரும் தான் பின்லேடனின் உடலை அமெரிக்க படையினருக்கு அடையாளம் காட்டியவர்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
27 வயது அமல் அல் சடாஹ் என்பவர் தான் பின் லேடனின் இளம் மனைவி. இவர் ஏமன் நாட்டை சேர்ந்தவர். பாதுகாப்பு காரணங்களுக்காக இவரை ஏமனிலேயே இருக்கும்படி பின் லேடன் உத்தரவிட்டிருந்தார். இருப்பினும், இவர் பின் லேடனை பிரியாமல் அவருடனேயே இருந்தார். இவர் காலில் சுடப்பட்டார். உயிருக்கு ஆபத்தில்லை.
சுட்டுக்கொல்லப்பட்ட போது, பின் லேடன் ஏ கே 47 ரக துப்பாக்கி வைத்திருந்ததாகவும் தனது மனைவியை மனித கேடயமாக பயன்படுத்தியதாகவும் அமெரிக்க அதிகாரிகள் முதலில் தெரிவித்திருந்தனர்.
ஆனால், சுட்டுக்கொல்லப்பட்ட போது பின் லேடன் ஆயுதம் ஏதும் வைத்திருக்கவில்லை என்று நேற்றிரவு அமெரிக்க கடற்படை அதிகாரிகள் கூறியுள்ளனர். அதேபோல், மகன் மற்றும் மனைவியும் கொல்லப்பட்டனர் என்ற முரண்பட்ட தகவல்களை அமெரிக்க முதலில் தெரிவித்தது. தற்போது மனைவி உயிருக்கு ஆபத்தின்றி காலில் சுடப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட பெண் பின் லேடனுக்கு செய்திகள் பரிமாற்றம் செய்த சேக் அபு அஹ்மத்தின் மனைவி என்றும்; சேக் அபு அஹ்மதும் கொல்லப்பட்டார் என்றும் தெரியவந்துள்ளது.
பின் லேடனுடன் அவரது மகன் காலித் என்பவரும் கொல்லப்பட்டதாகவும்; அவரது உடலை அமெரிக்க படையினர் கைப்பற்றி கொண்டு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பின் லேடனின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவரையுமே அமெரிக்க படையினர் தங்களோடு கொண்டு செல்ல விரும்பியதாகவும்; ஒரு ஹெலிகாப்டர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதனால் அந்த எண்ணத்தை கைவிட்டதாகவும் தெரிய வருகிறது. பின் லேடனிடமிருந்து எதிர்ப்பேதும் இல்லையெனில் அவரை உயிருடன் பிடிக்கவே ஒபாமா உத்தரவிட்டிருந்தார். அமெரிக்க படையினரை கண்டதும் பின் லேடனின் மனைவி அவரை பெயர் சொல்லி அழைத்ததை வைத்துதான் கமாண்டோ வீரர்கள் பின் லேடனை அடையாளம் கண்டுகொண்டதாக தற்போது தெரிய வந்துள்ளது.
பின் லேடனை சரணடைய சொல்லும் அரேபிய வாக்கியங்கள் கமாண்டோ படை வீரர்களுக்கு கற்றுத்தரப்பட்டிருந்தது. இருப்பினும், அதற்க்கான வாய்ப்பு அவர்களுக்கு ஏற்படவேயில்லை.
1) அபு யஹ்யா அல்-லிபி:
அல்கொய்தா இயக்கத்தில் ஜிஹாத் என்னும் புனித போரில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தான். பின்லேடனுடன் அதிகமாக தொடர்பு கொண்டவன். பல வீடியோ காட்சிகளில் தோன்றி அல்கொய்தா இயக்கத்திற்கு ஆதரவு திரட்டியுள்ளான். தனது 40 வயதில் இவ்வியக்கத்தின் செயல்பாடுகளில் அதிக ஈடுபாடு கொண்டு இருந்தான். தற்போது அவன் இருப்பிடம் தெரியவில்லை.
அபு பராஜ் நிலையான, திறமையான மற்றும் பிறரால் எளிதாக கணிக்க முடியாத அளவிற்கு தீவிரமாக இயக்கத்தின் வெளிப்புற நடவடிக்கைகளில் செயலாற்றி வந்துள்ளான். கைது செய்யப்படும் வரை பின்லேடனுக்கு பல வழிகளில் உதவியாக இருந்துள்ளான். கடந்த 2005ல் பாகிஸ்தானில் மர்தான் என்ற இடத்தில் கைது செய்யப்பட்டு தற்போது கவுன்டனாமோ என்ற இடத்தில் உள்ளான்.
3) அபு ஜுபாயத்:
பின்லேடனின் தீவிர ஆதரவாளராக இருந்துள்ளான். ஆனால் தலைமை பதவி எதுவும் வகிக்கவில்லை. அமெரிக்கா இவனை பற்றி சற்று அதிகமாகவே அச்சம் கொண்டிருந்தது என்றால் மிகையல்ல. கடந்த 2002ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பைசலாபாத்தில் கைது செய்யப்பட்டு தற்போது கவுன்டனாமோ என்ற இடத்தில் உள்ளான்.
4) மொஹம்மத் அடெப்:
அல்&கொய்தா இயக்கத்தின் ராணுவ நடவடிக்கைகளில் தலைமையேற்று நடத்தி சென்றுள்ளான். சிறந்த கமாண்டராக இருந்துள்ளான். கடந்த 1990&ஆம் வருட இறுதியில் மிக தீவிரமாக தனது செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டிருந்தான். இந்நிலையில் காபூல் என்னுமிடத்தில் 2001&ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ராக்கெட் தாக்குதலில் கொல்லப்பட்டான். சிறந்த போராளியாகவும் மற்றும் இரக்கமற்றவனாகவும் இருந்த அடெப், ஒசாமா பின்லேடனின் நம்பிக்கைக்கு உரியவனாக விளங்கினான். தற்போது அவன் உயிருடன் இல்லை
5) அய்மன் அல்_ஜவாஹிரி:
தற்போது, பின்லேடனுக்கு அடுத்தபடியாக தலைமை பதவியேற்க தகுதி படைத்தவராக 60 வயதை நெருங்கிய அல்&ஜவாஹிரி கருதப்படுகிறார். எகிப்து நாட்டின் இஸ்லாமிய இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்ததால் அந்நாட்டிலேயே சிறை வைக்கப்பட்டடார். பயிற்சி பெற்ற மருத்துவரான இவர் பின்லேடனின் செயல்பாடுகளில் ஈர்க்கப்பட்டார். பல திட்டங்களை செயல் வடிவம் பெற செய்வதற்கு இவர் அல்&கொய்தாவுடன் சுமார் 15 வருடங்கள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது. தற்போதுள்ள இடம் தெரியவில்லை.
6) காலித் ஷேக் மொஹம்மத்:
அமெரிக்காவில், செப்டம்பர் 11ல் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு திட்டம் தீட்டி கொடுத்தவர்களில் இவனும் ஒருவன். அவ்வப்போது தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது இவனது வழக்கம். பின்லேடனுடன் நெருங்கிய நட்பொன்றுமில்லை. மேலும், தீவிரவாதத்திற்கான உறுதிமொழி எடுக்க மறுத்து விட்டான். ஆனால் தீவிரவாத செயல்களில் சிறப்பாக செயல்பட்டு வந்தான். திறமையான மற்றும் பிறரை வசீகரிக்கும் ஆற்றல் கொண்டவன். கடந்த 2003&ஆம் ஆண்டு பாகிஸ்தானின் ராவல்பிண்டி என்னுமிடத்தில் கைது செய்யப்பட்டு தற்போது கவுன்டனாமோவில் உள்ளான்.
7) அப்துல் ஹாதி அல்_இராகி:
குர்திஷ் இனத்தை சேர்ந்தவன். பின்லேடனின் நம்பிக்கைக்கு உரியவனாகவும் திறமையான போர் வீரனாகவும் விளங்கியவன். கடந்த 2007&ஆம் வருடம் ஈராக் நாட்டில் அல்கொய்தா இயக்கத்தை வலுப்படுத்துவதற்காக பின்லேடனால் அனுப்பப்பட்டான். எனினும் ஈரான் நாட்டு எல்லையில் கைது செய்யப்பட்டான். தற்போது கவுன்டனாமோவில் உள்ளான். இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளில் தீவிரவாத செயல்களை நடத்துவதில் பெரும் பங்கு வகித்தான். அவனது கைது இயக்கத்திற்கு பேரிழப்பு ஆகும்.
8) அபு முசாப் அல்_சூரி:
தீவிரவாத இயக்கத்தின் முக்கிய குறிக்கோளான ஜிகாத் என்னும் புனித போருக்கு பல வழிகளில் திட்டம் தீட்டுவதில் வல்லவனாக இருந்துள்ளான். உலகளவில் தீவிரவாதத்தை செயல்படுத்துவதில் ஆலோசனை கூறுவதிலும், தீவிரவாத ஆதரவு பிரசாரம் மேற்கொள்வதிலும் ஈடுபட்டிருந்தான். எனினும், பின்லேடனுடன் எப்போதும் ஒத்து போகவில்லை. மேலும் அதற்கு விருப்பமுமில்லை. கடந்த 2005ல் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு தற்போது அவனது சொந்த நாடான சிரியாவில் சிறை வைக்கப்பட்டுள்ளான்.
9) சயிப் அல்_ஏடல்:
எகிப்து நாட்டின் சிறப்பு படையின் முன்னாள் அதிகாரி. சிறந்த அறிவும், அனுபவமும் வாய்ந்த இவன் 2002ம் ஆண்டில் இருந்து ஈரான் நாட்டு சிறையில் உள்ளான். பின்லேடனுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தான் என முன்பு கூறப்பட்டாலும் தற்போது எவ்வித தொடர்பும் கிடையாது.
10) அன்வர் அல்_அவ்லாகி:
ஏமன் நாட்டை பூர்விகமாக கொண்ட அன்வர் நியூ மெக்சிகோவில் பிறந்தாலும் ஏமன் நாட்டில் தான் வளர்ச்சி அடைந்தான். 40 வயதை கடந்த இவன் ஆங்கிலம பேசுவதில் புலமை பெற்றவனாதலால் இணையதளங்களில் உரையாடினான். அதன் வழியே தீவிரவாதத்தை உலகெங்கும் பரப்பினான். அல்&கொய்தாவின் சார்பில் வெளியான பத்திரிகை ஒன்றின் செய்திகளில் தனது கருத்துக்களை பகிரங்கப்படுத்தியிருந்தான். பின்லேடன் இருந்தவரையில் அந்த இயக்கத்திற்கு தலைமை ஏற்க இயலாவிடினும் தற்போது பின்லேடனின் மறைவு அன்வருக்கு ஒரு வாய்ப்பாக அமையும் என கருதப்படுகிறது. தற்போதுள்ள இருப்பிடம்: தெரியவில்லை
11) அபு முசாப் அல்_ஜர்கவி:
11) அபு முசாப் அல்_ஜர்கவி:
ஈராக் நாட்டின் அல்கொய்தா இயக்க தலைவனான அபு முசாப் ஜோர்டான் நாட்டை சேர்ந்தவன். சாதாரண உள்ளூர் ரவுடியாக தனது ஆரம்பகாலத்தை தொடங்கிய அபு பின்னாளில் பெரிய தாக்குதல்களில் ஈடுபட்டான். ஷியா பிரிவு முஸ்லிம்களை தாக்குவதும் அவர்களது தலைகளை அறுப்பதும் வீடியோவில் வெளிவந்தபோது பரபரப்பை ஏற்படுத்தினான். அல்கொய்தா இயக்கத்தோடு அதிகமாக தொடர்பு கொண்டிருந்த இவன் கடந்த 2006ல் அமெரிக்க படையினரின் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டான். பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள அபோதாபாத் என்ற இடத்தில் ஒரு பங்களாவில் வசித்து வந்த சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனைஅமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது. பின்லேடன் கொல்லப்பட்டப்பின் அடுத்த சிலமணி நேரங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள் வருமாறு:-
* அமெரிக்க கடற்படை வீரர்களால் பின்லேடன் சுட்டு கொல்லப்பட்டு சுமார் 1/2 மணி நேரத்தில், ஒசாமா தங்கியிருந்த வீட்டிற்க்கு பக்கத்து வீட்டுக்காரரான 50 வயது ஷாம்ரஸ் கான் என்பவர் கைது செய்யப்பட்டதாக கானின் மகனும் அண்டை வீட்டாரும் தெரிவிக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற போது அவர் பின் லேடன் தங்கியிருந்த வீட்டை கான் கவனித்ததாக தெரிகிறது.
* வட இங்கிலாந்திலுள்ள கம்ப்ரியாவிலுள்ள சீஸ்கேல் நகர் செல்லாபீல்டு அணு மின் நிலையத்திற்கருகில், தீவிரவாத தடை சட்டத்தின் கீழ் 5 பேர் கைது செய்யப்படுகிறார்கள். இவர்களது கைது சம்பவத்திற்கும் பாகிஸ்தானில் பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதற்கும் தொடர்பு ஏதுமில்லை என கிரேட் மான்செஸ்டர் போலீசார் தெரிவித்துள்ளனர். ஒசாமாவின் மரணத்திற்கு பின் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படலாம் என்பதனால் இங்கிலாந்து மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டுமென அந்நாட்டு பிரதமர் டேவிட் காமரூன் கூறினார்.
* பின்லேடன் கொல்லப்பட்டதும், அது குறித்த அறிவிப்பை ஒபாமா தொலைக்காட்சியில் வெளியிட்டதும் உலகம் முழுவதிலுமிருந்து ட்விட்டர் செய்திகளாக குவிந்த வண்ணம் இருந்தது.
* பின்லேடன் தங்கியிருந்த வீட்டை அமெரிக்க படைகளுக்கு அடையாளம் காட்டியவர் தான் பின்லேடனுக்கு கடிதங்கள் கொண்டு செல்பவர் என்றும்; அந்த நபர் பின் லேடனின் முன்னாள் உதவியாளர் என்றும், இரட்டை கோபுர தாக்குதலை திட்டமிட்டவர்களில் ஒருவர் என்றும் தெரியவருகிறது.
* காஸா பல்கலைக்கழக கட்டிடத்திற்கு முன்பாக, ஏறத்தாழ 25 பாலஸ்தீனியர்கள் பின் லேடனின் படங்களை ஏந்தியவாறு அவனுக்கு அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்த கூடியிருந்தவர்கள் பின் லேடனின் ஆதரவாளர்கள் இல்லை என்ற போதிலும், அமெரிக்கா பின் லேடனை கொன்றதை அவர்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, பின்லேடனை அவர்கள் ஒரு தியாகியாக மதிப்பதாக தெரிவித்துள்ளனர்.
* பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்காவின் சிறப்பு பிரதிநிதி பத்திரிக்கையாளர்களுக்களித்த பேட்டியில் இது அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளின் கூட்டு முயற்சி என்று கூறியுள்ளார். அவரது இந்த குறிப்பு பின்லேடன் மீதான அமெரிக்காவின் தாக்குதல் குறித்து பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் முன்பே அறிந்தது தான் என்று கூறுவதற்காகவா அல்லது ஒரு சம்பிரதாயமான வார்த்தைகளா என்பது தெரியவில்லை.
* இதற்கிடையில், குவைத்திலிருந்து வெளியாகும் தி அல் நாபா என்னும் பத்திரிக்கை, பின்லேடன் தனது பிள்ளைகளை அல் கொய்தாவுடன் தங்களை இணைத்து கொள்ள வேண்டாமென அறிவுறுத்தியிருந்ததாக ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த தகவல் அடங்கிய பின்லேடன் கையொப்பமிட்ட உயிலின் நகல் ஒன்றையும் அப்பத்திரிக்கை ஆதாரமாக காட்டியுள்ளது. இந்த உயில் 2001 டிசம்பரில் எழுதப்பட்டதாக தெரிகிறது.
* நாகல் தூசி என்னும் பெண் பத்திரிக்கையாளர் பின்லேடன் தங்கியிருந்த அந்த கட்டிடத்தின் அருகே பார்வையிட்டு அங்குள்ள நிலைமைகளை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ஜன நடமாட்டமின்றியும், எங்கும் இருள் சூழ்ந்து கிடப்பதாகவும், கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாகவும், ஆயுதம் தாங்கிய போலீசார் காவலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தனது ட்விட்டர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். ராணுவத்தின் அனுமதியின்றி அந்த கட்டிடத்திற்குள் செல்ல குழுமியிருந்த பத்திரிக்கையாளர்களுக்கு போலீஸ் அனுமதி மறுத்ததாக அவர் மேலும் கூறியுள்ளார்.
* 1996 இரண்டாவது முறையாக ஒசாமாவை சந்தித்த ராபர்ட் பிஸ்க் என்பவர் கூறுகிறார். இருபுறமும் இரண்டு மகன்களும் நிற்க, ஒசாமாவே எழுந்து வந்து எம்மை வரவேற்கிறார். அவருக்கு அப்போது 40 வயதுதான் என்றாலும் 1993ல் முதல் முறையாக சூடான் பாலைவன பகுதியில் சந்தித்த போது தோன்றியதைவிட வயதானவராக தெரிந்தார். கண்களில் சுருக்கம், டிரிம் செய்யப்பட்ட நீண்ட தாடி ஒல்லியான உருவம், வெள்ளை மேலாடைக்கு மேல் கருப்பு நிறத்தில் கோட், சிவப்பு நிறத்தில் குல்லா அணிந்து மிகவும் களைத்தவரைப்போல் காட்சியளித்தார்.
* ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லையில் காணப்பட்ட தாக்குதலுக்கான அடையாளங்கள் குறித்து எதுவும் பேச மறுத்த அமெரிக்க அதிகாரி ஒருவரிடம் பின் லேடன் இறந்ததற்கான ஆதரங்கள் குறித்து கேட்கப்பட்ட போது, பின் லேடன் கொல்லப்பட்டுவிட்டான். அவ்வளவே! மற்றபடி உங்களுக்கு தெரிந்த கட்டுக்கதைகளை நீங்களே எழுதிக்கொள்ளுங்கள் என்று எரிந்து விழுந்தார்.
* இங்கிலாந்து இளவரசர் வில்லியம் கதே மிடில்டன் தம்பதியினர், பின் லேடன் கொல்லப்பட்ட செய்தியறிந்து பாதுகாப்பு காரணங்களுக்காக, தங்களது தேனிலவு பயணத்தை தள்ளி வைத்துள்ளனர்.
* பின்லேடன் கொல்லப்பட்டதற்கு எதிர்த்தாக்குதல் நடத்தும் நோக்கத்தோடு பாகிஸ்தான் எல்லையை கடந்து ஆப்கானிஸ்தானுக்குள் நுழைய முயன்ற 25 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு வடகிழக்கு மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்டவர்கள் அரேபியா, செக் குடியரசு மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
* பின்லேடன் தங்கியிருந்த அந்த வீடு தான் சமீபத்தில் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்டதாக தெரிய வந்துள்ளது. கூகுள் எர்த், கூகுள் மேப் போன்ற இணைய தள கருவிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டீபன் க்ரீன்ஸ் என்பவர் தான் முதன் முதலாக வெற்றிகரமாக இணைய தளத்தில் அந்த வீட்டை அடையாளம் கண்டவர்.
* பின்லேடன் மீதான இந்த தாக்குதலுக்கு ஜெரோமினோ என்று அமெரிக்கா பெயரிட்டிருந்தது. அமெரிக்காவின் அப்பாச்சி என்ற இடத்தில் வசித்து வந்த பழங்குடியினர் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ காலனி ஆதிக்கத்தை எதிர்த்து போராடியவர்கள். இந்த பழங்குடியினர் ஜெரோமினோ என்பவரது தலைமையில் தான் போரிட்டார்கள். அவரது நினைவாகவே தற்போதைய பின்லேடன் தாக்குதலுக்கு ஜெரோமினோ என அமெரிக்கா பெயரிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்லேடனை வீழ்த்திய 'சீல் டீம் சிக்ஸ்' அல்-கொய்தா இயக்க தலைவர் பின்லேடன் அமெரிக்க படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டார். இந்த தீர செயலை அமெரிக்காவின் சீல் (எஸ்.ஈ.ஏ.எல்.) டீம் சிக்ஸ் ஆனது திறம்பட செய்துள்ளது. கடந்த 1980-ஆம் ஆண்டு டெஹ்ரானில் அமைந்த அமெரிக்க தூதரகத்தில் பிணைக்கைதியாக இருந்த 52 அமெரிக்கர்களை மீட்பதற்காக இந்த கமாண்டோ படை அமைக்கப்பட்டது. சீல் என்ற வார்த்தையில் எஸ்.ஈ. ஆனது கடலையும், ஏ-காற்றையும், எல்-நிலத்தையும் குறிக்கும். அதாவது இந்த வீரர்கள் அனைவருமே கடல், வான், தரை என மூன்று பகுதியிலும் போரிடும் திறமை வாய்ந்தவர்கள். பெரும்பாலானோர் ஒன்றிற்கு மேற்பட்ட பன்னாட்டு மொழிகளில் புலமை பெற்றவர்கள். மேலும், எந்த சூழ்நிலையையும் கையாள தெரிந்தவர்கள். கடுமையான பயிற்சிகள் பெற்ற இக்குழுவினர் பின்லேடனை சுமார் 40 நிமிடத்தில் அவனது இருப்பிடத்தில் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி சுட்டு வீழ்த்தியுள்ளனர். ஹாலிவுட் திரைப்படங்களில் 'பிளாக் ஆப்பரேடிவ்ஸ்' என்ற பெயர் இவர்களை குறிக்கும்