அல்லாஹ்வின் கிருபையினால்...
திருவள்ளுவர் மாவட்டம் ஆவடி கிளை சார்பாக ஃபித்ரா விநியோகம்!மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகளை சிறப்புடன் செயல்படுத்தி வரும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், வரும் ஈகை திருநாளில் ஏழை மக்கள் இன்பமுடன் பெருநாள் கொண்டாடிட ஸதக்கத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மமானது அனைத்து ஏழைகளும் பெருநாளை மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தின் அடிப்படையில் அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தந்த வழியில் ஃபித்ராக்களை கூட்டாக வசூலித்து விநியோகம் செய்து வருகிறது.
இ த ஜ திருவள்ளுவர் மாவட்டம் ஆவடியில் கிளை சார்பாக 85 ஏழை குடும்பங்களுக்கு (ஒரு நபருக்கு தலா 250 ருபாய் மதிப்புள்ள பொருள்கள்) விநியோகம் செய்யப்பட்டது. கபித்ரா விநியோகத்தை மாவட்ட பொறுப்பாளர் ஆவடி பாரூக் தலைமையில் தொடங்கியது. இதில் ஆவடி இ த ஜ கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.. அல்ஹம்துலில்லாஹ். நபி அவர்கள் எப்படி வாழ்ந்து காட்டினார்களோ, அதுதான் நமக்கு முன்மாதிரி! மனித வாழ்க்கையில் நிகழக்கூடிய எந்த ஒரு சிறு செயலுக்கும் முன்மாதிரி இல்லாமல் இல்லை. உங்களுக்கு பிரியமானவர்கள் நடந்து காட்டுவது நபிவழி அன்று! மாறாக உண்மையான நம்பகமான நபிவழிகளை, நபிகளார் தம்வாழ்வு வாக்குகளிலிருந்து நீங்கள் அறிந்து நடப்பதுதான் மார்க்கத்தை புரிந்து செயல்படுவதாகும்.அல்லாஹ் நமக்குக் கொடுத்திருக்கக் கூடிய பகுத்தறிவைப் பயன்படுத்தி மூட நம்பிக்கைகளை விட்டு விலகி எது உண்மையான நபிவழி என்பதை விளங்கி, செயல்பட்டு இம்மையிலும் மறுமையிலும் வல்ல அல்லாஹ்வின் பேரருளைப் பெற்று வாழ்வோமாக! ஆமீன்.
நன்றி:மணலிஅஸ்பாக்