திருமறை விழாவான திருமண விழா.
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அல்லாஹ்வின் பேரருளால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலச் செயலாளர் சகோதரர் சாதிக் அவர்களின் திருமணம் 16 -10 -2011 ஞாயிறன்று அவரது சொந்த ஊரான கூனிமேட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி வெறுமனே திருமண மேடையாக மாறிவிடாமல் இறைமறை வேதத்தை மக்களிடம் சேர்ப்பிக்கும் நிகழ்ச்சியாகவும், அதில் ஒருபகுதியாக தனது திருமண நிகழ்வையும் அமைத்திட விரும்பிய சகோதரர் சாதிக், அவ்வாறே அல்லாஹ்வின் அருளாளால் நடத்தி முடித்துள்ளார். இதில் பங்கேற்ற எராளமான முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு திருமறை தமிழாக்கத்தை பற்றி எடுத்து சொல்லி அன்பளிப்பாக வழங்கப் பட்டது.
உள்ளாட்சி தேர்தலின் இறுதிக் கட்ட பிரசாரத்தில் முஸ்லிம் இயக்கங்கள் உள்பட அனைவரும் சுற்றிச் சுழன்று கொண்டிருந்த நேரத்தில் இறுதி வேத பிரசாரம் செய்து கொண்டிருந்தது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் !
அல்ஹம்துலில்லாஹ். அந்த நிகழ்ச்சியிலிருந்து சில காட்சிகள்;