திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Sunday, November 20, 2011

தடையை மீறி பாபரி மஸ்ஜித் ரத யாத்திரை மேலப்பாளையத்தில் துவக்கம்! நூற்றுக்கணக்கான சகோதரர்கள் கைது!

,

தடையை மீறி பாபரி மஸ்ஜித் ரத யாத்திரை மேலப்பாளையத்தில் துவக்கம்! நூற்றுக்கணக்கான சகோதரர்கள் கைது!

அல்லாஹ்வின் இறையில்லம் பாபரி மஸ்ஜித்தை மீட்க நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சமூக நல்லிணக்க ரத யாத்தரை ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தது.

அதன் துவக்க நிகழ்ச்சி நேற்று (19.11.2011) மேலப்பாளையம் பஜார் திடலில் இதஜ மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் மேலப்பாளையம் காவல்துறை ஆய்வாளர் பர்குணத்தின் தலைமையில் இயங்கிய போலீஸாரின் கடுமையான கெடுபிடிகளுக்கு மத்தியில் மிகுந்த பரபரப்புடன் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வந்தவர்களை பாதி வழியில் போலீஸார் வர விடாமல் தடுத்ததை கண்டு மக்கள் கொதித்து எழுந்தனர். பாகிஸ்தானில் பிறந்து இந்திய தேசத்தை தனது குரூர புத்தியால் இரத்த களரியாக்கும் அத்வானியின் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கும் மத்திய, மாநில அரசுகள். சொந்த பூமியை இழந்து அதை மீட்க நல்லிணக்க ரத யாத்திரை நடத்தும் முஸ்லிம்களுக்கு அனுமதி மறுப்பாக என கொதித்தனர்.

யாத்திரை வாகனம் வருவதை கண்டு அத்தனை பத்திரிகையாளர்களும் கூடினர். மாநிலத் தலைவர் S.M.பாக்கர் மற்றும துணைப் பொதுச் செயலாளர் சையது இக்பால், ரத யாத்திரைக்கு தடை விதித்தமைக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.
முதலில் அணி வகுப்புடன் துவங்கிய ரத யாத்திரை நிகழ்ச்சியினை மாநில துணைப் பொதுச் செயலாளர் இக்பால் தடையை மீறி துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு வருகை தந்த எஸ்.எஸ்.மணி, மீனவ கபடி மாறன், ரத யாத்திரைக்கு முழு ஆதரவு தெரிவித்து ரூபாய் 5000 தந்த பெரியவர் சீனிவாசன் ஆகியோர் தங்களது வாழ்த்துரைகளை வழங்கினர்.

அதன் பிறகு மாநில நிர்வாகிகள் பாக்கர், ஸித்தீக், அபூபக்கர், முனீர், கோவை ஜாஃபர், அப்துல் ஹமீது, செங்கிஸ்கான், அபூஃபைஸல், காஞ்சி ஜாஹிர், ஃபிர்தவ்ஸ், இனாயத்துல்லாஹ் ஆகியோர் தங்களது கண்டன உரைகளை நிகழ்த்தினர்.

அதன் பிறகு காவல்துறையினர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.அங்கு லுஹர், அஸர் மற்றும் மக்ரிப் தொழுகையை நிறைவேற்றினர்.
அங்கு மாநிலப் பேச்சாளர்கள் அப்துல் காதர் மன்பஈ, முஹம்மது முகைதீன் மற்றும் வளைகுடா பொறுப்பாளர் கீழை ஜமீல் ஆகியோர் ரத யாத்திரையின் நோக்கம் மற்றும் நம் நடந்து கொள்ள வேண்டிய முறைகளை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உருக்கமாக நிகழ்த்தினர்.
அவர்களது உரையில் இன்று நம் யாத்திரை நிறுத்தப்பட்டு இருக்கலாம். இன்ஷா அல்லாஹ் இந்த தடையை நீதிமன்றத்தின் மூலம் உடைக்கப்பட்டு மீண்டும் நாம் இந்த யாத்திரை புதிய உற்சாகத்துடன் இந்தியா முழுவதும் கொண்டு வருவோம். பாபரி மஸ்ஜித் மீட்ப்பட்டு அங்கு இறையருளால் நாம் தொழுகை நடத்துவோம் என்றது அனைவரையும் உற்சாகப்படுத்தியது.
இந்த ரத யாத்திரை நிகழ்ச்சிக்கு கணிசமான பண உதவி செய்த தேசியலீக் தலைவர் பஷீர் அவர்களுக்கும், தனது சொந்த வாகனத்தை தர முன் வந்த விடுதலை சிறுத்தை தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும், ஃபாத்திமா ஜுவல்லர்ஸ் உரிமையாளர் ஜாஹிர் உள்ளிட்ட சமுதாய புரவலர்களுக்கும் ஜமாஅத் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
மிக அருமையாக நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து சுவைமிக்க உணவு, தேனீர், தண்ணீர் என அருமையான ஏற்பாட்டினை மேலப்பாளையம் கிளை பொறுப்பாளர்கள் ஹாரீஸ், அப்துல் கபூர், புகாரி, கிச்சான் புகாரி மற்றும் இதர சகோதரர்களை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பாராட்டினர்கள்.
என்ன ஆகுமோ என பதற்றத்துடன் இருந்த காவல்துறையினர், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களின் அருமையான செயல்பாடுகள், ஒத்துழைப்பில் மெய் மறந்தனர்.
இன்ஷா அல்லாஹ் வரும் டிஸம்பர் 6 அன்று மாவட்டத் தலைநகரங்களில் பாபரி மஸ்ஜித் சம்பந்தமாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
அருமையான வசதிகளுடன் கூடிய கல்யாண மண்டபம் ஒன்று அரசு செலவில் இஸ்லாமிய நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்கு உதவி புரிந்த ஏக இறைவனுக்கு நன்றி செலுத்திய மன திருப்தியுடன் அத்தனை சகோதரர்களும் கலைந்து சென்றனர்.
செய்தி மற்றும் படங்கள் : அபூ உமைமா மற்றும் அபூ அவ்ன். 

0 comments to “தடையை மீறி பாபரி மஸ்ஜித் ரத யாத்திரை மேலப்பாளையத்தில் துவக்கம்! நூற்றுக்கணக்கான சகோதரர்கள் கைது!”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates