திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Monday, November 21, 2011

பரமக்குடி முதல்... மேலப்பாளையம் வரை...

,

பரமக்குடி முதல்... மேலப்பாளையம் வரை...

முஸ்லிம்களின் இறையில்லமாம் பாபர் மஸ்ஜித் நீதிக்கும் நியாயத்திற்கும் இந்திய நாட்டின் மதசார்பின்மைக்கும் இறையாண்மைக்கும் ஊறுவிளைவிக்கும் வண்ணமாக கடந்த 1992 ஆம்
ஆண்டு டிசம்பர் மாதம் 6 ம் தேதி இந்திய நாட்டின் எல்லைபகுதிகளான கைபர் மற்றும் போலன் கணவாய்கள் வழியாக ஆடு மாடுகளை ஒட்டிக்கொண்டு நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த ஆரிய வந்தேறிகளின் கூட்டத்தால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அந்த கீழ்த்தரமான நிகழ்விற்கு அப்போதைய மத்திய அரசும் கள்ள ஆதரவு நல்கியது.

பல ஆண்டுகாலமாக நடந்துவந்த முஸ்லிம்களின் உரிமை மீட்பு வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் கடந்தாண்டு ஒரு டுபாக்கூர் தீர்ப்பை வழங்கியது. அதனை தொடர்ந்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் பாபர் மஸ்ஜித் மீட்பு குழுக்கள் நீதிமன்றங்களின் மூலமாக சட்டப் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
தமிழ்நாட்டிலும் பல்வேறு அமைப்புகள் வருடா வருடம் ஜனாயகரீதியிலான போராட்டங்கள் மூலமாக தங்கள் பாபர் மஸ்ஜித் மீட்பு நிலையை அரசுகளுக்கு தெரிவித்து வருகிறார்கள். இவைகள் ஒரு சமூகம் சார்ந்த பிரச்னையாகவே மற்ற சமூக மக்களால் பார்க்கப்பட்டது. இல்லை இது ஒரு சமூகம் சார்ந்த பிரச்னை! இல்லை இது நாட்டின் மதசார்பின்மையையும் நல்லிணக்கத்தையும் மீட்க நடக்கும் போராட்டம் என்பதை வெகு ஜன மக்களுக்கு கொண்டு செல்லும் வண்ணமாக இந்திய தவ்ஹீத் ஜமாத் இயக்கம் இம்மாதம் (நவம்பர்) 19ம் தேதி நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் துவங்கி டிசம்பர் 6ம் தேதி சென்னையில் நிறைவுறும் படியாக "பாபர் மஸ்ஜித் மீட்பு ரதயாத்திரை"யை கடந்த இரண்டுமாதங்களுக்கும் முன்னதாக திட்டமிட்டு அறிவிப்பு செய்தது அந்த ரதயாத்திரைக்கு பலதரப்பட்ட மக்கள் மத்தியிலும் சிறப்பான வரவேற்ப்பு கிடைத்தது.
தமிழ்நாட்டின் சமூக அரசியல் கட்சிகளும் நல்லிணக்கத்தை விரும்பும் பொதுநல அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தனர். இப்படியாக பரபரப்பான சூழ்நிலையில் வெகுஜன மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் "பாபர் மஸ்ஜித் மீட்பு ரதயாத்திரை" மேலப்பாளையத்தில் துவங்கும் நாளான நவம்பர் 19 அன்று நிகழ்வு துவங்குவதற்கு
சில மணி நேரங்கள் முன்னதாக காவல்துறை நிகழ்விற்கான அனுமதியை மறுத்து ரதயாத்திரையை தடை செய்தது. முஸ்லிம்களின் ஜீவாதார போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தவர்களை காவல்துறை கைது செய்தது.

சொந்த மண்ணில் வெந்த மனங்களுடன் தங்களின் உரிமையை மீட்பதற்காக ஜனநாயகரீதியாக போராட முனைந்த மக்களை செல்வி ஜெயலலிதா அவர்களின் அரசு தடுத்துள்ளது. அதே வேளையில் இந்திய திருநாட்டில் சிறுபான்மையின மக்களின் உயிர்களையும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் உயிர்களையும் இரத்தங்களாய் குடிப்பதற்காகவே ரதயாத்திரைகளை நடத்திவரும் அத்துவானி கும்பலுக்கு இதே அரசு பூரண ராஜமரியாதையுடன் தமிழக மண்ணில் சிவப்பு கம்பளம் விரித்தது. அந்த தட்டுவாநிகளின் ரதம் நிறைவுறும் இடத்திற்கு தனது கட்சியின் எம்பியை அனுப்பி தனது சாதிய பாசத்தை காட்டியுள்ளார் அம்மையார்...!!!

கடந்த காலங்களில் அம்மையார் பலமுறைகளில் தனது முஸ்லிம் விரோதபோக்கை காட்டியும் ஏன்? பாபர் மஸ்ஜித் இடிப்பிற்க்கான கரசேவைக்கு அதிமுகவினைரையும் அனுப்பி வைத்திருந்தாலும் மன்னிக்கும் மாண்பை கொண்ட முஸ்லிம்களும் ஏனைய பிற்படுத்தப்பட்ட சமூகங்களும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களும் அம்மையாருக்கு மீண்டும் வாய்ப்பளித்து தனிபெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்தினர். அரியணையில் அமர்ந்ததும் அம்மையார் விசுவாசம் என்பதை மறந்துவிட்டார்...

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு எதிராக  நடந்தேறிய காட்டுமிராண்டிதனமான தாக்குதலில் ஆறு அப்பாவிகள் பலியானதை எந்த தமிழனும் இன்னும் மறந்திருக்கமாட்டான். தங்களின் சமுதாய தலைவனுக்கு அஞ்சலி செலுத்துவதற்க்காக சென்ற அப்பாவி மக்களின் மீதே ஆதிக்க வெறிபிடித்த காவல்துறை துப்பாக்கி தோட்டாக்களை ஏவியது... இன்றுவரை அந்த அக்கிரமக்காரர்கள் எவரும் தண்டிக்கப்படவில்லை.

ஆம் எப்படி தண்டிக்கபடுவார்கள்!? எஜமானரின் ஆசையை நிறைவேற்றுவதுதானே பணியாளின் கடமை... மேலப்பாளையத்தில் தடுக்கப்பட்ட ரதயாத்திரையும் பரமக்குடி உயிர்பலியும் உணர்த்தும் மறுக்கமுடியாத உண்மைகளை நடுநிலை தவறாத மக்கள் உணரவேண்டும்... குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூக மக்களும் முஸ்லிம்களும் உணர வேண்டிய உண்மை ஆள்பவர்கள் யாராக இருந்தாலும் பாதிக்கபடுவது முஸ்லிம்களும் தலித்துக்க்களும்தான்...

மேலப்பாளையத்தில்  குழுமிய முஸ்லிம்கள் சற்று உணர்ச்சிவயபட்டிருந்தாலும் மீண்டுமொரு பரமக்குடி மேலப்பாளையத்தில் நிகழ்ந்திருக்கும். இந்த ரதயாத்திரை இந்திய தவ்ஹீத் ஜமாத் என்கிற ஒரு இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் இது ஒட்டுமொத்த முஸ்லிம்களின் போராட்டமாக மக்கள் மயபடுத்தபட்டிருக்க வேண்டும், மாறாக ஒரு இயக்க போராட்டமாக சித்தரிக்கபட்டதால்தான் சுலபமாக அரசால் தடுக்க முடிந்தது. இந்த அநியாயத்தை கண்டித்து இதுவரை ஒரு இஸ்லாமிய அமைப்பும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது கவலைக்குறியது மட்டுமல்ல கண்டனத்திற்கும் உரியது...  இஸ்லாமிய இயக்கங்கள் மத்தியில் நிலவும் புரிந்துணர்விற்கு இந்த சம்பவம் நல்ல எடுத்துகாட்டு...


அரசின் பரமக்குடி மற்றும் மேலப்பாளையம் அடாவடித்தனங்கள் மூலமாக முஸ்லிம்களும் தலித்துகளும்  கற்க வேண்டிய கட்டாயபாடம் பாதிக்கபடக்கூடிய இரு சமூகமும் இனியும் தாமதிக்காது ஒருங்கிணைய வேண்டும்.

இரண்டு சமூக மக்களும் ஓரணியில் பயணிக்க துவங்கிவிட்டால் எந்த கொம்பாதி கொம்பனாலும் நமது உரிமை போராட்டங்களை தடுக்க முடியாது என்பது மறுக்க இயலாத உண்மை...

வேங்கை.சு.செ.இப்ராஹீம்

0 comments to “பரமக்குடி முதல்... மேலப்பாளையம் வரை...”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates