திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Thursday, November 24, 2011

பூமி – வாழ்வதற்கு ஏற்ற இடம்!

,

பூமி – வாழ்வதற்கு ஏற்ற இடம்!


இந்தப் பிரபஞ்சத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த இடங்களும், உயிரினங்கள் வாழத் தகுதியற்ற இடங்களும் இருக்கின்றன. உதாரணமாக நமது சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்களில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழத் தகுந்த சூழ்நிலை இருக்கிறது. பிற கோள்களில் மிக அதிக வெப்பம் அல்லது குளிர் மற்றும் காற்று இல்லாமையின் காரணமாக உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாக இருக்கின்றது.மிக மிக அதிகமான வெப்ப நிலையை உடைய வீனஸ்!
நமது சூரியக்குடும்பத்தில் பூமி அல்லாது மெர்குரி, வீனஸ், செவ்வாய், ஜுபிடர், வியாழன், புளுட்டோ போன்ற கோள்கள் இருப்பதை நாம் அறிவோம். அனால், அவைகளிலெல்லாம் உயிரினங்கள் இல்லை என்கின்றனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். இதற்கு காரணம் அவைகளில் உயிரினங்கள் வாழ்வதற்குரிய உயிராதாரங்களும், உயிர் வாழ்வதற்கேற்ற தகுந்த சூழ்நிலைகளும் இல்லாமையே.
உதாரணமாக சூரியனுக்கு அருகிலுள்ள கோள்களான மெர்குரி மற்றும் வீனஸ் ஆகியவற்றை எடுத்துக் கொண்டால் இவைகளின் சராசரி பகல்நேர வெப்பநிலை 430 டிகிரி சென்டிகிரேடுக்கும் அதிகமாக இருக்கிறது. (பூமியின் சராசரி கோடைக்கால வெப்பநிலையே வெறும் 42 டிகிரி சென்டிகிரேடு தான். இதையே நாம் தாங்கிக்கொள்ள அதிகம் சிரமப்பட வேண்டியதாக இருக்கிறது.  மேலும், மெர்குரியில் அதனின் வலுவில்லாத ஈர்ப்பாற்றலால் அங்கு வளிமண்டலமே (Atmosphere) இல்லை. அதனால் அங்கு சுவாசக்காற்று இல்லை. வீனஸில் வளிமண்டலம் இருந்தாலும் அவை பூமியின் வளிமண்டலத்தை விட 90 மடங்கு அதிகம் அழுத்தம் வாய்ந்ததாக இருக்கின்றது.வாயுக்களால் ஆன கோள்கள்!
பூமியின் துணைக்கோளான சந்திரனை எடுத்துக் கொண்டால் அதில் பகல் நேர சராசரி வெப்பநிலை 125 டிகிரியாகவும், இரவு நேர வெப்பநிலை -175 டிகிரியாகவும் இருக்கிறது. பூமிக்கு அடுத்ததாக இருக்கும் இரண்டு நிலவுகளுடைய (Moons) செவ்வாய் கிரகத்தின் சராசரி வெப்பநிலை 120 டிகிரி முதல் +25 வரை இருந்த போதிலும் இதில் மிக இலேசான அழுத்தமுடைய காற்று மண்டலமே இருக்கிறது. பூமியின் காற்று மண்டலத்தில் மூன்றில் ஒரு பாகமே அழுத்தமுடையதாக இருக்கும் இதில் உயிரினங்கள் வாழத் தகுதியற்ற விஷ வாயுக்களும் அடங்கியிருக்கின்றன.
செவ்வாய் கிரகத்திற்கு அடுத்ததாக இருக்கும் கோள்களான ஜுபிடர், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய யாவும் வாயுக்களான கோள்களாகும். இவைகள் மிகப்பெரிய வாயுக்கள் அடங்கிய பந்துகளாகும். எனவே, இவைகளும் உயிரினங்கள் வாழத் தகுதியற்றதாக இருக்கிறது. அடுத்ததாக இருக்கும் புளுட்டோ என்ற கோள் சூரியனுக்கு மிக மிக அதிக தொலைவில் இருப்பதால் அதன் வெப்பநிலை -250 சென்டிகிரேடாக இருக்கிறது. இவ்வாறு சூரியக்குடும்பத்திலுள்ள கோள்களில் பூமியைத்தவிர மற்ற யாவுமே உயிரினங்கள் வாழத் தகுதியற்றதாக இருக்கும் நிலையில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற வசதிகள் இருப்பதை அறியலாம்.வாயுக்களால் ஆன கோள்கள்!வாழ்வதற்கேற்ற பூமி!
இந்த அனைத்துக் கோள்களையும் உள்ளடக்கிய அகிலங்களின் இறைவனான அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்: -
“அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்; ஆகவே, அதன் பல மருங்குகளிலும் நடந்து அவனுடைய உணவிலிருந்து புசியுங்கள்; இன்னும் அவனிடமே (யாவரும்) உயிர்த்தெழ வேண்டியிருக்கிறது” (அல்குர்ஆன்: 67:15)
அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.
althaf husain

0 comments to “பூமி – வாழ்வதற்கு ஏற்ற இடம்!”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates