திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Thursday, November 24, 2011

அசத்தியம் அழிந்தே தீரும்

,

அசத்தியம் அழிந்தே தீரும்

Post image for அசத்தியம் அழிந்தே தீரும்
அல்குர்ஆனும், ஸஹீஹான ஹதீஸ் தொகுப்புகளும் 1400ஆண்டுகளுக்கு மேலாக இறையருளால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் அல்குர்ஆனின் மொழியாக்கமும், ஸஹீஹான ஹதீஸ்கள் தொகுப்பும் நமது முன்னோர்களுக்கு முழுமையாக கிடைத்தனவா என்றால் இல்லை. மாறாக இஸ்லாமிய நூல்கள் என்ற பெயரில் பல கட்டுக்கதைகள் நிரம்பிய நூல்களே உலா வந்து கொண்டிருக்கின்றன. அன்றிலிருந்து இன்று வரை அவற்றில் சில:
    1.ஜெய்தூன் கிஸ்ஸா, 2.ஷம்ஊன் கிஸ்ஸா 3.விரகு வெட்டியார் கிஸ்ஸா 4.நான்கு பக்கீர்ஷா கிஸ்ஸா 5.தமிமுல் அன்ஸாரி கிஸ்ஸா 6.பெண் புத்தி மாலை 7.இராஜமணி மாலை 8.ரசூல் மாலை 9.மீரான் மாலை 10.பப்பரத்தி மாலை 11.தாரு மாலை 12.முஹையித்தீன் மாலை 13.அதபு மாலை 14.முனாஜாத் மாலை 15.நூறு மசாலா 16.வெள்ளாட்டி மசாலா 17.குறமாது 18.தரிக்குவ் ஜன்னா 19.திருமுடி இறக்கிய ஹதீது 20.மஸ்தான் ஸாகிப் பாடல் 21.சலவாத்து பாட்டு 22.மெய்ஞானரத்தின அலங்கார சிந்தனை 23.முகையித்தீன் ஆண்டவர்கள் சத்துரு சங்காரம் 24.ஞானரத்தின குறவஞ்சி 25.சீறாப்புராணம் 26.பர்னபாஸ் பைபிலிருந்து காப்பி அடித்த சில பிக்ஹூ சட்ட நூல்கள் மற்றும் பிக்ஹூ கலைக் களஞ்சியம் இன்னும் பல குர்ஆன் ஹதீஸுடன் முரண்படும் பல மஸாயில் தொகுப்புகள்.
    மேற்காணும் நூல்களைப் படித்த நமது முன்னோர்களில் பலர் அவை குர்ஆன் ஹதீஸுக்கு உட்பட்டவையே என நம்பிக்கைக் கொண்டனர். அதற்குக் காரணம் அவற்றை ஒத்துப் பார்ப்பதற்கு குர்ஆன், ஹதீஸ் மொழியாக்கம் அன்று முழுமையாக எளிதில் கிடைக்கவில்லை. அதன் விளைவு இறைவனுக்கு இணைவைத்தலும் மற்றும் பில பித்அத்களும் வணக்கம் என்ற பெயரில் இரண்டறக் கலந்து விட்டன. மேலும் பிறமதச் சடங்குகளை பல்வேறு பெயரில் கடமை என்ற நம்பிக்கையில் நமது முன்னோர்கள் அரங்கேற்றினர். அதற்கு சில உலமாக்களும் துணை போனார்கள்.
    உதாரணமாக தாயத்து அணிவது, பால்கித்தாப் என்ற ஜோஸியம் பார்ப்பது, இறை இல்லம் நோக்கி தொழ வர வேண்டியவர்கள் இணை இல்லம் (தர்ஹா) நோக்கி ஓடியது, இறைவனிடம் கேட்பதற்கு பதிலாக இறந்தவர்களிடம் கேட்பது, வீடு கட்ட துவங்கும்போதும், நிலை வைக்கும்போதும் பிற மத சடங்குகளைச் செய்வது அல்லது செய்ய அனுமதியளிப்பது, இறந்தவர்களுக்கு 7, 10, 40 மற்றும் வருட பாத்திஹா ஓதுவது, இருட்டு திக்ரு, ராத்திபு மற்றும் அர்த்த பேதங்கள் நிறைந்த சலாத்துன்னாரியா முதல் சுப்ஹான மவ்லூது போன்ற கவிதைகள் பாடுவது சடங்குகள் சம்பிரதாயங்கள் ஆகியன.
    ஆனால் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இப்போது குர்அன், ஹதீஸ் மொழியாக்கம் தமிழில் எளிதாக கிடைப்பதால் நிச்சயம் மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்ப்பட்டுள்ளது. ஆயினும் மக்களிடையே பெருகிவரும் விழிப்புணர்ச்சிக்கு எதிராக சில புரோகிதரர்கள் அவதூறு பிரச்சாரம் செய்கின்றனர். குர்ஆனை மொழிபெயர்ப்புடன் படிக்காதீர்கள். அரபியில் ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உள்ளன ஆதலால் குர்ஆன் உங்களூக்கு விளங்காது என்பதாக கூறும் இவர்களுக்கு அல்லாஹ் குர்ஆனை விளங்கிக் கொள்ள முடியாதவாறு முத்திரை வைத்து விட்டான் போலும்.
அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்:
    (மனிதர் சிந்தித்து ஆராய்ந்து) நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு இந்த குர்ஆனை நிச்சயமாக நாம் மிக்க எளிதாக்கியிருக்கிறோம். எனவே (இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுவோர் எவரும் உண்டா? (அல்குர்ஆன் 54:17)
    எனவே குர்ஆன், ஹதீஸ்களை முழுமையாக நன்கு படியுங்கள்.அப்போது தான் சத்தியம் எது? அசத்தியம் எது? என்பதை அறிய முடியும். மேலும் (குர்ஆனை) சத்தியத்தை அறிந்து பின்பற்றினால்தான் மறுமையில் வெற்றி காண முடியும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அத்தகைய நல்பாக்கியத்தை தந்தருள்வானாக!
A.நஜ்முத்தீன் அய்யம்பேட்டை

0 comments to “அசத்தியம் அழிந்தே தீரும்”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates