திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Tuesday, November 29, 2011

தினந்தோறும் இஸ்லாத்தை நோக்கி...

,
தினந்தோறும் இஸ்லாத்தை நோக்கி...
டந்த மாதத்தில் நமது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையகத்தில் இஸ்லாத்தை ஏற்போரின் எண்ணிக்கை எகிறிக் கொண்டுள்ளது!
அழைப்புப் பணியே தனது முழு முதற்ப் பணியாய்க் கொண்டுள்ள ஐ.என்.டி.ஜே.வின் அமைந்தக்கரை கிளை நிர்வாகி ஹபிப் அவர்களின் முயற்சியால் முருகன் எனும் இளைஞர் நேற்று 29.11.11 அன்று  இஸ்லாத்தை குறித்த தனது ஐயங்களை கேட்க தலைமையகம் வந்து மாநிலப் பேச்சாளர் முஹம்மத் முஹய்யதீன் அவர்களிடம் விளக்கம் பெற்று ஏகத்துவ கலிமாவை மொழிந்து முஹம்மத் ஆக இஸ்லாத்தில் நுழைந்தார்.அல்ஹம்து லில்லாஹ்.       

இஸ்லாத்தை விளக்கிய போது.

                                     ஏகத்துவ கலிமாவை மொழிந்த போது

                                     திருமறை தமிழாக்கம் வழங்கிய போது




அணி அணியாய் இஸ்லாத்தை நோக்கி! அழைப்பு பணியில் INTJ எழுச்சி !


இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் அழைப்புப் பணியின்   மூலம் அணி அணியாய் , குடும்பம் குடும்பமாய் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்.கடந்த மாதம் மட்டும் ஏராளமானோர் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர்.அது குறித்து நமது தளத்தில் செய்திகள் வந்துள்ளன.

கடந்த வாரம் வட்டிக் கடனில் மூழ்கிய ஒரு குடும்பத்தை ஜகாத் நிதியின் மூலம் இஸ்லாத்தில் மீது எடுத்த நமது தளத்தில் வெளியிட்டோம்.அந்த குடும்பத்தில் இருந்து மற்றொருவர் இஸ்லாத்தை ஏற்றுள்ளார்.அல்ஹம்து லில்லாஹ். அவர்களை கடனில் இருந்து மீட்ட போது உடன் இருந்த காணிக்கை எனும் கதிஜாவின் சகோதரர் ஆரோக்க்ய தாஸ் நம் நிர்வாகிகளின் காலில் விழப் போனார்.அவரை தடுத்து மனிதனின் காலில் மனிதன் விழுவது இறைவனுக்கு செய்யும் இணைவைப்பு என நம் சகோதரர்கள் விளக்கினர். அந்த சம்பவம் அவரின் மனதில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது ! நேற்று 28.11.௧௧ அன்று அவரே நம்மை தொடர்பு கொண்டு நான் இஸ்லாத்தில் இணைய வேண்டும் எங்கே வர வேண்டும் என்றார்.தலைமையகத்திற்கு வந்த அவருக்கு
மாநிலப் பேச்சாளர் அப்துல் காதிர் மன்பயி ஏகத்துவ கலிமாவை சொல்லி கொடுக்க ஆரோக்கிய தாஸ் இம்தியாஸ் ஆகி இஸ்லாத்தில் நுழைந்தார்.
நம்முடைய சொல்லாளும் செயலாலும் இஸ்லாத்தை நடைமுறைப் படுத்தினல் ஒட்டுமொத்த மனிதர்களின் மனங்களையும் இஸ்லாத்தின் பால் ஈர்க்கலாம் என்பதற்கு இந்த சம்பவம் இன்னொரு சாட்சி. 




அணியணியாய் இஸ்லாத்தை நோக்கி... ஆசாத் நகர் INTJ கிளையின் அழைப்புப் பணி




கோவையில் ரத யாத்திரை எழுச்சி! இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சி !




கடந்த வாரத்தில் தலைமையகத்தில் நால்வர் இஸ்லாத்தை ஏற்றனர்.


 

 தலைமையகத்தில் ஒரே நாளில் இஸ்லாத்தை ஏற்ற மூவர்!

 அந்த வகையில் கடந்த வாரம் சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த சகோதரர் ஒருவர் நம்முடைய சேப்பாக்கம் கிளை செயலாளர் கலீல் ரஹ்மானை அணுகி
தான் ஆறு மாதங்களுக்கு முன் இஸ்லாத்தை ஏற்றவன் என்னுடைய குடும்பத்தினர் இன்னும் இஸ்லாத்தை ஏற்கவில்லை.தற்போது எங்கள் குடும்பம் கடுமையான் கடன் மற்றும் வட்டியில் சிக்கிக் கொண்டுள்ளோம்.  எங்கள் குடும்பத்தின் மொத்த வருமானமும் வட்டிக்கே செல்கிறது.  வட்டியில் இருந்து மீட்டால் அவர்களின் உள்ளங்கள் இஸ்லாத்தின் ஈர்க்கப் படலாம் என்றார்.


கிளை நிர்வாகி கலீல் மாநில செயலாளர் செங்கிஸ் கானை அணுகி இதைக் கூறினார். உடனடியாக இதற்காக செங்கிஸ் கான் அழைப்பாளர் அமிருதீன், மற்றும் கலீல் ஆகியோர்  கடன் காரர்களிடம் பேசி    ஒருவருடைய கடனை இனி வட்டியின்றி மாதம் 5000 வீதம் செலுத்துவது என்றும் , மற்ற ஒருவரின் கடனை பாதியாக குறைத்து 50000 ரூபாயை கொள்கை சகோதரர்களின் உதவி மற்றும் ஜகாத் நிதியில் இருந்தும் செலுத்தி கடனில் இருந்து மீட்டனர்.

இதைக் கண்ட அந்த கிறிஸ்தவக் குடும்பம் உள்ளங்கள் ஈர்க்கப் பட்டு மாநிலத் தலைமையகத்தில் வந்து தங்களை இஸ்லாத்தில் இணைத்து கதிஜா , ஆயிஷா,
மர்யம் என தங்களின் பெயரை அபிடவுட் போட்டு மாற்றிக் கொண்டனர்.

அல்ஹம்து லில்லாஹ் ! ஜகாத்தை சரியான முறையில் அல்லா கூறியபடி
உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கு சரியான முறையில் பயன் படுத்தினால் இந்தியாவில் கடனிலும் வட்டியிலும் மூழ்கியுள்ள ஏராளமான முஸ்லிமல்லாத மக்களை இஸ்லாத்தின் பால் வென்று எடுக்கலாம்.    

0 comments to “தினந்தோறும் இஸ்லாத்தை நோக்கி...”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates