
இஸ்லாம் காட்டித்தந்த உன்னத பணியான தஃவா எனும் அழைப்புப் பணியை தனது தலையாய பணியாக செய்யும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் அனைவரும் அழைப்புப் பணியினை பல வழிகளிலும் செய்து வருகின்றனர்.
மருத்துவமனை, பூங்கா, கடற்கரை, கோயில்கள், சர்ச்கள் மற்றும் சேரிகள் மற்றும் மாற்று மத மக்கள் குடி இருக்கும் வீடுகள் தோறும் சென்று இறைவனின் இறுதி வேதமான திருக்குர்ஆன் மற்றும் கண்ணியத்திற்குரிய இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் போதனைகள் அடங்கிய அழகிய நூல்களை வழங்கி அழைக்கின்றனர்.
இன்றைய தினம் நம் சட்டசபை எதிரிலுள்ள சேரிகளுக்கு சென்ற இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் துணைத் தலைவர் முனீர், மாநில பேச்சாளர் முகைதீன் உள்ளிட்ட தஃவா குழுவினர் வீடு வீடாக சென்று இஸ்லாமிய அழைப்புப் பணியினை செய்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.