டெல்லி உயர்நீதிமன்ற குண்டுவெடிப்புக்கு காரணமான இரண்டு முஸ்லிம் தீவிரவாதிகள் கைது . இவர்களுக்கு டெல்லி ஜாமியா மசூதி குண்டுவெடிப்பு பெங்களூர் கிருஷ்ணசாமி ஸ்டேடியம் குண்டுவெடிப்பு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு என்று அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து நவம்பர் 24 ம் தேதி பரபரப்பான செய்திகளை ஊடகங்கள் மற்றும் தொலைகாட்சிகள் வெளி இட்டன ஆனால் உண்மை அதுவல்ல பீகார் மதுபானி மாவட்டத்தை சேர்ந்த கையூர் ஜமாலி மற்றம் முஹமது அஜ்மல் இருவரும் ஹஜ் பெருநாள் லீவுக்காக ஊருக்கு வந்தவர்கள்

இவர்கள் இருவரும் மாணவர்கள் இதில் ஜமாலியின் தந்தை நஸ்ருள் ஜமால் ஹோமியோபதி மருத்துவர் . இருவரையும் கைதுசெய்து பின்னர் தந்தை நஸ்ருளை விடுதலை செய்தது காவல்துறை.எனது மகன் நல்ல சொற்பொழிவாளர் அவன் பீகார் மற்றும் மும்பை தவிர வெளியில் எங்கும் சென்றதில்லை பீகாரை சேர்ந்த காவல்துறை டெல்லி போலீசுக்கு தவறுதலாக தகவல் கொடுக்கிறது பின்னர் டெல்லி போலீஸ் அவர்களை அழைத்து சென்று தவறான வழக்கில் கைதுசெய்கின்றனர் பின்னர் இவர்கள் இருவரும் அப்பாவிகள் என்று தெரிந்த உடன் போலி பாஸ்போர்ட் எடுத்தது சம்பந்தமாக கைதுசெய்தோம் என்று இப்பொழுது காவல்துறை கூறுகிறது இவர்களை தீவிரவாதியாக சித்தரித்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் , இந்தியாவின் முன்னணி நளிதம் டைம்ஸ் , டெலிக்ராப் என்ற பட்னா பதிப்பு என்று கலக்கிய பத்திரிக்கைகள் இவர்களுக்கு இந்த தகவலை தந்தவர்கள் யார் ? இன்று அந்த இளைஞர்கள் அப்பாவி என்று தெரிந்ததும் இந்த பத்திரிக்கைகள் மறுப்பை வெளி இட்டு இருக்கலாமே குறிப்பாக பத்திரிக்கைகள் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் இந்துத்துவா சக்திகளுக்கு ஆதரவாக இருக்கிறது. எப்போது தான் திருந்துவார்களோ இந்த பத்திரிக்கைகள்.இதேபோல் இந்தியா முழுவதும் எத்தனை முஸ்லிம்கள் அப்பாவியாக கைது செய்து போய் வழக்கு போட்டு உள்ளே இருகிறார்கள்.இவர்களுக்கு துணைபோகும் குற்றம் பரப்புதல் வேலையை செய்யும் ஊடகங்கள் திருந்தவே திருந்தாது போலும்.
நன்றி : கிளியனூர் நெட்
தகவல் : முஹம்மது இர்ஃபான்