மக்கள் சேவையில் மகத்தான பணியாற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மதுரை மாவட்ட மாநகர் நிர்வாகிகள் இந்த மாதத்தின் இரண்டாவது மாபெரும் மருத்துவ முகமாய் நடத்திக் காட்டியுள்ளது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் தனபாக்கியதம்மாள் டிரஸ்ட் JCI இணைந்து நடத்திய இந்த முகாமில் சர்க்கரை, ரத்தம் சம்பந்தமான நோய்கள், கண் நோய் , பெண்களுக்கு ஏற்படும் நோய்கள் போன்ற அனைத்து நோய்களுக்கும் மதுரையின் பிரபல மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் இரண்டு லட்சம் மதிப்பிலான மருந்துகளும் இலவசமாக வழங்கப் பட்டன.
இந்த முகாமில் மதுரை மாநகர மேயர் ராஜன் செல்லப்பா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.அவருக்கு ஏற்கனவே திருக்குர்ஆன் தமிழாக்கம் மதுரை மாவட்ட நிர்வாகிகளால் வழங்கப்பட்டு விட்டதால் இஸ்லாம் குறித்த நூல்கள் வழங்கப் பட்டன.
.மாநில நிர்வாகிகள் முஹம்மத் முனீர், முஹம்மத மைதீன், மாவட்ட நிர்வாகிகள் மாநகர நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட இந்த முகாமில் சுமார் 750 பங்கேற்று பயன் அடைந்தனர்
இந்த மருத்துவ முகாமில் நடைபெற்ற ரத்த தான முகாமில் 26 பேர் ரத்ததானம் செய்தது குறிப்பிடத் தக்கது.