வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பள்ளிவாசல்களின் புனிதத்தை களங்கப்படுத்தும் பாசிச கும்பல்கள் அவ்வப்போது பள்ளிவாசல்களில் பன்றியை கொன்று வீசுவது,
மலத்தை வீசுவது, கற்களை வீசுவது, விநாயகர் ஊர்வலங்களின் போது பள்ளிவாசலுக்குள் செருப்பை வீசுவது போன்ற இஸ்லாமிய விரோத செயல்களில் ஈடுபட்டுக் கொண்டுள்ளன.
கடந்த சிலநாட்களுக்கு முன் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் முஸ்லிகளுக்கு எதிராக இந்து முன்னணி போஸ்டர் INTJ TMMK இணைந்து உடனடியாக அந்த போஸ்டர்கள் காவல் துறையால் கிழிக்கப்பட்டன.
தற்போது மதுரை கீழமாத்துரில் உள்ள பள்ளிவாசல் சுவற்றில் மனித மலம் கொண்டு எழுதி முஸ்லிம்களை கேவலமான முறையில் விமர்சித்துள்ளனர்.
இதை உடனடியாக காவல்துறை கவனத்திற்கு சம்பந்தப் பட்ட பள்ளி நிர்வாகிகள் கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்காததால் பள்ளி நிர்வாகத்தினர் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்!
இதற்கிடையில் மீண்டும் நள்ளிரவில் பள்ளியில் செருப்பு விளக்குமாறு போன்றவை வீசி எறியப்பட்டுள்ளன.மக்கள் கொதித்து போய் உள்ளனர்.
மதுரை INTJ மாவட்ட நிர்வாகத்தினர் காவல் துறை கண்காணிப்பாளர் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகு பள்ளிக்கு பாதுகாவலுக்கு போலிஸ் போட்டுள்ளனர்.ஆயினும் இந்த இழி செயலை செய்தவர்களை இன்னும் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்காததால் INTJ கண்டன போஸ்டர்களை ஒட்டியுள்ளது! இல்லையேல் விரைவில் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.