கடந்த சிலமாதங்களாக தொடர்கதையாக முஸ்லிம் பெயர்தாங்கிகள் மாற்று மதத்தவர்களை திருமணம் செய்வதும், அதை பகிரங்கமாக பெற்றோர்களின் துணையுடன் பத்திரிக்கை அச்சடித்து வெளியிடுவதுமாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இதை நம் இணையத்திலும் வெளியிட்டுள்ளோம். மேலும் ஒரு தொடர்கதை சம்பவம் அரங்கேறியுள்ளது!. இங்கே காணும் இந்த பத்திரிக்கையில் பெண்ணின் பெற்றோர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, தங்களை அன்புடன் வரவேற்கும் என்ற இடத்தில் மணமகனின் பெற்றோர்களின் பெயர் மட்டுமே உள்ளது.
இதனால் இந்த திருமணம் பெண்ணின் பெற்றோர்களின் சம்மதத்துடன் நடைபெற்றதா என்பதில் சந்தேகம் உள்ளது. ஆனால் எத்தனையோ இஸ்லாமிய பெண்களை மாற்று மதத்தினார்கள் திருமணம் செய்து, பின் அவர்களை அம்போ என்று விட்டுவிட்டு சென்றாலும், இந்த பெண்கள் காதலின் மோகத்தில் சிக்கி தங்களின் எதிர்காலத்தை தாங்களே சீரழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இவர்கள் இன்னும் பாடம்படிக்கவில்லை என்றே தோன்றுகின்றது. இது போன்ற பெண்கள் நம் சமுதாயத்திற்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தி விடுகின்றனர்.
எங்கே செல்கிறார்கள் நம் பெண்கள்? என்ன செய்யப் போகிறோம் நாம்?.
நம் சமுதாயப் பெண்கள் மாற்று மதத்தவருடன் ஓடிப் போகும் செய்திகள் தினம் தினம் வந்து கொண்டே உள்ளன.இந்த அசிங்கத்தை பத்திரிகை அடித்து, ஊரைக் கூட்டி,சமுதாயம் பெருமளவில் வசிக்கின்ற பகுதிகளில் உள்ள சபைகளில் இந்த அவலம நித்தமும் நிறைவேறுகிறது.
கடந்த மாதத்தின் நம் கண்ணில் பட்ட மூன்றாவது நிகழ்வு இது! தவறைத் துணிந்து செய்யக் கூடிய நிலை வந்துள்ளது. மாதம் மாறி செல்வது ஒரு புறம் என்றால் இஸ்லாமிய அடையாளங்களுடன் இஸ்லாத்தை இழிவு படுத்தும் நோக்குடன் முஸ்லிம்கள் பெருமளவில் வசிக்கும் திருவல்லிக்கேணியில் இந்த திருமணத்தை நிகழ்த்துவது வேண்டும் என்றே நம்மை வம்புக்கிழுப்பது போல் உள்ளது!. இதற்க்கு என்ன செய்யலாம் என சமுதாய இயக்கங்களும், மகல்லா ஜமாஅத்துகளும் உடனடியாக முடிவெடுத்து களம் இறங்க வேண்டும்.
-இப்னு ஹுசைன்.http://www.onlinesengiskhan.com/2012/02/blog-post_07.html

