திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Monday, November 15, 2010

பீஜேயின் அநீதிக்கு எதிராக அணி திரளும் அடலேறுகள்!

,

அடுத்தவன் பிள்ளைக்கு உரிமை கொண்டடுவதைப் போல், சகோதரர் பாக்கர் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்தய தவ்ஹீத் ஜமாஅத்தை, தனது குடும்பச்சொத்தாக்க  நினைக்கும் பீஜேயின் அயோக்கியத்தனத்தை கண்டித்து நாம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில்  இணைந்தோம். நம்மை தொடர்ந்து, தமிழகம் மட்டுமன்றி உலகின் பல பாகங்களிருந்தும் பீஜேயின் அநீதியை கண்டித்து சகோதர்கள் பாக்கர் தலைமையில் சிலர் இணைந்தும், பலர் ஆதரவு தெரிவித்தும் வருகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

அந்த வரிசையில் குவைத்தில் பணியாற்றும் ததஜ உறுப்பினர் சகோதரர் ஏ.கே. ஜாஹித் பிர்தவ்ஸ் அவர்கள் நேற்று  இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில்  தன்னை இணைத்துக்கொண்டார். அவரை பேட்டி கண்டோம். அவரின் பேட்டியில் இருந்து முக்கியத்துளிகள்;

''நான் ஆரம்பத்தில் தமுமுகவில் இருந்தேன். அந்த காலகட்டத்தில் மயிலாப்பூரில் உள்ள ஆகா மொய்தீன் பள்ளிவாசலில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தேன். பின்னர், பீஜே ததஜ தொடங்கியபோது நானும் தமுமுகவிலிருந்து வெளியேறினேன். மேலும் நான் பீஜே மீது அளவு கடந்த அன்பு கொண்டவன். எந்த அளவுக்கென்றால், பீஜெயிக்கு 'ஹார்ட் அட்டாக்' ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில், அவர் மீது கொண்ட பாசத்தின் காரணமாக,

இறைவா! சத்தியத்தை சொல்லும் இவரை சடுதியில் பறித்துவிடாதே! எனது ஆயுளில் குறைத்தேனும், அண்ணனின் ஆயுளை நீட்டித்து தா!! என்று பிரார்த்தித்தேன். நேற்றுவரை பீஜே மீது அதே பாசத்தோடுதான் இருந்தேன். ஆனால் கண்ணுக்கு முன்னாடி ஒரு மாபாதக செயலை, [இதஜ அபகரிப்பு] அவர் செய்ததை என்னால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. எனவே, இவரின் அநீதிக்கு எதிராக, பாக்கர் தலைமையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைகிறேன் என்று கூறினார். தொடர்ந்து,

பீஜே ஆலிம் ரப்பாணியாக இருந்து, ஆலிம் நப்சானியாக மாற்றி, இன்று ஆலிம் ஷைத்தாணியாக காட்சி தருகிறார். அவரது சதியை அல்லாஹ் முறியடிப்பான் இன்ஷா அல்லாஹ் என்று கூறி முடித்தார். thank:

0 comments to “பீஜேயின் அநீதிக்கு எதிராக அணி திரளும் அடலேறுகள்!”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates