திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Monday, November 15, 2010

RSS, BJP-க்கும் இருக்கும் துணிவு ததஜவுக்கு இல்லையா?

,

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை அமெரிக்கக் சி.ஐ.ஏ வுடன் தொடர்பு  படுத்தி சர்ச்சைக்குரிய கருத்தை  வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னாள் தலைவர் சுதர்சனை ஆர்.எஸ்.எஸ்ஸும், பாரதீய ஜனதாவும் கைவிட்டுள்ளது. சோனியா குறித்து சுதர்சன்  வெளியிட்ட கருத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ். அறிவித்து விட்டது.

இதற்கிடையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பா.ஜ.கவின் மூத்த தலைவரும் மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வருமான கைலாஷ் ஜோஷி,


காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை  தெரிவித்து, சுதர்சன் பெரிய தவறை செய்துவிட்டார். இதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்போ, பாஜகவோ செய்வதற்கு ஒன்றுமில்லை. இந்த விஷயத்தை காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் இத்துடன் விட்டுவிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று பேசியுள்ளார்.


இந்துத்துவாக்களுக்கு தாங்கள்  மட்டுமே தேசபக்தர்கள் என்ற சிந்தனை எப்போதும் உண்டு. அந்த நினைப்பில் ஒரு மிகப்பெரும் அரசியல் கட்சியின்  தலைவியை குறைகூறி, அதற்காக இப்போது விழித்துக்கொண்டிருக்கிறார் சுதர்சன். இந்த நிலையில் அவர் ஒரு காலத்தில் தலைமை வகித்த ஆர்.எஸ்.எஸ்ஸும், பாஜகவும் கைவிட்டது அவருக்கு பேரிடியாகும்.


இத்தனை காலமும் இத்தாலிக்காரர் என விமர்சித்த ஆர்.எஸ்.எஸ், பாஜகவும் கூட இன்று அரசியல் நாகரியத்தை பின்பற்ற முன் வந்து விட்டது. சோனியாகாந்தி தரப்பில் நியாயமும்,சுதர்சன் தரப்பில் தவறும் இருக்கின்ற காரணத்தால் பகிரங்கமாக சுதர்சன் செய்தது தவறு. சுதர்சன் விசயத்தில் நாங்கள்  ஒன்றும் செய்ய இயலாது என்று கூறி நியாயத்தின்  பக்கம் நிற்கிறது இந்துத்துவா.



ஆனால் கடந்த 2 வருடமாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இயங்கி வந்த ஒரு அமைப்பை கள்ளத்தனமாக அபகரிப்பது தவறு என பிஜெயை ததஜ தட்டிக் ததஜ நிர்வாகம் முன்வராதது ஏன்? பீஜேயின்  இந்த அபகரிப்பை ததஜ நிர்வாகம் ஆதரிக்கிறதா? தெளிவான மோசடி என்று தெரிந்த பின்னும் ஆதரிப்பதுதான் ததஜவின் குர்ஆண்-ஹதீஸ் வழிமுறையா?  எங்கள் ஜமாஅத்தில் எவ்வளவு பெரிய ஆள் தவறு செய்தாலும் தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்போம் என்ற ததஜ  நிர்வாகம், பீஜேயின் இந்த மோசடி குறித்து நடவடிக்கை எடுத்து தன்னை சுயமான அதிகாரமுள்ள அமைப்பு என்று காட்டப்போகிறதா? அல்லது பீஜேயின் கைப்பிடிக்குள் இருக்கும் பொம்மை என்று காட்டப்போகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
thank:

0 comments to “RSS, BJP-க்கும் இருக்கும் துணிவு ததஜவுக்கு இல்லையா?”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates