அன்பிற்குரிய சகோதரர்களே ! அஸ்ஸலாமு அலைக்கும்!
இறையச்சம் ஏதுமின்றி , மார்க்க சிந்தனை ஏதுமின்றி இந்திய தவ்ஹீத் ஜமாத்தை ஒரு மூன்றாம் தர திருடனைப்போல் ,தன்னுடைய குடும்பத்தின் பெயரில் பதிவு செய்து குழப்பம் செய்து வரும் , பி.ஜே. அன் கோ. இதற்க்கு விளக்கம் என்ற பெயரில் உளறி வருகிறார்.
திறந்த வீட்டில் நுழைந்து திருடிவிட்டு ,கையும் களவுமாக மாட்டிய திருடன் நீ ஏன் உன் பொருளை பத்திரமாக வைக்கவில்லை என்பது போல், நீ பிறப்பு சான்றிதழ் வாங்கவில்லை அதனால் பிள்ளை எனக்குத்தான் சொந்தம் என்பது போல் , நீ ஊரை கூட்டி திருமணம் செய்திருந்தாலும் , பதிவு செய்யாததால் உன் மனைவி எனக்கு சொந்தம் என்பது போல் ,அப்பட்டமான அபகரிப்புக்கு , இவர் சொல்லும் விளக்கத்தை பார்த்து சமுதாயம் காறித்துப்புகிறது!
முதலில் மார்க்க அடிப்படையில் மற்றவர்களின் பெயரை அபகரிக்க காரணமிருக்கிறதா? ஒரு முஸ்லிமிற்கு சொந்தமான பொருள் மற்ற முஸ்லிமுக்கு ஹராம். மற்ற முஸ்லிமின் வியாபரத்திலோ , கொடுக்கல் வாங்கழிலோ மற்ற முஸ்லிம் தலையிடக்கூடாது! ஏன் ஒரு சபையில் ஒருவர் அமர்ந்திருந்து அவர் எழுந்து சென்று திரும்பினால் 'அந்த இடம் அவருக்கே உரிமையானது" என பிறருடைய உரிமைகளில் தலையிடுவதை இஸ்லாம் தடுக்கின்ற போது, எந்த ஒரு உரிமையுமின்றி இந்திய தவ்ஹீத் ஜமாத்தை பதிவுசெய்ததை குரான் ஹதிஸ் அடிப்படையில் நியாயப்படுத்த முடியுமா?
இந்த திருட்டு தனத்தை நியாயப்படுத்தி 'இவர்கள் இயக்கம் கண்டதே தவறு ! என கூறுவதில் இருந்தே இவர்களின் பொறமை தெரிகிறது! இவரிடம் அனுமதி வாங்கித்தான் தமிழக முஸ்லிம்கள் இயக்கம் நடத்தவேண்டுமா?
தவ்ஹீதின் பெயரை கெடுக்கிறார்கள் அதைத்தடுக்கவே இந்த தகிடு தத்தம்! என சொல்லும் இவர்கள்தான் தவ்ஹீதுக்கு ஹோல் சேல் ஏஜென்ட் என்றும் ஏகத்துவத்துக்கு ஏக போக குத்தகைதரர் போல கூறுவது நகைப்புக்குரியது! எத்தனை பெயரை இப்படி உங்களால் பதிவு செய்ய முடியும் !
இது போல இஸ்லாத்தின் பெயரை தவறாக பயன்படுத்தும் அமைப்புகளிடம் இருந்து இஸ்லாத்தை காக்க எல்லா பெயர்களையும் பதிவு செய்வீர்களா?
இதைப்போல் டி.என்.டி.ஜே. என்ற பெயரில் குழப்பமேற்படுத்த
தமிழ் நில தவ்ஹீத் ஜமாஅத் , தமிழ் நேசனல் தவ்ஹீத் ஜமாஅத்
தமிழ் மாநில தவ்ஹீத் ஜமாஅத் , தமிழ் நாயக தவ்ஹீத் ஜமாஅத்
என்று பெயரை பதிவு செய்து குழப்பமேற்படுத்த எவ்வளவு நேரமாகும்?
இப்படி ஒரு பெயரை பதிவு செய்வது என ஏற்கனவே நாங்கள் முடிவு செய்திருந்தோம் என கூறுவது உண்மை எனில் அதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும் .ஏன் எனில் இது போன்ற முக்கிய முடிவுகள் பேசப்பட்டிருந்தால் அது மசுராவில் பேசப்பட்டால் அது மினிட் புக்கில் எழுதப்பட்டிருக்கும்.
இயக்கத்தை இத்தனை வருடம் பதிவு செய்யாமல் நடத்தலாமா? [நாம் டிரஸ்ட் சட்டத்தில் பதிவு செய்துள்ளோம்] என நம்மை கேட்கும் இவர்கள் ஏற்கனவே முடிவு செய்த விஷயத்தை இத்தனை காலம் பதிவு செய்யாமல் தள்ளிப்போட்டதேன் ?
டிரஸ்ட் இல் பதிவு செய்தால் பணம் கொடுத்தவர்கள் கேள்வி கேட்க முடியாது! இவர்கள் மக்களை [ஆட்டைய போட] ஏமாற்றவே டிரஸ்ட் ஆக பதிவு செய்தனர் என கூறும் நீங்கள் உங்கள் பெயரில் உள்ள முஸ்லிம் மீடியா டிரஸ்ட். முஸ்லிம் டிரஸ்ட் , மஸ்ஜிதுல் முபாரக் டிரஸ்ட் , மஸ்ஜிதுல் ரஹ்மான் அந்நூர் டிரஸ்ட் போன்ற டிரஸ்ட்-களை, பல முறை கேட்டும் இன்னும் ஜமாஅத் பெயரில் பதிவு செய்யாமல் உங்கள் பெயர்களிலேயே வைத்திருப்பது 'ஆட்டைய போடத்தானா?
தனியார் பேரிலோ டிரஸ்ட் பேரிலோ சொத்து வனாக கூடாது! ஜமாஅத் பெயரில் தான் சொத்து வாங்க வேண்டும் என கிளைகளுக்கு சொல்லும் நீங்கள் அதை கடுகளவும் பின்பற்றாமல் , மதுரையில் ஒருவர் ஜமாத்திற்கு தந்த சொத்தை, இன்னும் பி.ஜே பெயரில் இருந்து மாற்ற பத்திர பதிவுக்கு காசில்லை கதை அளப்பதேன்!
இப்போது தவ்ஹீதை காக்கிறோம் என அடுத்தவன் பெயரை அபகரிக்க புறப்படும் நீங்கள் உங்கள் மாநில் ஆக்டிங் தலைவர் தான் நடத்திய தமிழகத்தில் தவ்ஹீத் என்றபெயரில் இருக்கும் ஒரே இதழை , அதன் உரிமையாளர் பல தடவை கேட்டும் ஏன் தவ்ஹீதைக்காக்க அதை கையில் எடுக்க வில்லை?
தவ்ஹீதின் பெயரால் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றதை பார்த்து தான் நாங்கள் இதை செய்தோம் என கூறும் நீங்கள் பாக்கர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் என அல்லாஹ் மீது ஆணையிட்டு கூறத்தயாரா?
அவர் அப்படியே அந்த விழாவில் கலந்து கொண்டார் என்று வைத்துக்கொண்டாலும் நீங்கள் பதிவு செய்தது மார்ச் மாதம்! பாக்கர் கலந்துகொண்டது ஏப்ரல் மாதம் ! பாக்கர் இந்த விழாவில் கலந்து கொள்வார் என உங்களுக்கு வஹி வந்ததா?
அப்படியே வஹி வந்தாலும் ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் எனும் போது நாங்கள் செய்த தவறுக்கு நீங்கள் செய்த அபகரிப்பு தீர்வாகுமா?
தவ்ஹீதை காக்கத்தான் இதை செய்தீர்கள் என்றால் , தவ்ஹீத் வாதிகளை அல்லவா அதற்க்கு தேர்வு செய்திருக்க வேண்டும்? உங்களின் ஒட்டு மொத்த குடும்பத்தை தேர்ந்தெடுத்தது ஏன் ? அழகிரி ,ஸ்டாலின் , கனிமொழி மாறன் என குடும்ப அரசியல் செய்யும் கருணாநிதிக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?
சகோ.பீஜேவின் புதிய சங்கத்தின் சட்டப்படியான நிர்வாகிகள் பின்வரும் நபர்கள்தான்.
ஜெ. முஹம்மது (பீஜேவின் மூத்த மகன்) - தலைவர்
ஒய். சகுபர் நவாஸ் ( பீஜேவின் சகலை) - துணைத் தலைவர்
எச். ஹிதாயத்துல்லாஹ் (பீஜேவின் மைத்துனர்) - பொதுச் செயலாளர்
ஜே. யாசிர் (பீஜேவின் இளைய மகன்) - துணைப் பொதுச் செயலாளர்
எச். சம்சுல்ஹுதா (பீஜேவின் மைத்துனர்)- பொருளாளர்
ஒய். அஸ்லம் (பீஜேவின் சகலையின் மகன்) - நிர்வாக உறுப்பினர்
ஜே. ஜாபிர் (பீஜேவின் கடைசி மகன்) - நிர்வாக உறுப்பினர்
எச். சாதிக் (பீஜேவின் மைத்துனர்) - நிர்வாக உறுப்பினர்
ஜெ. முஹம்மது (பீஜேவின் மூத்த மகன்) - தலைவர்
ஒய். சகுபர் நவாஸ் ( பீஜேவின் சகலை) - துணைத் தலைவர்
எச். ஹிதாயத்துல்லாஹ் (பீஜேவின் மைத்துனர்) - பொதுச் செயலாளர்
ஜே. யாசிர் (பீஜேவின் இளைய மகன்) - துணைப் பொதுச் செயலாளர்
எச். சம்சுல்ஹுதா (பீஜேவின் மைத்துனர்)- பொருளாளர்
ஒய். அஸ்லம் (பீஜேவின் சகலையின் மகன்) - நிர்வாக உறுப்பினர்
ஜே. ஜாபிர் (பீஜேவின் கடைசி மகன்) - நிர்வாக உறுப்பினர்
எச். சாதிக் (பீஜேவின் மைத்துனர்) - நிர்வாக உறுப்பினர்
தவ்ஹீதை காக்க ஜமாத்தில் இவர்களை தவிர வேறு ஆளே இல்லையா? பி.ஜே.முகமது எப்போது இட ஒதுக்கீடிற்காக போராடினார்.? என்ன தியாகம் செய்தார் ? போராடினார் என பொய்யான தகவலை தந்து இருக்கின்றீர்களே ! உங்கள் குடும்பத்தார் எப்போதாவது போராட்டங்களில் கலந்து கொண்டதுண்டா?
முஹம்மத் லட்சியத்திற்காக போராடினாரா? இல்லை லட்சுமிக்க்காக போராடினாரா? அவர் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடிற்கா போராடினார் ? லட்சுமியின் தந்தை இடத்தை மீட்பதற்காக ஜமாஅத் காரை எடுத்து சுற்றி சுற்றி போராடினர். கடைசியில் நீங்கள் லட்சுமி தந்தையிடம் போட்ட ஜென்டில் மென் அக்ரிமேண்டுக்காக உடலோடும் உயிரோடும் கலந்த லட்சுமியை வேண்டுமானால் தியாகம் செய்திருக்கலாம்!!
தவ்ஹீத் வாதிகள் தான் இல்லை ! குறைந்த பட்சம் தொழுகையாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டாமா? அது சரி நீங்கள் தொழுதால் அல்லவா மற்றவர்களை சொல்ல!
தொழுகையை விடுங்கள் குறைந்த பட்சம் ஒழுக்கமாவது உண்டா ? உங்கள் மைத்துனர்களிடம்? போஸ்ட் ஆபீஸ் தெருவில் வந்து கேட்டால் தெரியும் உங்கள் புத்திர சிகாமணியின் லட்சணமும் , தொடை தெரிய வேட்டி கட்டி திரியும் உங்கள்
மை [தது] னர்களின் கதை. இவர்களை வைத்துதான் தவ்ஹீதை காக்க போகிறீர்களா?
பொறாமையை விட்டு நிதானத்தோடு சிந்தியுங்கள்! நீங்களும் வழிகேட்டு நீங்கள் சொல்வதை எல்லாம் கண்மூடித்தனமாக பின்பற்றும் கொள்கை சகோதரர்களையும் வழி கெடுக்காதீர்கள்! உங்கள் வழியில் நீங்கள் செயல் படுங்கள் ! எங்கள் வழியில் நாங்கள் செயல் படுகிறோம் ! 'நம்மில் இறுதி வெற்றி யாருக்கு என்பதையும் ,இழிவு தரும் வேதனை யாருக்கு என்பதையும் அல்லாஹ் நன்கறிந்தவன்" எனும் இறை வசனத்தை நம்பி தவறுகளை குரான் ஹதீஸ் அடிப்படையில் சுட்டிக்காட்டி திருத்துங்கள்!
உங்கள் அறிவுரை தேவை அற்றவர்களாக நாங்கள் இல்லை என உமர் []ரலி] தான் சக தோழர்களிடத்தில் கூறியதைப்போல் நாங்களும் கூறுகிறோம்! வல்ல இறைவன் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டட்டும்.