திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Wednesday, November 24, 2010

தாய் எனும் வைரம்

,
அந்த சிறுவனின் வயது இரண்டோ மூன்றோதான். ஆனால் அவனின வருகை, சபையில் உள்ள எல்லோரையும் மகிழ்ச்சியடைய வைக்கும். ஏன்? ஏனெனில் அவனுடைய 'அதப்'(Adaab - குணநலன்க‌ள்) அத்தனை அழகானது. எப்பொழுதும் மரியாதையுடன் எல்லோரையும் அழைப்பதும், அழைப்பிற்கு தாழ்ந்து பதில் சொல்வதும், நம்முடைய அகராதியில் சொல்ல வேண்டுமென்றால் ப்ளீஸ், தேன்க்யூ, மே ஐ?...போன்ற மதிப்பை ஏற்படுத்தும் சொற்களை உபயோகிப்பதும், அடக்கத்தை தன் செயல்களில் காட்டுவதாலும் அச்சிறுவனை ஊரே மெச்சியது. இந்த பாராட்டுக்கெல்லாம் உரிய அந்த சிறுவன் யார், இமாம் அஹ்மது பின் ஹன்பல் (ரஹி).

அத்தனை சிறு வயதிலேயே அவர் ஊரே மதிக்கும், மரியாதை தரும், புகழும் சிறுவனாய் திகழ்ந்தது எப்படி? அவரின் நன்னடத்தையால். இமாம் அஹ்மதின் (ரஹி) தாய்க்கு தெரிந்திருந்தது, எல்லா 'இல்மு'க்கும்(அறிவு / ஞானம்) முன்னர் ஒரு குழந்தை கற்க வேண்டியது அதபே!! அதாவது நன்னடத்தையே. எனவே அத்தாயானவர்கள் இமாம் அவர்களுக்கு அதிகமாக குர்'ஆன் ஞானத்தையோ, அல்லது ஹதீத் ஞானத்தையோ அளிக்கவில்லை, மாறாக சாப்பிடும்போது, சபைக்குள் வரும்போது, பெரியவர்களை சந்திக்கும்போது என எல்லா இடங்களிலும் நன்முறையில் நடந்து கொள்வது எப்படி என்பதை நன்முறையிலும் அதிகமாகவும் கற்றுக் கொடுத்தார்.


ஒரு முறை இமாமவர்கள், அவர்களின் மிகச் சிறு வயதில் ஒரு சபையில் இருக்கும்போது ஒரு அரபி, அவரின் நண்பரிடம் கூறினார், நானும் என் குழந்தைகளுக்காக பெரும் பெரும் செலவெல்லாம் செய்து நல்ல நல்ல '
மு'அத்தபீன்'களைக் கொண்டு அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறேன்...என்றாலும் இந்த சிறுவனை (இமாம் அஹ்மது) போல அவர்களின் குணநலன்கள் இல்லை என்று.

அந்த காலங்களில் அரேபிய வழக்கப்படி 'மு'அத்தபீன்' எனப்படுபவர்களிடம் குழந்தைகளை அனுப்பி பாடம் படிக்க வைப்பதும், அல்லது 'மு'அத்தபீன்'களை வீட்டீலேயே வரவைத்து குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தருவதும் பொதுவான ஒரு செயல். யார் இந்த 'மு'அத்தபீன்கள்? 'அதப்' என்னும் வார்த்தையில் இருந்து தோன்றிய பெயரே அது. "அதபை சொல்லித் தருபவர்கள்" அதாவது குழந்தைகளுக்கு நன்னடத்தையையும், நல்ல குணநலன்க‌ளையும் சொல்லித்தருபவர்கள்.


இப்பொழுது புரிந்ததா அந்த அரபியின் வருத்தம். இன்னொன்றையும் உற்று நோக்கினால் புரியும். இமாமவர்கள் ஞானமெல்லாம் கற்று பெரிய இமாம் ஆகும் முன்னர் அவரும் ஒரு 'மு'அத்தபீன்' ஆகவே இருந்தார் என்றால் அது மிகையாகாது. யார்தான் விரும்ப மாட்டார், தன் பிள்ளையின் நற்குணங்களை ஊரே மெச்ச வேண்டும் என?


பற்பல இமாம்களின் சரித்திரத்தை படிக்கும்போது அவர்களின் வாழ்வையும், குணங்களையும், கொள்கைகளையும் கண்டு வியந்து போகிறோம். ஆனால் அதை கற்றுத்தந்த தாய்மார்களைப் பற்றி குறைந்த தகவலே நமக்கு கிட்டுகிறது. இப்படி, அவர்களின் பெயர் சரித்திரத்தில் தத்தம் பிள்ளைகளாலேயே இடம் பெறுகிறது. இங்கும் இமாம் அவர்களின் குணநலஙளில் சீரிய கவனம் செலுத்தியதாலேயே, அவர் ஞானமும் அதிகம் பெற்றார், ஞானமும், நன்னடத்தையும் ஒருங்கே அமைந்ததனால் அல்லாஹ்வின் மார்க்கத்தில் அசைக்க இயலா இடத்தை பெற்றார். எனவே தாய்மார்கள் சிந்திக்க வேண்டியது என்ன, உங்களால் மட்டுமே உங்களின் பிள்ளைகளின் வாழ்வை செப்பனிட முடியும். நேரம் வீணாவதன் முன், இன்றே, இப்பொழுதே, அதற்கான வேலைகளில் கவனம் செலுத்துங்கள்.
    homeschoolingintamil

0 comments to “தாய் எனும் வைரம்”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates