வானங்களையும், பூமியை யும் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்...
அல்லாஹ் தனது படைப்புக்களில் சிறந்த படைப்பாக மனிதனைப் படைத் துள்ளான். (95:4)
மனிதப் படைப்பில் அவனை மட்டும் வணங்குபவர்களை சிறந்த சமுதாயம் என்று கூறுகிறான். (3:110)
தன்னை நம்பி வணங்கி நல்ல அமல் செய்பவர்களுக்கு பலவிதமான பரிசுகளை யும் உயர்வான சொர்க்கத்தையும் தருவ தாக வாக்குறுதி அளித்துள்ளான். (2:25)
சர்வ வல்லமை படைத்த அல் லாஹ், தன்னை வணங்கும் அடி யார்களிடம் தனக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்த பின்பும் அவனிடம் கையேந்தும் படி கட்டளை இடுகிறான். ஆயினும் அல்லாஹ்விடம் பழக்கம் முஸ்லிம்களாகிய நம்மிடம் மிக மிக குறைவாகவ உள்ளது. அல்லாஹ் தன்னை வணங்கும் முறைகளை, தன்னுயை அடியார் களுக்கு பலவிதமாக கூறி இருக்கி றான்.
தொழுகை
தொழுகை என்னும் வணக்கத் தைச் செய்வதாக இருந்தால், உளு என்னும் கை, கால், முகம் ஆகிய வற்றை சுத்தம் செய்ய வேண்டும் எனவும், கூட்டாக, ஜமாஅத்தாக இணைந்தே தொழ வேண்டும் என்றும் கட்டளை இடுகிறான். மேலும் குறிப்பிட்ட நேரத்தில் தொழ வேண்டும் எனவும் கட்டளை இடுகிறான்.
நோன்பு
நோன்பு நோற்பதை வருடத்தில் ரமலான் மாதம் முழுவதும் ஒரு வணக்க முறையை ஏற்படுத்தி உள்ளான், நோன்பு நோற்பவர், அதிகாலை பஜ்ரு முதல் உண்ணாமல் பருகா மல் இருக்க வேண்டும் எனவும், தாம்பத்ய உறவு கொள்ளாமல் இருக்க வேண்டும் எனவும் வழி முறையை ஏற்படுத்தி உள்ளான்.
ஜகாத்
ஜகாத் என்னும் ஏழை வரியை வணக்கமாக ஆக்கிய அல்லாஹ், ஒவ்வொரு பொருளுக்கும் குறிப் பிட்ட அளவை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் என்கிறான். அது மட்டும் இல்லாமல் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று எட்டு வகையான நபர்களை தனது வேதத்தின் மூலம் கட்டளை இடுகிறான்,
ஹஜ்
ஹஜ் என்னும் வணக்கத்தின் மூலம், இறை இல்லமாம் கஅபாவை, தனது ஆயுளில் வசதி படைத்த ஒவ்வொருவரும் தரிசிக்க வேண்டும் என்று கட்டளை இடு கிறான். குறிப்பிட்ட நாட்களில்தான் ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும் எனவும் கூறுகிறான்.
சிந்திக்கவும்
எந்த வணக்கமுறையாக இருந் தாலும், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் - குறிப்பிட்ட மாதத்தில் - குறிப்பிட்ட முறையில்தான் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் கூறுவதைக் காண முடிகிறது.
பிரார்த்தனை
துஆ என்று கூறப்படும் பிரார்த்த னையைப் பொறுத்த மாத்திரம், உளு செய்ய வேண்டியது இல்லை, குறித்த நேரத்திலோ, குறித்த மாதத் திலோ, குறிப்பிட்ட முறையிலோ செய்ய வேண்டியது இல்லை.
மாறாக, நின்ற நிலையிலும், அமர்ந்த நிலையிலும், விலாப் புறங்களின் மீது சாய்ந்த நிலையிலும் பிரார்த்தனை செய்வார்கள் என்று குர்ஆனில் கூறுகிறான்.
மேற்கண்ட வேத வசனத்தின் மூலம், அல்லாஹ்விடம் கையேந்துவதற்கு எந்தவிதமான நிபந்தனையும் இல்லை. எந்த சூழ் நிலையிலும் அவனிடம் பிரார்த் தனை செய்யலாம். உதவிக்கு அழைக்கலாம். அல்லாஹ்வுக்கும் - நமக்கும் இடையில் பிரார்த்தனை செய்வதற்கு எவ்விதமான இடைத் தரகரும் தேவை இல்லை என்று தெளிவாக அறிந்து கொள்கிறோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்களது கால்களில் அணிந்துள்ள செருப்பின் வார் அறுந்தாலும், அல்லாஹ்விடம் துஆச் செய்து கேளுங்கள் என்றும், ஏந்திய கரங்களை வெறுமனே அனுப்புவதற்கு அல்லாஹ் வெட் கப்படுகிறான் என்றும் கூறியுள் ளதை நபிமொழிகளில் காண முடிகிறது.
மேலும் அல்லாஹ் குர்ஆனில் கூறும்போது, எனது அடியார் களாகிய அவர்கள் என்னைப் பற்றி கேட்டால், நான் அருகில் இருக்கி றேன். துஆச் செய்வோரின் பிரார்த் தனைகளுக்கு பதில் அளிக்கிறேன். அவர்கள் என்னையே அழைக்கட் டும். என்னையே நம்பட்டும் அப் போதுதான் நேர்வழி பெறுவார்கள் என்றும், நான் அடியார்களுக்கு (அவர்களது) பிடரி நரம்பை விட சமீபமாக இருக்கிறேன் என்றும் கூறுகிறான்.
நபி (ஸல்) அவர்கள் பிரார்த் தனை தான் வணக்கம் என்றும், பிரார்த்தனை தான் தலை சிறந்த வணக்கம் என்றும் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள். காரணம் என்ன?
சிந்தித்துப் பாருங்கள். ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள லாம்.
எந்த வணக்கமாக இருந்தாலும், நூற்றுக்கு நூறு முழுமனதோடு அல்லாஹ்வை வணங்க முடியாது - சிறிதளவாவது முகஸ்துதி கலந்துவிடும். பிரார்த்தனை ஒன்றில் மட்டுமே முகஸ்துதி கலக்கவே செய்யாது. பிரார்த்திக்கும் ஒவ்வொருவரும் என்னுடைய பணத்தாலும் பிர யோசனம் இல்லை, என்னுடைய பலத்தாலும் என்னால் சாதிக்க முடியவில்லை என்று உளமார ஒத்துக் கொண்டு அடிமைத் தனத்தை வெளிப்படுத்த முடிகிறது.
பிரார்த்தனையினால் அல்லாஹ் தான் எஜமானன். மற்றவை எல் லாம் அடிமை என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.
எனவேதான் ""பிரார்த்தனை சிறந்த வணக்கம்'' என்ற அந்தஸ்தை பெறுகிறது. தலை சிறந்த வணக்கமாகிய பிரார்த்தனை என்னும் வணக்கத்தை எந்நேரமும் நடைமுறைப்படுத்த உங்களுக்கும் - எனக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக!
வ ஆகிரு தஃவானா அனில் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.
நன்றி- தௌஹீத் மாத இதழ்
தற்போதைய பதிவுகள்
Saturday, November 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)