திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Thursday, November 18, 2010

இப்ராஹீம் காசிமி விவகாரம்; கீழே விழுந்தேன் ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை என ஒப்புக்கொள்ளும் பீஜே!

,

மவ்லவி. இப்ராஹீம் காசிமி அவர்கள் ததஜவில் இருந்து விலகிய செய்திக்கு கள்ள வெப்சைட்டில் பதிலளித்த பீஜே, இப்ராஹீம் காசிமி மாநில பேச்சாளர் அல்ல என்று கூறியிருந்தார். உடனே நாம் ததஜவின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் இருந்து ஒரு செய்தியை ஆதாரமாக காட்டி, இப்ராஹீம் காசிமி மாநிலப் பேச்சாளர்தான் என்று நிரூபித்தோம். இப்போது பொறியில் சிக்கிய எலியாக சில விஷயங்களை பிதற்றியுள்ளார். அவற்றை பார்ப்போம்.

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் இணைய தளத்தின் செய்திப் பிரிவுக்கு செய்தி அனுப்புபவர்கள் சிலரை மாநிலப் பேச்சாளர் என்று எழுதி அனுப்பி அது அவ்வாறே செய்திப் பிரிவின் மூலம் வெளியிடப்படுவதுண்டு, சுட்டிக்காட்டப்பட்ட வுடன் அது திருத்டப்படுவது உண்டு. இது மநிலப் பேச்சாளர் என்பதற்கு ஆதாரமாகாது. என்று கூறி இப்ராஹீம் காசிமி மாநில பேச்சாளர் அல்ல என்று அடம் பிடிக்கிறார்.
ஒரு செய்தி ஒரு அமைப்பின் பெயரால் வெளியிடப்படுகிறது என்றால், அதை உண்மைப்படுத்துவது அந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அந்த அமைப்பின் சார்பாக இயங்கும் பத்திரிக்கைகள்தான். நாம் ஆதாரமாக காட்டியது பீஜேயின் கள்ளவெப்சைடுகளில் இருந்து அல்ல. ததஜவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து. எனவே அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து வெளியாகும் அமைப்பு சார்ந்த விஷயங்கள் அனைத்தும் அமைப்பின் அங்கீகாரம் பெற்றவையே. அப்படிப்பட்ட அங்கீகாரம் மிக்க செய்தியை ஏற்கக்கூடாதாம். இவர் கூறும் வியாக்கியானத்தை மக்கள் நம்பவேண்டுமாம்.

என்னை மாநிலப் பேச்சாளராக மாநிலத் தலைமை நியாமித்தது என்று இப்ராஹீம் காசிமி சொன்னாரா? அவரை அப்படி நியமித்த நிர்வாகி யார் என்று சொன்னாரா? மாநிலத் தலைமை அப்படி நியமிக்காவிட்டால் அவர் எப்படி மாநிலப் பேச்சாளர் ஆனார்? தன்னைத் தானே நியமித்துக் கொண்டாரா?
என்றும் பீஜே கேட்டுள்ளார்.

இவ்வாறு கேட்கும் பீஜே, மாநில நிர்வாகிகளால் நியமிக்கப்பட்டால்தான் தான் அவர் மாநிலப் பேச்சாளர் என்று கூறும் பீஜே, மாநில நிர்வாகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, முறையாக இணையதளத்திலும், உணர்விலும் அறிவிப்பு செய்த மாநிலப் பேச்சாளர்கள் பட்டியலை வெளியிடத் தயாரா? அப்படி வெளியிட்டு அந்த பட்டியலில் இப்ராஹீம் காசிமி இல்லை என்று நிரூபிக்கத் தயாரா?

இப்போது புதிதாக சகோதரர் அப்துர்ரஹ்மான் தாவத்தி அவர்களை மாநிலப் பேச்சாளர் இல்லை என்று கூறுகிறார். அப்படியாயின் பல ஆண்டுகளாக அவருக்கு சம்பளம் வழங்குவது எதற்காக? ஒருவரை மாநில அளவில் பிரச்சாரத்திற்கு தலைமை பயன்படுத்தி, அதற்காக அவருக்கு தலைமை மூலம் மாத ஊதியம் வழங்கப்பட்டால் அவருக்கு பெயர் என்ன?

மேலும், 07 -11 -2010 வரை மாநிலப் பேச்சாளராக அங்கீகாரம் பெறவில்லை பீஜெயால் குறிப்பிடப்படும் அப்துர்ரஹ்மான் தாவத்தி பற்றி, மாநிலப் பேச்சாளர் என்று இன்று நேற்றல்ல. பல ஆண்டுகளாக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள உணர்வின் பக்கங்களை எடுத்துக்காட்டினால் பீஜேயின் நிலை என்ன? [உணர்வில் வந்தது என் கவனத்திற்கு வரவில்லை என்று பீஜே சொல்லமுடியாது. ஏனெனில் அவரது இறுதிப் பார்வைக்கு பின்தான் உணர்வு அச்சுக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது]
அடுத்து, ததஜவில் இருந்து விலகியவுடன் இப்ராஹீம் காசிமி மீது ஹஜ் மோசடி குற்றச்சாட்டு வைக்கும் பீஜே, அவர் உண்மையில் மோசடி செய்திருந்தால் அவர் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? வெளியிட தயாரா? என்று கேட்டோம்.அதற்கு பதிலளிக்காததன் மூலம், இப்ராஹீம் காசிமி மீது தான் வீசிய அஸ்திரம் என்பது வழக்கமாக தனக்கு பிடிக்காதவர்கள் மீது வீசுவதுதான் என்று காட்டியுள்ளார் பீஜே.
ஆக, பீஜேயின் சமாளிப்புகள் ஜமாலியிடம் எடுபடலாம்; பாக்கரின் படைத் தளபதிகளிடம் செல்லுபடியாகாது என்று பீஜெயிக்கு சொல்லிக்கொள்கிறோம்.

0 comments to “இப்ராஹீம் காசிமி விவகாரம்; கீழே விழுந்தேன் ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை என ஒப்புக்கொள்ளும் பீஜே!”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates