பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
கடந்த 40 வருடமாக இறை மறுப்பு கொள்கையை கொண்டு இருந்து, அதை ஆயிரக்கணக்கான மக்களிடம் பிரச்சாரம் செய்து அதன் வழிக்கு மாற்றிய ஒரு அறிஞனின் வாழ்வில் ஏக இறைவன் ஏற்படுத்திய மாற்றத்தின் காரணமாக வணங்க தகுதியானவர் ஏகன் மட்டுமே என்ற கொள்கையை ஏற்று அதை உலகம் எங்கும் பயணித்து தன் வாழ்வில் ஏற்ப்பட்ட மாற்றத்தை எடுத்துச் சொல்லும் மனதத்துவ நிபுணர் முனைவர் அப்துல்லாஹ் அவர்கள், நேற்று (19.11.2010) துபையில் ஒரு நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினர்.

துபை தேய்ரா, ஈடிஏ டி பிளாக்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியினை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் அமீரக ஒருங்கிணைப்பாளர் கீழை ஜமீல் முஹம்மது அவர்கள் தலைமையேற்று, அறிமுக உரையை ஆற்றினார்.
அதன் பிறகு, டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்கள், புனித குர்ஆன் முழுமை பெற்ற குர்ஆன் (Holy Quran is Whole Quran) என்ற தலைப்பில் அருமையான விளக்கவுரையை நிகழ்த்தினார்.

அதன் பிறகு கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்தார். நிகழ்ச்சியினை கீழக்கரை சகோதரர்கள் பைரஹோ நஜீமுதீன் மற்றும் அல் காய்து ரஃபி அஹ்மது ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இன்று (20.11.2010) காராமா சென்டரில் மாற்று மத சகோதரர்களுக்கான நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அதன் பிறகு பயிற்சி முகாம் ஒன்று 21.11.2010 சனிக்கிழமை நடைபெற இருக்கிறது.
-இப்னு லத்தீஃபா.