M.ஷாமில் முஹம்மட்
1001 Inventions Exhibition- என்ற பெயருடன் பிரிட்டனை தளமாக கொண்டு இயங்கும் ஆய்வு மையங்களான ALJ Community Initiatives மற்றும் the Foundation for Science, Technology and Civilization (FSTC). ஆகியன இணைந்து நவீன விஞ்ஞானத்துக்கு முஸ்லிம்களின் பங்களிப்புகளை விளக்கும் பிரமாண்டமான விஞ்ஞான கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்து நடத்திவருகின்றது .
இதன் முதல் கண்காட்சி லண்டன் நகரில் நடைபெற்றுள்ளது அங்கு 4 லட்சம் பார்வையாளர்கள் சென்று பார்த்துள்ளார்கள் இவர்களில் துருக்கி பிரதமர் தையிப் அர்பகானும் ஒருவர் இவர் அற்புதமாக காட்சிபடுத்தபட்டுள்ள கண்காட்சியை பார்த்து விட்டு தனது நாட்டுக்கு வரும்படி வேண்டு கோள் விடுத்தார் தற்போது இந்த கண்காட்சி துருக்கியில் நடைபெறுகின்றது இதை பிரதமரே துவக்கிவைத்தார் அதை தொடர்ந்து அமெரிக்க செல்லவுள்ளது இந்த கண்காட்சிக்கான விஞ்ஞான நிறுவனம் முஸ்லிம்களின் விஞ்ஞான பங்களிப்புகள் பற்றிய படம் ஒன்றையும் தயாரித்துள்ளது அந்த 1001 Inventions and The Library of Secrets என்ற படமும் கண்காட்சியில் கான்பிக்கபடுகின்றது இந்த படத்தின் ஒரு பகுதி இங்கு இணைக்கப்டுள்ளதுவிரிவாக பார்க்க
இன்று நாம் காணும் அதிசயிக்கத்தக்க அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக, தற்கால நவீன உலகை ‘அறிவியல் யுகம்’ என்று கூறுகின்றோம் நவீன விஞ்ஞா வளர்ச்சியின் விளைவாக உலகை ஒரு பூகோளக் கிராமமாக -Global Village- மாறி வருகின்றது . உலகம் ஒரு பூகோளக் குடும்பமாக -Global Family- சுருங்கும் நாள் வெகு தொலை இல்லை அதையும் உலகு எட்டிவிட இன்னும் சில படிகள்தான் இருக்கிறதுஇன்ஷாஅல்லாஹ் .
இவைகள் அனைத்தும் மேற்கின் சாதனைகளாக மட்டும் அறியப்பட்டுள்ளது, நவீன உலகின் சிப்பியாக மேற்கு மட்டும் பார்க்கபடும் நிலைதான் காணபடுகின்றது இவற்றுக்கு முஸ்லிம் விஞ்ஞானிகள் நிறைய பங்களிபுகள்ளை வழகியுள்ளனர் என்ற உண்மை மறைக்கப்டுள்ளது நவீன விஞ்ஞாத்துக்கு முஸ்லிம்களின் பங்களிப்புகள் பலராலும் அறியப்படாத கண்காட்சி வைத்து மக்களுக்கு விளக்கும் அளவுக்கு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் விஞ்ஞாபங்களிப்புகள் வரலாற்றில் மறைத்து கிடக்கின்றது அல்லது மறைக்கப்பட்டுள்ளது இன்று எங்கும் மேற்கு நாகரீகம் பற்றிதான் எழுத்தும் பேச்சும், செயலும் இருக்க நிர்வாக மட்டங்களில் மேற்கு நாகரீக நடைமுறைகளும் , கொள்கைகளும் , அதன் தத்துவங்களும் இடத்தை பிடித்துள்ளன இன்றைய நாகரீ வளர்ச்சியில் உச்சத்தில் இருப்தாக கருதப்படும் ஐரோப்பா இருட்டில் இருந்தது இருட்டில் இருந்த ஐரோப்பாவை விஞ்ஞா யுகத்துக்கு அலைத்து வந்தவர்கள் முஸ்லிம்கள் தான் என்ற உண்மை வரலாற்றுக்கு புறம்பான விடையமாக பார்க்கபடுகின்றது அல்லது ஆச்சரியத்துடன் நோக்கபடுகின்றது
நவீன உலகிக்கு முஸ்லிம்கள் விஞ்ஞா அடித்தளங்களை போட்டுள்ளார்கள் இதை இன்று வரலாற்று ஆய்வாளர்கள் பெரிதும் உண்மைபடுதுகின்றனர் – இன்றைய நவீன உலகின் நிர்மாணிகளாக கருதப்படும் ஐரோப்பியர்களை இருட்டில் இருந்து வெளிவர உதவியவர்கள் முஸ்லிம்கள்தான் ,இருட்டில் இருந்த ஐரோப்பாவை விஞ்ஞா யுகத்துக்கு அலைத்து வந்தவர்கள் முஸ்லிம்கள் தான் இதுபற்றி Marguis’ எனும் அறிஞர் தனது ‘speeches delivered in ‘ எனும் நூலில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘It is to Muslim science, to Muslim art and to Muslim literature that Europe has been in a great means indebted for its extrication from darkness of the middle ages.’ ‘ஐரோப்பா இடைக்காலத்தில் அறியாமை எனும் இருளை விட்டு வெளிவரக் காரணமாக இருந்ததற்கு முஸ்லிம்களின் விஞ்ஞானம் ,முஸ்லிம்களின் கலை, முஸ்லிம்களின் இலக்கியம் ஆகியவற்றிற்கு அது (ஐரோப்பா) பெருமளவில் நன்றிக் கடன் பட்டிருக்கிறது என்று குறிபிடுகிறார் .
8-12ம் நூற்றாண்டு காலப்பகுதி ‘ஐரோப்பா அறியாமை இருட்டில் தத்தளித்துக் கொண்டிருந்த காலப்பகுதியாகும்’ என வரலாறு கூறுகின்றது. இக்காலப்பகுதியில் முஸ்லீம்களின் கண்டுபிடிப்புக்கள் . இந்த நான்கு நூற்றாண்டுகளிலும் வரலாறு சான்று பகரும் அளவுக்கு விஞ்ஞா அடிபடைகளை உருவாக்கி இருந்தது இந்த கால பகுதியில் இருட்டில் இருந்த ஐரோப்பாவுக்கு எழுச்சி , புரட்சி விஞ்ஞாம் என்று சிந்திப்பதற்கு கற்றுகொடுத்தவர்கள் முஸ்லிம்கள்தான் என்று உலக வரலாறு கூறுகிறது .
இன்றைய நவீன விஞ்ஞானத்துக்கு அத்திவாரமாக அமைந்த முஸ்லிம்களின் 1000 வருட விஞ்ஞானம் மறைக்கபட்டுள்ளது என்பது அதிர்ச்சியான தகவல் ஆனாலும் இப்போது அவை மீண்டும் வெளிகொண்டுவர படுகின்றது என்பது மகிழ்ச்சியளிகிறது
இன்றைய நவீன விஞ்ஞானத்துக்கு அத்திவாரமாக அமைந்த முஸ்லிம்களின் 1000 வருட விஞ்ஞானம் மறைக்கபட்டுள்ளது என்பது அதிர்ச்சியான தகவல் ஆனாலும் இப்போது அவை மீண்டும் வெளிகொண்டுவர படுகின்றது என்பது மகிழ்ச்சியளிகிறது