திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Tuesday, December 14, 2010

அய்யா பெரியவரே.... நீங்க தூங்கி எத்தனை நாள் ஆச்சுனு

,
அய்யா பெரியவரே.... நீங்க தூங்கி எத்தனை நாள் ஆச்சுனு எங்களுக்கு நல்லாவே புரியுது.... அதுவும் " "தணிக்கைத் துறை அறிக்கையே வெளியிட்டுவிட்டது. இதோ நான் பதவியை ராஜினாமா செய்கிறேன். ராஜினாமா செய்தால் மட்டும் போதாது; என்னை நானே கைது செய்து கொள்கிறேன். என் மீது வழக்கு தொடர வேண்டும்' என்றெல்லாம் ஜெயலலிதா கூறினாரா?' -- செம்ம காமெடி. எப்படி பார்த்தாலும் 64 கோடி ரூபாய் எங்க? 1,63,000 கோடி எங்க? எத்தனை நாளுக்குத்தான் தமிழ் நாடு மக்களை முட்டாள்கள் ஆகிட்டே இருப்பீங்க.... அப்புறம் "தணிக்கை அதிகாரி, நிருபர்களிடம் கூறியது அதிர்ச்சியாக உள்ளது. " அப்படின்னு சொல்லுறது பார்த்தா அவரு ADMK ஆளுன்னு சொல்லுவீங்க போல.. அப்படியே NDTV , டைம்ஸ் of இந்தியா ...சன் டிவி தவிர்த்து இந்தியால இருக்கிற மீடியா எல்லாத்தையும் ஜெயலலிதா வாங்கிடாகனு சொல்லுகளேன்... அதுக்கும ஆமான்னு சொல்ல உங்க கூட கொஞ்சம் பேர் இருக்காங்களே.

கமலா, யோக்கியன் வர்றான். செம்பை தூக்கி உள்ள வை.


யோவ், அங்க 66 கோடி தான்... இங்க ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி !!! இந்திய வுக்கே 2 வருஷம் பட்ஜெட் போடலாம் !!!


கத்து..கத்து.. நல்லா கத்து..இனி நீர் என்னதான் கரடியாக் கத்தினாலும் உம்மை யாரும் நம்பப்போரதில்ல.. என்னத்துக்கு நீர் திரும்பத் திரும்ப ஒரே பல்லவிய ஒப்பாரி வச்சிக்கிட்டுருக்கீர்.. அந்தம்மா 66 ..அந்தம்மா 66 ..ன்னு..நீர் அடிச்ச ஒன்னே முக்கால் கோடி லட்சத்திற்கு பதில் சொல்லும்யான்னா அதவிட்டுட்டு ஏதோதோ பெனாதிட்டுருக்கீர்!!


எல்லா சரிதான். சொம்பு திருடனுக்கும் பேங்க்கில கொள்ளை அடிகிறவனுகும் வித்தியாசம் இருக்குல. இலவச தொலைகாட்சி தந்த இணை இல்லா நாயகனே, அதுல எப்பயுமே மானாட பாத்த எப்படி.கொஞ்சம் வடநாட்டு நியூஸ் சேனல் எல்லாத்திலையும் CAG ரிப்போர்ட் ல உங்க நம்பிக்கை நட்சதிரம் அண்ணன் ராஜா எப்பிடியல்லாம் முறைகேடு பண்ணாருன்னு பக்கம் பக்கமா வண்டவாளத்த தண்டவளத்தில எத்துராங்கள..


அம்மா வெச்ச ஆப்பு கொஞ்சம் அதிகம் தான்... வலிக்க தான் செய்யும்.. கொஞ்சம் பொறுத்துக்குங்க.. இன்னும் 149 நாட்கள் தான் நம்ம ஆட்சி முடிய.. அப்பறம் நாம நம்ம பட்டாளத்துடன் புட்டபர்த்தி, காசி, ராமேஸ்வரம் என்று தீர்த்த யாத்திரை போகலாம்... சீ... வேலூர், பாளையங்கோட்டை, திகார் என்று யாத்திரி போகலாம்.


அய்யா, நீங்கள் திருகுவளையிளிருந்து வரும்போது வெறும் ஒரு மஞ்சள் பை தான் உங்களிடம் இருந்தது என்று நீங்களே பலமுறை சொல்லியுள்ளீர்கள். இப்போ உங்க சொத்து மதிப்பு என்னவென்று தமிழ் நாடே அறியும். எனவே யார் அதிகம் ஊழல் செய்தது என்று மக்களை அதிகம் குழப்பாமல் இருந்தால், வரப்போகின்ற ஆப்பு சைஸ் அட்லீஸ்ட் கொஞ்சம் குறையும்.


நீங்க ரொம்ப நல்லவர்.......நீங்களே எதிர் கட்சி தலைவர் ஆயுடுங்க......அந்த பித்தலாட்டக்காரர் முதல்வர் ஆகட்டும்..... இந்தியாவுக்கே மிகப்பெரிய நஷ்டத்தை பண்ணிட்டு அதற்கு பதில் சொல்லாமல்....எப்படி உலருகிறாரு......அந்த அம்மையார் உள்ளுர்ல பித்தலாட்டக்காரர் என்றால் நீங்கள் உலகத்துக்கே பெரிய பித்தலாட்டக்காரர்.


மலையையே விழுங்கி ஏப்பம் விட்டவர் தான் இந்த அம்மா. சட்டத்தையும், நீதியையும், தனக்கு வேண்டும் விதத்தில் வளைத்து, ஜனநாயகத்தை குழி தோண்டி புதத்தைவர் தான் இந்த அம்மா. புரளியை கிளப்பி விடுவதிலும், இனம், ஜாதிவெறி பிடித்து அலைவதிலும், இந்த கேடுகெட்ட ஜெயாவிற்ற்கு நிகரானவர் எவரும் இல்லை. கலைஞர் ஆட்சி தமிழகத்தின் பொற்காலம் என்றால், ஜெயா தமிழ் நாட்டின் போறாத கேவலம். நாடகம் நெடு நாளைக்கு எடுபடாது. வரும் தேர்தலில் ஜெயாவிற்கு படு தோல்வி நிச்சயம்.


எதிர் கட்சிளையாவது ஒரு பித்தலாட்டக்காரர், உங்கள் கட்சியில் குடும்பமே அல்லவா உள்ளது.


ஆயிரம் கோடி, ரெண்டாயிரம் கோடி அல்ல, ஒரு லட்சத்தி எழுவதாயிரம் கோடி ஊழல் பண்ணிய உங்களையும் spectrum ராஜாவையும் இன்று இந்திய முழுவதும் ஆச்சரியமாக பேசி கொள்கின்றனர். வருங்கள சங்கதிகள் கருணாநிதி மற்றும் ராஜா ஊழலை பற்றி ஆய்வு செய்து கட்டுரை வெளியிடுவார்கள், பல்கலை கழகத்தில் முதுகலை பட்டம் பெறுவதற்கு தீசிஸ் எழுதுவார்கள். தமிழனின் மானத்தை இப்படி கப்பலில் எற்றிவிட்டீர்களே, பணத்தை பத்திரபடுத்தி அடுத்த தேர்தலுக்கு செலவழிக்க பார்க்கீறீர்கள்.


இத சொல்லத்தான் நேத்து மாமல்லபுரம் போயி எல்லார்கூடயும் டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தீரா...வயசான காலத்துல பீச்சுக்கு போனோமா கொஞ்ச நேரம் நிம்மதியா காத்து வாங்குநோமானு இல்லாம எதுக்கு உடம்பு வேர்க்குர அளவுக்கு டென்ஷன் ஆகுறீங்க...நீங்க டென்ஷன் ஆனாக்க உண்மை இல்லைன்னு ஆயிடுமா? கோடி கணக்குல கொள்ளை அடிச்ச ராசாவ கூட சரி போனா போகட்டும் பரவாயில்ல நம்ம தமிழ் நாட்டு காரன் ஏதோ புத்தி சாலி தனமா செயல் பட்டு தமிழன் மானத்த உலகம் பூரா காத்துல பறக்க விட்டதுக்காக மன்னிச்சி விடலாம், ஆனா அதையும் ஞாயபடுத்தி பேசுறீரே இததான் பெருசு என்னால பொறுத்துக்க முடியல...அந்த அம்மா உண்மைய போட்டு உடைச்சதும் சும்மா வீல் சேருல எலெக்ட்ரிக் சாக் வச்ச மாறி ஜிவ்வுன்னு இருக்குமே. பின்ன இருக்காதா. சரியான நேரத்துல முறையா வச்ச ஆப்பு எப்டி இருக்கும் சொல்லவா வேணும்...இவ்ளோ பேசுறீரே உன் பேர புள்ளைங்க கோடி கணக்குல பணத்த போட்டு படத்த எடுக்குறாங்களே அந்த பணம் எங்க இருந்து வந்திச்சி? நானும் தான் டிகிரி முடிச்சி ஒரு கம்பனியில குப்பை கொட்டிகிட்டு இருக்கேன். என்னால ஒரு லட்சத்த பாக்கனும்னாலே கடவுள பாக்குற மாறி இருக்கு. இத்தன கோடி பேரனுங்களுக்கு எப்டி வந்துச்சி. எந்த சாப்ட்வேர் கம்பனியில வொர்க் பண்ணி அதுல வர வருமானத்துல அவங்க படம் எடுக்குறாங்கன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா? உம்மோட பதவிய காப்பாத்திக்க காங்கிரசு தயவு தேவை படுது. இந்த இக்கட்டான நேரத்துல காங்கிரச விட்டா உமக்கு வேற வழி இல்ல. அதனால ராசாவ பலி கிடாவா ஆக்கிட்டீங்க. இதான் உண்மை. அத விட்டு புட்டு தேவை இல்லாம எதையாவது கேனத்தனமா பேசி எங்கள டென்ஷன் பண்றத நிறுத்தி புட்டு வேற எந்த துறையில இதவிட அதிக அளவுல கொள்ளை அடிக்கலாம் ன்னு ராசா கிட்ட ஐடியா கேளும்...வர்ட்டா..


எவ்வளவு பெரிய இழப்பு இந்த ஆளு ஈசியா சொல்றார் பாரு. அவ்வளவும் இந்த ஆளு மூலம்தான் நடந்தது. ராஜா வெறும் கூஜாதான்.


தலைவா!!! பட்டிமன்றம் வைக்கலாமா! யார் அதிகம் கொள்ளை அடித்ததுனு... கோபாலபுரமா??? போயஸ் தோட்டமானு???.


பித்தலாட்ட மன்னா! கடந்த இரண்டு நாட்களில் மஞ்சள் துண்டின் பித்தலாட்ட பேச்சு 1. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் CAG அறிக்கையை வெளியிடாமல் எதுவும் கூறமுடியாது என்றார் 2 எதிர்கட்சிகள் JPC க்கு கோரிக்கை வைத்தபோது எதிர்கட்சியை சேர்ந்த ஒரு வரை தலைவராக கொண்ட CAG அறிக்கையை நம்பாமல் இருப்பது எதிர்கட்சிகள் தங்களையே நம்பாமல் இருப்பதற்கு சமம் என்றார் 3 CAG அறிக்கை பார்லியில் வெளியானபின் CAG அறிக்கை ஒரு உத்தேசமே அதை முழுவதுமாக நம்ப முடியாது என்கிறார் அதாவது கடந்த 150 ஆண்டுகளாக இயங்கி வரும் CAG யை தனது ஊழலை மறைக்க குற்றம் சாட்டியவர் மஞ்சள்துண்டு மட்டுமே. 4 நேற்று CAG யின் ஆண்டு விழா.


அதற்கு அழைப்பு விடுக்கப்பட்டும் தனது பெயர் அழைப்பிதழில் முதலாவதாக இருந்தும் அதில் கலந்து கொள்ளாமல் CAG யின் நேர்மையை பற்றி பினாத்தி ஸ்டாலின் மூலம் விழாவில் உளற சொல்லி உள்ளார். 5 நேற்று டெல்லியில் நடைபெற்ற CAG ஆண்டு விழாவில் பிரதமர் CAG யை வெகுவாக பாராட்டி உள்ளார்.


அது 2g யாக இருக்கட்டும் அல்லது CWG யாக இருக்கட்டும் அதை பற்றி கவலை படாமல் CAG சரியாக செயல்படுவது நாங்கள் சிறப்பாக செயல்பட வழி வகுக்கும் என்றார். எங்கள் குறைகள், ஊழல்களை திருத்தி கொண்டு சிறப்பாக செயல்படுவோம் என்றார். மஞ்சள் துண்டு எங்கே? பிரதமர் எங்கே? 6 ஜெயா ஆட்சியில் இழப்பு ஏற்பட்டதை பற்றி CAG யின் அறிக்கையை சுட்டிக்காட்டும் மஞ்சள் துண்டு அப்போது ஏன் வழக்கு தொடரவில்லை. ஜெயா போடும் செருப்புக்கு CBI வழக்கு போட்ட மஞ்சள் துண்டு இதற்கு ஏன் வழக்கு போடவில்லை. இதிலிருந்து தெரிகிறது மஞ்சள் துண்டின் பித்தலாட்ட அறிக்கை. அய்யா மஞ்சள் துண்டு நீங்கள் கைவைத்த இடம் டெல்லி அதுவும் 1.76 லட்சம் கோடிகள் ஊழல் சம்பந்தபட்ட விஷயம். அதாவது மொத்த இந்தியாவும் சம்பந்த பட்ட விஷயம். வடநாட்டு ஆங்கில பத்திரிகைகள், ஆங்கில செய்தி தொலைகாட்சிகள் இதனை சாதரணமாக எடுத்து கொள்ளவில்லை.


காங்கிரசின் திமுகவின் பருப்பை எடுக்காமல் விடமாட்டார்கள் போல் தெரிகிறது. எதிர்கட்சிகளும் மிக ஆக்ரோசமாக இந்த விசயத்தை கையில் எடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் மணல் கொள்ளை அடிச்சமா, போலிகளை ஊக்குவிச்சமா, கொலை கொள்ளை கடத்தல் கற்பழிப்புகள் பதுக்கலை அரங்கேற்றுனமா, விலைவாசியை உயர்துனமா, மின்வெட்டை அதிகபடுத்துனமா பஸ் மின் கட்டணத்தை உயர்த்துனமா, இலவச டிவியை கொடுத்தமா, மான மயிலாட பார்த்தோமா, டிவி சானல்களை புதிது புதிதாக தொரோந்தமா, வாரிசுகளை வைத்து படம் எடுத்தோமா, அதை முதல் காட்சியாக அதிகாலை 3 மணிக்கே பார்த்து அதை மக்களையும் பார்க்கவைத்து ஒரு முன்னோடியாக திகழ்ந்தொமா அவர்களை முட்டாள் ஆக்குநோமா, அல்லகைகளை வைத்து பாராட்டு விழா நடத்துனோமா, டாஸ்மாக்கை தெருவுக்கு தெருவு திறந்து மக்களை குடிகாரர்களாக ஆக்குநோமா, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் வாரிசுகளை வைத்து தமக்கு ஆதரவாக பத்திரிகைகளில் வாசகர் கருத்து தெரிவிக்க சொன்னமான்னு இல்லாமல் தேவை இல்லாமல் ஏன் இந்தியாவுக்கே இப்படி ஒரு இழுக்கை ஏற்படுத்தி உள்ளீர்கள். தமிழ்நாட்டில் உள்ள பத்திரிகைகள், மீடியாக்கள் போல வடஇந்திய பத்திரிகைகள் இல்லை.


அவர்கள் பிரதமரையே நோண்டி நொங்கு எடுக்கிறார்கள். திமுக எல்லாம் அவர்கள் தலை மயிருக்கு சமம் போல் தெரிகிறது. ஆனால் அனைத்தும் உண்மை. அனைத்து இந்திய மக்களிடமும் "Times Now "CNN -IBN போன்ற செய்தி தொலைகாட்சிகள் கடந்த சில நாட்களில் மிக பெரிய இடம் பிடித்துள்ளனர். தமிழன் என்ற பெயரை தவறாக பயன்படுத்தி மஞ்சள்துண்டு குடும்பம் தமிழ் மக்களையே ஏமாற்றும் விசயத்தை தமிழ் பத்திரிகைகள் வெளியிடாமல் வட இந்திய ஆங்கில பத்திரிகைகள் வெளியிடுவது தமிழ் பத்திரிகைகளுக்கு மிக பெரிய அவமானம். புதிய சட்டமன்ற கட்டிடத்தில் நான்காவது தூணான பத்திரிகைகளுக்கு சரியான இடம் அளிக்காத போதே பத்திரிகைகள் மஞ்சள் துண்டுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவது பெரிய வருத்தம் அளிக்கிறது. மஞ்சள் துண்டை எதிர்த்து இதுவரை ஒரு கேள்வி கூட கேட்காத பத்திரிகைகள் பிணத்திற்கு சமம். இதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் ஒப்புக்கொள்ளமுடியாது....


தட்...தட்..தட்... புஸ்..புஸ்..புஸ்.. அடியே,அடியே செங்கமலம், ஓடு...ஓடு..யோக்கியன் வரான் சொம்ப மட்டுமில்லடி, வெளில நாய்க்கு சோறு போட வெச்சு இருக்கோமே ஒரு ஈய தட்டு அத கூட எடுத்து உள்ள வெயிடி. அப்புறம் அப்படியே ஓட்டு மேல காய போட்டு இருக்கோமே, ஆட்டு புழுக்கை, மாட்டுசாணி வரட்டி, வாசல் பெருக்க வெச்சு இருக்கோமே வெளக்குமாறு அதெல்லாத்தையும் எடுத்து உள்ள வையி. ஓடு ஓடு, அந்தா அந்த மரத்துக்கு கீழ படுத்து கெடக்கே நம்ம வீட்டு சொறி நாய் மணி, அத கூட வீட்டுக்கு பின்னாடி பத்தி விடு. ஓடுடி வெரசலா... அடியே அடியே, இந்தா இந்த தேங்கா செரட்டை, என்னோட ரெண்டு கோவணம், நம்ம புள்ளைங்களோட கிழிஞ்சு போன துணி ரெண்டு எல்லாத்தையும் கொண்டு போய் உள்ள வை, ஒன்ன கூட விடாதடி, ஏன்னா வரவன் அவ்வளோ யோக்கியன். தப்... பொத்... பொத்... ஏன் மச்சான் என்னோட முதுகுல இந்த சாத்து சாத்துற, போடி போடி போக்கத்தவளே, மொதல்ல நீ போடி உள்ள, எல்லாத்தியும் எடுத்து உள்ள வெச்சிட்டு நீ வெளில நின்னுக்கிட்டு இருக்கியேடி... அவுங்... போ போ உள்ள போய் கதவ சாத்திக்கோ, நான் கொள்ள பக்கமா ஓடி போய் ஒளிஞ்சுக்கிறேன். அந்த யோக்கியன் போகட்டும் அப்புறமா வந்துக்கலாம். சரி மச்சான்... செங்கமலம் கண்டாங்கி சேலை குலுங்க ஓடுகிறாள்... யார் அந்த யோக்கியன்? அவனை கண்டு ஏன் ஊரே அல்லோலகல்லோலபட்டு தெறித்து ஓடுகிறது? கடைசிக்கு யோயக்கியன் வந்தானா? யாருக்கு தெரியும்... போங்க போங்க நீங்களும் ஓடி போங்க, போய் எல்லாத்தியும் எடுத்து உள்ள வெச்சு காப்பாத்திகொங்க. யோக்கியன் வரான்.


ஒன்று ஞாபகம் வருகிறது! யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ள வை. வேறு என்ன நாங்கள் சொல்ல. அரசு கேபிள் கழகத்திற்கு வாங்க ஒதுக்கிய உபகரணங்கள் வாங்கி கலைஞர் டிவி துவக்கியவர் தானே நீங்கள். 4 வருடங்களுக்கு முன்பு உங்கள் குடும்ப சொத்து மதிப்பு எவ்வளவு, தற்பொழுது எவ்வளவு ?

0 comments to “அய்யா பெரியவரே.... நீங்க தூங்கி எத்தனை நாள் ஆச்சுனு”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates