நைஜீரியா மேற்கு ஆபிரிக்காவிலிலுள்ள ஒரு சமஷ்டி குடியரசு நாடாகும். இது ஆபிரிக்க நாடுகளின் மத்தியில் பிராந்திய செல்வாக்கு மிக்கதாக பார்க்க படுகின்றது ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மக்கள்தொகை மிகுந்த நாடுகளில் முக்கியமானது இதன் மக்கள்தொகை 15 கேடியை விடவும் அதிகம் இங்கு 36 மாநிலங்கள் உண்டு நைஜீரியாவினுள் 36 மாநிலங்களிளும் 250 கும் அதிகமான இனங்கள் வாழ்கின்றன என்பது முக்கியமானது இவர்கள் பல மொழிகளைப் பேசும் இனங்கள் இந்த நாட்டின் மக்கள்தொகையின் 52% தினர் முஸ்லிம்கள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக நைஜீரியாவின் வட பகுதியில் வாழ்கின்றார்கள் இங்கு 40% மாணவர்கள் கிறிஸ்தவர்கள் இவர்கள் பெரும்பான்மையாக நைஜீரியாவின் தென்பகுதியில் வாழ்கிறார்கள் இவர்கள் அல்லாமல் மிகவும் சிறுபான்மை இனங்களும் உண்டு இங்கு நைஜீரியா தனது வரலாற்றில் தொடர்ந்தும் மேற்கின் ஆக்கிரமிப்பு களையும் இராணுவ புரட்சிகளையும் சந்தித்துள்ளது , கடைசியாக பிரித்தானியாவின் காலனித்துவ நாடாகவும் இருந்துள்ளது இவர்களின் ஆட்சிமுறை இனங்களை பிரித்தாளும் மனித விரோத அரசியல் வழிமுறைகளை கொண்டு காணப்பட்டது பிரித்தானியாவின் பிடியில் இருந்து 1960 விடுபட்டது எனிலும் 1960 தொடக்கம் 1999வரை தொடர்ந்து இராணுவ ஆட்சியின் பிடியில் தவித்தது
ஐரோப்பியர்கள் ஆட்சியில் நைஜீரியா ஆபிரிக்காவின் மிகப்பெரிய அடிமை விற்பனை சந்தையாக மாற்ற பெற்றது நைஜீரியாவின் ஆண்களையும், பெண்களையும் ஐரோப்பியர்கள் அடிமைகளாக பிடித்து விற்பனை செய்தனர் . நைஜீரியாவிலிருந்து கோடிக்கணக்கான மக்கள் இவ்வாறு அடிமைகளாக அமெரிக்கா அனுப்பப்பட்டதாக வரலாறு கூறுகின்றது இங்கு அடிமையாக பிடிக்க பட்டவர்களில் உறுதியான உடல் கட்டமைப்பை கொண்ட ஆண்களும் பெண்களும் தெரிவு செய்யப்பட்டு அடிமை பன்னைக்கு அனுப்பட்டு அடிமை உற்பத்தி முறை நடைமுறையில் இருந்ததாக சில ஆய்வாளார்கள் கூறுகின்றனர் , ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்னர் நைஜீரியா பரந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்ததுடன் நைஜீரியா மக்கள் பல அபிவிருத்திகளையும் கண்டிருந்தனர் ஆய்வாளர்கள் குறிபிடுவதை போன்று ஐரோப்பியர்கள் துப்பாகிகளை என்னவென்று தெரிந்திராத காலத்தில் இவர்கள் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தமையால் துப்பாகிகளை பயன் படுத்துபவர்களாக இருந்திருகின்றனர் அதே போன்று கல்வி துறையில் குறிபிடதக்க அபிவிருத்தி கண்டிருந்தனர் என்பது வரலாறு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியுடன் இவர்களின் வீழ்ச்சியும் தொடங்கியதாக வரலாறு கூறுகின்றது
இன்று இருக்கும் நைஜீரியா உலகின் எண்ணெய் உற்பத்தியில் நான்காம் இடத்தில் இருக்கின்றது நைஜீரியா, OPEC எனப்படும் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் ஒரு முக்கிய உறுப்பினர். எண்ணெய் வளம் கூடிய நாடு என்பதால் மேற்கின் ஆதிக்கத்தை பற்றி கூறவேண்டியது இல்லை நாட்டின் மக்கள் தொகையில் 50%மாணவர்கள் வறுமை நிலையில் உள்ளனர் போதுமான எண்ணெய் வளம் இருந்தும் நாட்டில் போதுமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் இல்லை இதனால் எண்ணெய் சுத்திகரிப்பு வெளிநாடுகளை நம்பி இருக்கிறது தற்போதுதான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உருவாக்க பட்டுள்ளது இங்கு பெட்ரோல் ஒரு லீட்டர் இலங்கை காசுக்கு 65 ரூபாய் மேற்கின் ஆக்கிரமிப்பில் இருந்து 1960ல் நைஜீரியா விடுதலை அடைந்தது. என்றாலும் அதன் மறைமுகமான கட்டு பாட்டில்தான் இன்னும் இருக்கின்றது குறிப்பாக அமெரிக்க , பிரித்தானிய ஆதிக்கம் இருக்கின்றது
நைஜீரியாவினுள் 36 மாநிலங்களிளும் 250 கும் அதிகமான இனங்கள் வாழ்கின்றன குறிப்பிட்டேன் இன்று மொத்த சனத்தொகையில் 52 வீதமாக உள்ள நைஜீரிய முஸ்லீம்கள் மத்தியிலும் பல இனகள் இருந்த போதிலும், இஸ்லாம் அவர்களை ஒன்றிணைக்கும் சக்தியாக உள்ளது. இதனால் வட பகுதியில் இனகலவரங்கள் வருவது மிக மிக குறைவு அல்லது இனத்தின் பெயரால் கலவரங்கள் இல்லை என்று குறிபிடலாம் இதற்கு மாறாக தெற்கில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளால் அடிக்கடி வன்முறை வெடிக்கின்றது இனகலவரங்களின் போது பல மனிதர்கள் கொல்லபடுகின்ரார்கள் தெற்கில் . ஒவ்வொரு இனமும் தனது இனத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே சிறந்தவர்கள் என்றும், மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்று கருதும் போக்கு பலமாக காணப்படுகின்றது இந்த நிலை முஸ்லிம்கள் பெரும் பான்மையாக இருக்கும் வட பகுதியில் காணமுடியாது இன, கலவரங்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது நடக்கும் என்ற நிலையில் தான் . 1953ல் இருந்து , இன்றுவரை தொடர்கிறது.
நைஜீரியாவின் வடக்கு பகுதிகளில் முஸ்லிம்கள் பெரும் பான்மையாக வாழும் பெரும்பாலான இடங்களில் குறிப்பாக 12 மாநிலங்களில் இஸ்லாமிய ஷரியா சட்டம் -சவூதி போன்று குற்றவியல் சட்டங்கள் மட்டும் – நடைமுறையில் இருக்கிறது. இந்த சட்டம் நூற்றாண்டு காலமாக வட பகுதி மக்களால் நடைமுறை படுத்த பட்டு வந்திருந்தாலும் இதற்கான மத்திய அரசின் விசேட சட்ட ஏற்பாடு சில வருடங்களுக்கு முன்னர் ஜனநாயக அரசு ஏற்படுத்த பட்ட பின்னர் தான் அமுலானது இந்த சட்டம் நவீன இஸ்லாமிய புத்திஜீவிகளின் வழிகாட்டல் இடம் பெறாத சட்ட கோவை என்பது குறிபிட தக்கது இங்கு சட்டம் , ஒழுங்கு மிகவும் நன்றாக நடைமுறை படுத்த படுகின்றது என்பது மிக முக்கிய விடையம் .
வடக்கே முஸ்லிம்கள் பெரும் பான்மை யாக வாழ்தாலும் இங்கு ஜோஸ் -Jos- என்பது ஒரு முக்கிய நகரம் உண்டு . இது ஒரு மிகவும் அழகான மலைப் பகுதி, ஆங்கிலேயர்களின் காலத்தில் இது அவர்களின் விடுமுறை கழிக்கும் இடமாக இருந்த இருக்கின்றது . இங்கு கிறுஸ்தவர்கள்தான் பெரும்பான்மை.இங்கு அடிக்கடி மத கலவரங்கள் நடக்கின்றன இங்கு முஸ்லிம்கள் எண்ணிகையில் சிறு தொகையினர் நைஜீரியாவின் மதத்தின் பெயரால் கலவரங்கள் ஆரம்பிக்கும் இடம் இதுதான் என்று அடையாள படுத்தும் அளவுக்கு இங்கு . 2001, 2003, 2004,2008,2010 ஆண்டுகளில் இங்குதான் கலவரங்களின் நடந்துள்ளன மேற்கு ஊடகங்கள் குறிபிடுவதை போன்று ஷரியா சட்டம் காரணமாக அமைவதில்லை கடந்த மாதம் நடந்த கலவரம் பற்றி BBC குறிபிடும் போது வடபகுதில் இந்த கலவரத்தில் எத்தனை கிறிஸ்தவர்கள் கொல்ல பட்டார்கள் என்று தெரிய வில்லை என்று மட்டும் குறிபிட்டது முஸ்லிம்கள் பற்றிய எண்ணிக்கை பற்றி எதையும் குறிபிட வில்லை இந்த கலவரங்களில் இரு தரப்பினருக்கும் கடும் இழப்புகள் வருவது உண்டு ஆனாலும் கடந்த மாதம் நடந்த கலவரத்தில் 400 கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர் இதில் 350 கும் அதிகமானவர்கள் முஸ்லிம்கள் என்பது நைஜீரியா தகவல்களை மேற்கோள் காட்டி ரேயடர் செய்திகள் தெரிவித்தன மேலும் BBC ஷரியா சட்டம் கிறிஸ்தவ , முஸ்லிம் பிரிவினையை தூண்டுகிறது என குறிபிட்டது இந்த சட்டம் நூற்றாண்டு காலமாக வட பகுதி மக்களால் நடைமுறை படுத்த பட்டு வந்திருக்கின்றது இதற்கான அரசின் விசேட சட்ட ஏற்பாடு சில வருடங்களுக்கு முன்னர் தான்-1999- அமுலானது ஆக நூற்றாண்டு காலமாக வட பகுதி மக்களால் நடைமுறை படுத்த பட்டு வந்த சட்டத்தை அங்கீகரிக்கும் வேலையை மட்டும்தான் அரசு புதிதாக செய்திருகின்றது என்பதுதான் உண்மை ,மேற்கு ஊடகங்கள் குறிபிடுவதை போன்று சட்டம் புதிதாக முளைக்க வில்லை என்பதை தெரிந்துகொள்ளவேண்டும் .
தற்போது வடக்கு நைஜீரியாவில் அரச படைக்கும் முழு நைஜீரியாவிலும் இஸ்லாமிய சட்டத்தை நடைமுறை படுத்த கூறும் உஸ்தாத் முஹம்மத் யூசுப் தலைமையலான இயக்கம் ஒன்றுக்கும் இடையில் நடை பெற்ற சண்டையில் இதன் தலைவரான உஸ்தாத் முஹம்மத் யூசுப் உட்பட 1000 அதிகமானவர்கள் கடந்த ஆண்டு நடந்த சண்டையில் கொல்லபட்டதாக தகவல்கள் தெரிவித்தன நேற்று அல் ஜஸீரா தொலை காட்சி இந்த அமைப்பை சார்ந்தவர்கள் என்று சந்தேகபடுபவர்களை அரச படைகள் மிகவும் கொடுரமான முறையில் சுட்டு கொல்லும் காட்சிகள் அடங்கிய விடியோ பதிவுகளையும் வெளியிட்டு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது அரச படைகள் மிகவும் கொடுரமான முறையில் சுட்டு கொல்லும் Execution-style killing காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவுகளையும் வெளியிட்டு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது – “போகோ ஹராம்” என்பது உஸ்தாத் முஹம்மத் யூசுபின் தலைமையில் 2002 தொடக்கம் இயங்கிய வாலிபர் அமைப்புக்கு மக்கள் சூட்டிய பெயர் “போகோ ஹராம்” என்பதன் பொருள் மேற்கு கல்வி ஹராம் என்பதாகும் ஆனால் இந்த அமைப்பினர் தமக்கு ஒரு பெயரை சூட்டி கொள்ளவில்லை இவர்கள் அரசை வேண்டியதும் செயல் பட்டதும் வடக்கு நைஜீரியாவில் இஸ்லாமிய சட்டத்தை முழுமையாக நடைமுறை படுத்த கூறி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர் , இவர்கள் வட நைஜீரியாவில் சில போலீஸ் நிலையங்களை தாக்கியதாகவும் பல போலீஸ் நிலையங்களை தாக்குவதற்கு தயார் நிலையில் இருந்ததாகவும் தகவல்கள் குறிபிடுகின்றது எனிலும் 2002 இல் உருவாக்க பட்ட அமைப்பு 2009 ஆம் ஆண்டு கால வரையும் நைஜீரிய பாதுகாப்பு பிரிவினரின் எந்த பதிவிலும் இவர்கள் பயங்கர வாத செயல் பாடுகளில் ஈடுபட்டதாக எந்த தகவலும் இல்லை என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய விடையம் இவர்கள் மீது திடீர் பயங்கர வாத குற்றசாட்டுகள் சுமத்தபட்டு இரண்டு மாநில அரசுகள் தாக்குதல் நடத்தியுள்ளது இது பற்றிய விடையங்கள் இப் போது ஆராயப்படுகின்றது .
இதன் தலைவர் உட்பட பலர் கொல்லப்பட பின்னர் இவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தாம் ஒரு போதும் மேற்கு கல்வியை ஹராம் என்று கூற வில்லை என்றும் மேற்கின் அநாகரிகமான கலாச்சாரங்களை ஹராம் என்று தாம் தொடர்ந்தும் கூறுவதாக கூறியுள்ளனர் என்பது குறிபிடதக்கது
தற்போது நைஜீரியாவில் ஜனாதிபதியாக இருந்த உமரோ சுகவீனம் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார் ஜனாதிபதி உமரோ கடமைகளை தற்காலிகமாக துணை ஜனாதிபதி ஜொனதனிடம் ஒப்படைப்பதென நேற்று அந்நாட்டு பாராளுமன்றம் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது இதன்படி நேற்று பதில் ஜனாதிபதி குட்லக் ஜொனதன் உமரோவின் இடத்தில் ஜனாதிபதி உமரோ சிகிச்சை பெற்று திரும்பும்வரை ஜனாதிபதியாக கடமையாற்றுவார் என பாராளுமன்றம் அறிவித்துள்ளது இவர் ஒரு கிறிஸ்தவர் என்பது குறிபிடதக்கது