M. ஷாமில் முஹம்மட்
பல நூற்றாண்டுகளாக செச்னியா முஸ்லிம்கள் கம்யூனிஸத்துகு முன்பும் பின்பும் ரஷ்யாவுக்கு எதிரானபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்கள் தங்களை கவ்காஸஸ் என்றே அழைக் கின்றனர். செச்சன் என்பது ரஷ்யா வினால் சூட்டப்பட்ட பெயர். 18ம் நூற்றாண்டில் உள்நாட்டு மக்களுக்கும் ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையிலான யுத்தத் தின்போது யுத்தம் தொடங்கிய கிராமம் அல்லது பரந்த காட்டு பகுதி ஒன்றின் பெயரே செச்சன் என்பதாகும்
Blowing up Russia: Terror from Within by Alexander Litvinenko
Lubyanka Criminal Group by Alexander Litvinenko
Book of a Mujahidden by shamil Basaev
Security in Exchange for Independence by Udug Movladi
பல நூற்றாண்டுகளாக அடகு முறைகளை சந்தித்த இந்த செச்னியா மக்கள் 1991ம் ஆண்டில் கம்யூனிஸ சோவியத் யூனியன் சிதறிய பிறகு. முதல் அதிபராக போரிஸ் எல்ட்சின் தேர்வானார் சோவியத் ஒன்றியத்தின் அழிவுடன் சுதந்திர செச்னியா என்ற தமது இஸ்லாமிய சுதந்திர தாகத்தை நிறைவேறுவதற்கான வாய்ப்பாக செச்னியா முஸ்லிம்கள் கருதினர் . ஆனால் மேலாதிக்க வெறிபிடித்த போரிஸின் மற்றும் விளாடிமி்ர் பூட்டின் மற்றும் டிமிட்ரி மெட்வடே ஆகியோரின் ஆக்கிரமிப்புக் கொள்கை அதற்குத் தடைகளை போட்டுள்ளது
மிக அதிகமான எண்ணை வளமிக்க செச்னியாவை தொடர்ந்தும் தனது ஆக்கிரமிப்பில் வைத்திருக்க தீர்மானித்தது செச்னியாவின் விடுதலை பிராந்தியத்திலுள்ள ஏனைய ஒடுக்கப்பட்ட இன மக்களுக்கும் ஓர் விடுதலை மாதிரியாய் அமைந்து விடும் என ரஷ்யா கருதியதுடன் எண்ணை வளமிக்க செச்னியாவை ஒருபோதும் விடுதலை அடைய விடமுடியாது என்ற தீர்மானத்துக்கு வந்தது . விளைவு , செச்னியாவின் சுதந்திரப் பிரகடனத்தை அதன் முனைப்புகளை ரஷ்யா கொடூரமாக ஒடுக்கியது .
தனது ஆக்கிரமிப்பு படைகளை செச்னியாவுக்கு ஏவிவிட்டது 1994-தொடக்கம் 1996 வரை . ரஷ்யா மிக கொடூரமாக யுத்தம் ஒன்றை நடத்தியது ஷாமில் அஸ்லான் மாஸ்ஹடோவ் போன்ற இஸ்லாமிய போராளிகளால் வழி நடத்தபட்ட இந்த முதல் கட்ட இரண்டு வருட கடும் சமரில் 75000 ரஷிய இராணுவ ஆக்ரமிபா ளர்கள் கொல்லபட்டனர், இந்த போரில் 15000 வரை போராளிகள் சஹீதாகினர் பொதுமக்கள் 35000 கொல்லபட்டனர் இன்னொரு ஆய்வின் படி 1 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் இதில் செச்னிய தலை நகரான கிறோஸ்னி விட்டும் ஆக்கிரமிப்பு படைகளை விரட்டி அடித்த பெருமை தளபதி ஷாமிலை சாரும் இதில் ரஷ்யாவால் எதையும் சாதிக்க முடியவில்லை குறுகிய காலத்தில் அதிகமான தனது ஆக்கிரமிப்பு பேய்களை இதில் தொலைத்து விழி பிதுங்கி நின்ற ரஷ்யா தனது ஆக்கிரமிப்பு இராணுவ பேய்க்கு சற்று ஓய்வுகொடுக்க முடிவு செய்தது.
இழப்புகளையும் தாக்குதல்களையும் சமாளிக்கமுடியாத போரிஸின் ரஷிய அரசு போராளிகளுடன் 1996 இல் யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்றைசெய்தது, யுத்த நிறுத்தம் செய்து ஆக்கிரமிப்பு இராணுவ பேய்க்கு ஓய்வு கொடுக்க பட்டது போராளிகள் உடன் படிக்கைக்கு முழுமையாக கட்டுபட்டனர்
யுத்தம் நிறுத்தபட்டதால் இஸ்லாமிய அமைதி வழியில் செயல்பட்ட போராளிகள் அழிக்க பட்டிருந்த செச்னியாவை அபிவிருத்தி செய்வதில் கவனம் செலுத்தினர், அழிவு யுத்தம் ஓய்ந்தது என மக்கள் மகிழ்ந்தனர் 1997 இல் தேர்தல்கள் நடத்தபட்டன இதில் அஸ்லான் மாஸ்ஹடோவ், ஷாமில் பஷயோவினால் ஆகியோர் போட்டியிட்டனர் அஸ்லான் மாஸ்ஹடோவ் ஜனாதிபதியாக தெரிவு செய்பட்டார் ஷாமில் பஷயோவ் உதவி பிரதமர் ஆனார் அபிவிருத்தி நோக்கி செச்னியா என்ற இலக்குடன் முழுக்க முழுக்க அபிவிருத்தி நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினர்
ஆனால் ரஷ்யா உளவுத்துறை Federal Security Service of the Russian Federation (FSB) பயங்கரவாதத்தை ஏவிவிடும் திட்டத்தில் முழு கவனத்தையும் செலுத்தியது பொறிஸ் யெல்ஸ்டினின் அரசாங்ம் எடுத்த தீர்மானத்தின் உளவு துறை தமது தோல்வியை வெற்றியாக மாற்றுவற்கு தேவையான வாய்ப்பாக அமைந்தது ரஷ்யா உளவு பிசாசுகள் இரண்டு வழிகள் பற்றி ஆய்வுகளில் கவனம் செலுத்தியது பொறிஸ் யெல்ஸ்டினின் அரசாங்கம் போராளிகளுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை ஆரம்பத்தில் இந்த உளவு அமைப்பு –FSB-எதிர்த்தாலும் பின்னர் புதிய திட்டமிடலுகான காலமாக இதை கருதியதுடன் உளவு துறையின் ஆய்வின்படி ரஷ்ய அதிபர் பொறிஸ் யெல்ஸ்டினின் அதிபராக இருக்க தகுதியற்றவர் இவரால் நாட்டின் தேசிய மேலாதிக்க நலன்களை பேன முடியாது என்ற முடிவுக்கு வந்தது எனவே முதலாவது புதிய அதிபர் ஒருவரை அடையாளம் காணவேண்டும் ,அவரை இரகசிய இராணுவ நடவடிக்கைகளின் ஊடக அதிபராக தெரிவுசெய்யவேண்டும் இந்த முடிவின் படி இவர்கள் கண்டுகொண்ட நபர்தான் விளாடிமி்ர் பூட்டின்
இரண்டாவது பாரிய அளவில் செச்னியாவில் தமது உளவு முகவர்களை உருவாக்குவது இதன் ஊடாக போராளிகள் மத்தியில் பிளவை ஏற்படுத்துவது இந்த இரண்டையும் அடிபடையாக வைத்து திட்டங்களை வகுத்தனர் உளவுத்துறை பயங்கரவாதத்தை ஏவிவிடும் திட்டத்தில் முழு கவனத்தையும் செலுத்தினர் பல நாசவேலைகளையும், கொலைகளையும் அரங்கேற்றினர்
1999 இல் ரஷ்யாவில் மொஸ்கோ, காஸ்பீஸ்க் போன்ற பகுதிகளில் தொடர் மாடி கட்டங்களில் தொடர் குண்டுகளை வெடிக்க வைத்தது இந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 300 கும் அதிகமான ரஷ்ய பொதுமக்கள் கொன்றனர் இதற்கு இரண்டு நோக்கங்கள் இருந்தன ஒன்று பொது மக்களை கொன்று பலியை போராளிகள் மீது போடுவது இதன் மூலம் தூய்மையான விடுதலை போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிப்பது செச்னியாவை ஆக்ரமிக்க தேவையான காரணகளை தேடிகொள்வது இரண்டாவது பொறிஸ் யெல்ஸ்டினின் அரசாங்கம் பலவினமானது ரஷ்யாவுக்கு பொறிஸ் பொருத்தமற்றவர் என காட்டுவது இவை இரண்டிலும் உளவு அமைப்பு-FSB-வெற்றி பெற்றது
செச்னியாவுக்குல் தனது முகவர்களை நுட்பமாக உருவாக்கியது பலர் ரஷ்ய உளவுத்துறைக்கு விலை போனார்கள் இவர்களை கொண்ட பல சிறிய அரசியல் , இராணுவ , உளவு குழுக்கள் ரஷ்ய உளவுத்துறை பிசாசுகளினால் வெற்றிகரமாக உருவாக்கபட்டு இரண்டாவது ஆக்கிரமிப்பு படையெடுப்புக்கு களம் அமைத்தனர் போராளிகளின் ஒன்றுமை மையங்களை உடைபதற்கு முயன்றனர் இதன் முதல் படியாக அரபு போராளிகளையும் செச்னியா போராளிகளுக்கும் இடையில் மோதலை உருவாக்க முயன்றனர் ஆனால் அதில் படு தோல்வி கண்டனர் பின்னர் போராளி இயக்கங்களில் இருந்து காதிரிய்யா தரீக்கா, மற்றும் நக்க்ஷபந்து தரீக்கா சார்பு போராளிகளை பிரிக்க முயன்றனர் அதில் ஆரம்பத்தில் தேல்வி கண்டாலும் பின்னர் வெற்றிபெற்றனர்
1999ல் மீண்டும் ரஷ்யா -இரண்டாவது ஆக்கிரமிப்பு- இதன் போது உளவு அமைப்பின் இராணுவ நடவடிக்கைகளின் முலம் பூட்டின் அதிபராக உருவாக்க பட்டிருந்தார் பூட்டினின் இராணுவ ஆக்கிரமிப்பு பேய்கள் செச்னியாவை ஆக்கிரமித்தது இந்த ஆக்கிரமிப்பை ஷாமில் பஷயோவினால் வழிநடத்தப்பட்ட இஸ்லாமிய போராளிகள் இயக்கம் வெற்றிகரமாக எதிர்கொண்டது பல ஆயிரம் ஆக்கிரமிப்பு படைகள் கொல்லப்பட்டது ஆனால் இரண்டாவது ஆக்கிரமிப்பு படையெடுப்பின் உளவு பிசாசுகளினால் உருவாக பட்டிருந்த உளவு கட்டமைப்பு போராளிகளுக்கு பெரும் இடியாக இறங்கியது பலர் ரஷ்யாவின் பக்கம் சாய்ந்தனர் இதில் அகமத் கதிய்ரோவ் என்பவர் முக்கியமானவர் இவர் தனது போராளிகளுடன் ரஷ்யாவுக்கு சார்பாக இஸ்லாமிய போராளிகளை எதிர்த்து போரிட்டார் ரஷ்யாவின் கனவு திட்டமான “முஸ்லிம்களின் இரத்தம் முஸ்லிம்களால் ஓட்டபடவேண்டும்” என்ற மூன்று வருட கனவு நினைவானது ரஷ்யா மகிழ்ந்தது இரண்டாவது ஆக்கிரமிப்பு படையெடுப்பின் போது ஜனாதிபதியாக இருந்த பூட்டின் மகிழ்ந்தார் ரஷ்யாவின் திட்டபடி அகமத் கதிய்ரோவ் தலைமையில் பொம்மை ஆட்சி உருவாக்கபட்டது
இவர் அஹமத் காதீரொவ் 2004 இல் கண்ணிவெடித் தாக்குதலில் ஒன்றில் கொல்லப்பட்டார் இதன் பின்னர் அழு டடஷேவிச் அல்ஹநோவ்- Alu Dadashevich Alkhanov- என்பவர் நியமிக்கபட்டார் எனிலும் 2007 இவரை நீக்கிவிட்டு பூட்டின் ரமழான் அக்மடோவிச் காதீரொவ்-Ramzan Akhmadovich Kadyrov- என்பவரை நியமித்தார் – இவர் அஹமத் காதீரொவின் மகன்- என்பதுடன் ரமழான் அக்மடோவிச் காதீரொவ் ரஷ்யாவில் அதிஉயர்விருதான Hero of the Russian Federation என்ற விருது கொடுக்க பட்டார் இவர்கள் மூன்று பேரும் ரஷ்ய மேலாதிக்கத்தின் பொம்மை வழி வந்தவர்கள் என்பது குறிபிடதக்கது.
ரஷ்யாவில் இரண்டாம் கட்ட ஆக்கிரமிப்பு போரில் அமீர் கத்தாப் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று போராடிய மாபெரும் போராளி அரப் முஜாஹிட் இவர் 2002 இல் ரஷ்ய கையாட்காளால் நஞ்சு ஊட்டபட்டு கொல்லபட்டார், ஷாமில் பஷயோவ நீண்ட போரட்டத்தின் விடுதலை தளபதி 2003 இல் ரஷ்யா ஆக்கிரமிப்பு இராணுவத்துக்கான தாக்குதல் ஒன்றை தயார் செய்யும்போது குண்டு வெடிப்பு ஒன்றில் கொல்லபட்டார் இதற்கு ரஷிய உளவுத்துறை –FSB-உரிமைகோரியது ,டகஸ்தான் மக்களால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அஸ்லான் மாஸ்ஹடோவ் 2005 இல் இராணுவக் தாக்குதல் ஒன்றில் கொல்லபட்டார்
செச்னியா விடுதலை போராட்டம்- டகஸ்தான் புவியல் அடிபடையில் செச்னியாவுக்கு அண்மையில் உள்ள பிரதேசமாகும்- இன்று செச்னியா விடுதலை போராளிகள் செச்னியா மற்றும் வட டகஸ்தான் பகுதிகளில் மையம் கொண்டு செயல் பட்டாலும் தங்களின் விடுதலை போராட்டத்தை குறுகிய ஒரு பிரதேச எல்லைக்குள் முடக்கப்பட்ட ஒரு குறும் தேசிய போராட்டமாக அடையாள படுத்துவதை விடுதலை போராளிகள் ஏற்றுகொள்ள வில்லை தமது போராட்டம் குறும் தேசிய எல்லைகளை கடந்த கவ்காஸஸ் என்ற பரந்த முஸ்லிம் வரலாற்று தேசம் என்ற விடுதலை கொள்கை கொண்டுலார்கள் செச்னிய எல்லைகளை கடந்த பல தேசங்களை கொண்டதுதான் இவர்கள் கூறும் “எமிடேஸ் ஒப் கவ்காஸஸ்”- The Emirate of Caucasus இது கவ்காஸஸ் பிராந்தியத்தில் பல முஸ்லிம் தேசங்களை உள்ளடகியுள்ளது இதில் ஒரு தேசம் தான் செச்னியா , இந்த போராளிகள் குறிபிடும் “எமிடேஸ் ஒப் கவ்காஸஸ்” செச்னியா-Chechnya,வட ஒசிடியா-North Ossetia, டகஸ்தான்-Dagestan, பல்காரியா -Balkaria,நோகி-Nogay போன்ற தேசங்களை உள்ளடகிய பரந்த தேசம் இதன் தற்போதைய தளபதியான டோகோ உமரோவ் தமது போராளிகள் அஸர்பைஜான் தொடக்கம் Abkhazia . அப்காசியா வரை பறந்து இருபதாக கூறுகின்றார்
அமீர் கத்தாப், ஷாமில் பஷயோவ போன்ற செச்னிய தளபதிகளினால் போதிக்க பட்ட குறும் தேசிய எல்லைகளை கடந்த பரந்த முஸ்லிம் வரலாற்று தேசம் “கவ்காஸஸ்” என்ற கோட்பாட்டை மிகவும் வலுவாக பற்றி பிடித்தபடி டோகோ உமரோவ்வின் தலைமையில் போராடிவருகின்றார்கள் பல இழப்புகளை சந்தித்துள்ளது ஆனாலும் இன்னும் போராட்டம் வட டகஸ்தான் பகுதியில் இன்னும் முனைப்புடன் இருந்து வருகிறது விடுதலை போராட்ட அமைப்பின் தலைவர்கள் தொடராக கொல்லப்டார்கள் ஆனால் அதன் விடுதலை போராட்டம் இன்றும் தொடர்கிறது இந்த போராட்ட அமைப்பின் தலைவராக இன்று டோகோ உமரோவ் என்ற போராளி செயல்பட்டுவருகிறார் – சில தினகளுக்கு முன்னர் டோகோ உமரோவ்வின் சகோதரர் ரோய்டர் செய்தி சேவைக்கு அளித்த நேர்காணலில் 5000 வரையிலான போராளிகள் இன்று களத்தில் இருபதாக கூறியுள்ளார் என்பது குறிபிடதக்கது
1991ம் ஆண்டில் சோவியத் யூனியன் சிதறிய பிறகு நடந்த மூன்றாவது அதிபர் தேர்தலும் நடந்தது இதில் டிமிட்ரி மெட்வடே அதிபராக தெரிவு செய்யபட்டார் . முதல் அதிபராக போரிஸ் எல்ட்சின் தேர்வானார். இரண்டாவது தேர்தலில் விளாடிமி்ர் புடின் அதிபராக்கபட்டார் ரஷ்யாவின் மிகப் பிரபலமான அதிபராக இருந்த பூட்டின் இரு முறை அதிபராக இருந்துவிட்டதால் மூன்றாவது அதிபர் தேர்தலில் தனது வலதுகரமான துணை பிரதமர் டிமிட்ரி மெட்வடே வைடிமிட்ரி மெட்வடேயை பூட்டின் வெற்றிபெற செய்துள்ளார் இவர் தவிர கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜென்னடி ஜுகனோவ், தேசியா தலைவர் விலாடிமிர் ஜிரினோவ்ஸ்கி, ஜனநாயகக் கட்சித் தலைவர் ஆண்ட்ரி பொக்தனோவ் ஆகியோரும் களத்தில் இருந்தனர். ஆனாலும் மிக கடும் போக்குகொண்ட பூட்டினின் வாரிசுதான் தெரிவு செய்யபட்டார் இவர் பூட்டின் எதை வேண்டினாலும் உடன் செய்து முடிப்பவர் என்ற சிறப்பு பெயர் பெற்றவர் இந்த மூன்று அதிபர்களையும் எதிர்த்து கவ்காஸஸ் விடுதலை போராட்டம் தொடர்கிறது.
Source booksBlowing up Russia: Terror from Within by Alexander Litvinenko
Lubyanka Criminal Group by Alexander Litvinenko
Book of a Mujahidden by shamil Basaev
Security in Exchange for Independence by Udug Movladi