அயோத்தியில் பாபர் மஸ்ஜித் இருந்த சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக அலஹாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து முஸ்லீம் வக்ப் வாரியம் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
அயோத்தியாவில் உள்ள அந்த இடத்தில் மூன்றில் இரண்டு பங்கை இந்து அமைப்புக்களும், மூன்றில் ஒரு பங்கை முஸ்லீம் அமைப்புக்கும் பிரித்து அலாஹாபாத் உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது விரிவாக பார்க்க
கடந்த 1992 ஆம் ஆண்டு அயோத்தியில் இருந்த பாபர் மஸ்ஜித் இந்து பயங்கரவாதிகளினால் இடித்துத் தள்ளப்பட்டதை அடுத்து நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைகளில் 3000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
இந்த இடத்தில்தான் இராமர் பிறந்ததாக இந்துக்களில் ஒரு சாரர் கருதுகின்றனர். இந்த இடத்தின் ஒட்டுமொத்த உரிமையை தாம் விட்டுக் கொடுக்க முடியாது என்று முஸ்லீம்கள் சார்பிலான மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.