அம்லெஸ்ஸன் பிராந்தியத்தில் மேலும் 180 வீட்டுமனைகளைக் கொண்ட சட்டவிரோத யூதக் குடியேற்றமொன்றைப் புதிதாக நிர்மாணிப்பதற்கான அனுமதியை ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலம் நகரில் உள்ள இஸ்ரேலிய மாநகரசபை அண்மையில் வழங்கியுள்ளது.
37,460 சதுரமீற்றர் பரப்பளவில் 180 வீட்டுமனைகளைக் கொண்ட ஐந்து பெருங் கட்டடத் தொகுதிகளைக் கட்டுவதெனத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் 30 தூனம் (1 தூனம் = 1000 சதுர அடிகள்) பரப்பளவு நிலம் யூத வழிபாட்டுத்தலம், சிறுவர் விளையாட்டுப் பூங்கா முதலான பொது வசதிகளுக்காகப் பயன்படுத்தப்படவிருப்பதாகவும் அம்லெஸ்ஸன் கழகத்தைச் சேர்ந்த ஜமால் லாஃபி தெரிவித்துள்ளார் விரிவாக பார்க்க
அவர் மேலும் தெரிவிக்கையில், மேற்படி சட்டவிரோத யூதக் குடியிருப்பு நிர்மாணத்தின் பொருட்டு பலஸ்தீனர்களுக்குச் சொந்தமான 67 தூனம் பரப்பளவுடைய நிலம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கத்தினால் பலவந்தமாக அபகரிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.