காஸாவில் வாழும் பலஸ்தீன் பொதுமக்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் நாளாந்தம் கட்டவிழ்த்துவிடப்படும் அராஜகமான வன்முறைகளை எதிர்த்து முழு உலகும் கிளர்ந்தெழ வேண்டிய காலம் வந்துவிட்டது என காஸாவை மையமாகக் கொண்ட பலஸ்தீன் அரசாங்கம் சர்வதேச சமூகத்தை நோக்கிக் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை -21.12.2010- பலஸ்தீன் அரசு வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை காஸா பிராந்தியத்தில் கடந்த திங்கட்கிழமை -20.12.2010- இரவு மேற்கொண்ட கண்மூடித்தனமான தொடர் வான்படைத் தாக்குதல்களினால் பொதுமக்கள் மத்தியில் உயிரிழப்புக்களும் பெரும் பொருட் சேதங்களும் ஏற்பட்டுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது விரிவாக பார்க்க
மேற்படி வான்படைத் தாக்குதல்களின் விளைவாக பலஸ்தீன் பொதுமக்கள் மத்தியில் குறிப்பாகப் பெண்கள் மற்றும் சிறுவர் மத்தியில் மிகப் பாரதூரமான உளவியல் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன என்றும், ஏற்பட்டுள்ள அனர்த்தங்களில் இதுவே மிக மோசமானதாகும் எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
பலஸ்தீன் மக்கள்மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கம் நடாத்திவரும் அராஜக அடக்குமுறைகளை உலகம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதானது பலஸ்தீனர்கள் மீதான அதன் மும்முனைத் தாக்குதல்களை மேலும் முனைப்போடு முன்னெடுக்கத் தொடர்ந்தும் ஊக்கமளித்து வருவது குறிப்பிடத்தக்கது.