அல்லாஹ்வின் தூதர் மூஸா கடலை இரண்டாக பிளந்தார் என்று அல் குர்ஆன் மற்றும் பைபிள் குறிபிடுகின்றது இந்த நிகழ்வை விஞ்ஞான பூர்வமாக அளவீடுகளை கொண்டு ஆய்வுகளை மேற்கொண்ட விஞ்ஞான ஆய்வு நிறுவனமான National Center for Atmospheric Research -NCAR மற்றும் அமெரிக்க பல்கலை கழகமான the University of Colorado ஆகியன இந்த சம்பவம் விஞ்ஞான பூர்வமா சாத்தியமானது என்று தெரிவித்துள்ளது இவற்றை கம்ப்யூட்டர் கிராபிக் மூலம் விளக்கியுள்ளனர் இதில் இவர்கள் 12 மணித்தியாலங்கள் 63 மைல்கள் வேகத்தில் வீசும் காற்று இரண்டு மீட்டர் ஆழமுள்ள தண்ணீரை புறம் தள்ளகூடியது என்றும் நான்கு மணித்தியாலங்களுக்கு பாதையையும் ஏற்படுத்தும் என்பதை காட்டுகின்றனர் இந்த ஆய்வுக்கு மாற்று கருத்துகள் இன்னும் வெளிவரவில்லை
மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்; இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.
இந்த நேரத்தில் தானா? சற்று முன்வரை திடனாக நீ மாறு செய்துகொண்டிருந்தாய். இன்னும் குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய். எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம். நிச்சயமாக மக்களில் பெரும்பாலானோர் நம் அத்தாட்சிகளைப் பற்றி அலட்சியமாக இருக்கின்றனர்” அல் குர்ஆன் 10: 90,91,92