M.ரிஸ்னி முஹம்மட்
ஹைதராபாத்தின் மக்கா மஸ்ஜித் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய அசிமானந்தா சாமியாருக்கு , 68 பேரைர் பலிகொண்ட சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்புச் சம்பவத்திலும் தொடர்பு உள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு ஏஜென்சியின் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன
மக்கா மஸ்ஜிதில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு குண்டுவெடித்தது. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் இந்து பயங்கரவாதிகள் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில் நவம்பர் 19ம் தேதி 59 வயதாகும் அசிமானந்த்தை ஹரித்வாரில் வைத்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர் விரிவாக பார்க்க Video
அவரிடம் நடத்திய விசாரணையில் மெக்கா மசூதி குண்டுவெடிப்பில் தனக்குள்ள தொடர்பை அவர் ஒத்துக் கொண்டதுடன். மேலும் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பில் உள்ள தொடர்பையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார் என்று இந்திய தேசிய புலனாய்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது.
அதேவேளை அஜ்மீர் தர்கா, ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரியான சுனில் ஜோஷியை கொலைச்செய்தது அவரது ஆர்.எஸ்.எஸ் கூட்டாளிகள்தான் என மத்திய பிரதேச மாநில போலீஸ் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் ஏ.டி.எஸ் கைதுச்செய்த குண்டுவெடிப்புடன் தொடர்புடைய ஹர்ஷத் பாய் சோலங்கிதான் இந்த வாக்குமூலத்தை அளித்துள்ளார் அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் சாட்சியாக மாற சுனில் ஜோஷி திட்டமிட்டிருந்த காரணத்தினால் கொலைச் செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸ் கருதுகிறது .
மும்பையின் ஹேமந்த் கர்கரே மாலேகான் குண்டு வெடிப்புக்கு காரணம் பிரக்ஞைய தாகூர் என்ற இந்து காவிதான் என்றபோதுதான் இந்த இந்து பயங்கரவாதத்தின் முகத்திரை முதலில் கிழிய ஆரம்பித்தது.ஆர் எஸ் எஸ், பார”தீய” ஜனதா, சிவசேன போன்ற இந்து மதவெறி இயக்கங்களைச் சேர்ந்த காவிகள் இதற்கெல்லாம் காரணம் என்று முதலில் ஹேமந்த் கர்கரே என்ற அதிகாரி தெரிவித்தார் பின்னர் தான் புலனாய்வு அறிக்கை விவரங்கள் வெளிவர ஆரம்பித்தது.
ஹேமந்த் கர்கரே பின்னர் கொலை செய்யபட்டார் நேர்மையான ஒரு அதிகாரியின் மாறன் இதில் சந்தேகம் எழுப்பிய காங்கிரஸ் அமைச்சரின் பதவியே ஆட்டம் கண்டது அந்த அளவுக்கு இந்திய நிர்வாகத்தில் அணைத்து துறைகளிலும் இந்து பயங்கரவாதம் ஆழ ஊடுருவியுள்ளது என்பது இந்தியாவில் வெளிப்படையான உண்மை
இந்த நிலையில் பாபரி மஸ்ஜித் உடைத்து தகர்க்க காரணமாக இருந்த முக்கியமான அரசியல் புள்ளிகள் என்று கண்டுகொள்ளப்பட்ட 67 பேரில் சத்வி ரிதம்பரா முக்கியமானவர் இவர் இம்மாதம் 27ம் திகதி இலங்கை வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1992 டிசம்பர் 6ஆம் திகதி 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபரி மஸ்ஜித் இந்து பயங்கரவாதிகளால் உடைத்து தகர்க்கப்பட்டது. இதற்குத் தலைமை வகித்த 67 பேரில் சத்வி ரிதம்பரா முக்கியமானவர். இந்த காவி பயங்கரவாதியின் இலங்கை வருகையை தடுக்கும் முயற்சியில் சில இஸ்லாமிய அமைப்புகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது