திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Thursday, February 3, 2011

தொண்டனை நம்பாத பி,ஜே.

,
தன் கைப்பிடிக்குள் இயக்கத்தை பின்னிருந்து இயக்கிய பி.ஜே. யாரையும் நம்பாமல் 
தான் உருவாக்கிய பைலாவுக்கு மாற்றமாக தானே முடி சூட்டி கொண்டதை பார்த்து , அன்றைக்கு பதவி வேண்டாம் என்று இவர் நடத்திய் நாடகத்தைக்  கண்டு காமராஜர் அரங்க பொதுக்குழுவில் கண்ணீர் விட்ட மக்கள் இன்று  சேலம் பொதுக்குழு வில்  தலைவரான செயலை கண்டு வெறுத்துப் போய் நிற்கும் வேளையில்    பி.ஜே வுக்கு சிம்மாசனம் தந்த சேலம் பொதுக்குழுவில் இன்னொரு அவலமும் நடந்துள்ளது!


பொதுவாக அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்கள் பொது  நிகழ்சிகளில் கலந்து கொள்ளும் போது கூட இருப்பார்கள் ! மற்ற அரங்க நிகழ்சிகள் , தங்கள் இயக்க செயற்குழு பொதுக்குழுவில் எல்லாம் அவர்களை வெளியே நிறுத்தி விடுவார்கள். ஏனெனில் அங்கெல்லாம் அவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்காது என்பதாலும் முழுக்க முழுக்க தங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் காவல் துறை  பாதுகாப்பை விட தங்களின் தொண்டர்களை நம்புவதால் அவர்களை வெளியிலேயே நிறுத்தி விடுவார்கள் அல்லது குறைந்த பட்சம் மேடையில் அனுமதிக்க மாட்டார்கள்.


இந்த நடை முறையை இசட் பிரிவு பாதுகாப்புள்ள பிரதமர் தொடங்கி அத்வானி, சோனியா, ராகுல் என தேசிய கட்சிகளும் இங்கு மாநிலத்தில் ஜெயலலிதா கலந்து கொள்ளும் பொதுக்குழு செயற்குழு மேடைகளிலும் காணலாம். தினம் ஒரு பாராட்டு விழாவில் கலந்துகொள்ளும்  கலைஞரின் மேடைகளிலும் , கட்சி பொதுக்குழு ,செயற்குழுவிலும் நீங்கள் பாதுகாப்பிற்கு வரும்  காவல் துறை அதிகாரிகளை மேடையில் காண முடியாது!


ஆனால் அல்லாஹ்வின் பாதையில் உயிரை விட்டால் சொர்க்கம் என்று சொல்லக்கூடிய ஆன்மிக தலைவர் அல்லாஹ்வின் பாதுகாவலை நம்பாமல், தன்னை உயிருக்கு மேலாக நம்பி தக்லீத் செய்யும்  தன் தொண்டர்களையும்  நம்பாமல், குறைந்த பட்சம் மேடைக்கு கீழே  நிறுத்தாமல் விட்டதன் மூலம் மேடையில் உள்ள சக நிர்வாகிகளையும் நம்பாமல் மேடையில் தனக்குப் பக்கத்தில் நிறுத்தி வைத்திருப்பது ஒட்டு மொத்த த.த.ஜ. தொண்டர்களுக்கு அவமானம் ஆகும்.


த .த.ஜ.வினரை தவிர வேறு யாரும் நுழைய முடியாத த.த.ஜ.வின் பொதுக்குழுவில் த.த.ஜ.தலைவர்கள் மட்டுமே இருக்கும் மேடையில் எதற்கு துப்பாக்கியுடன் பாதுகாப்பு? அல்லாஹ்வின் அச்சம் எடுபட்டுப்போனால் இவ்வுலகில் உள்ள அனைத்திற்கும் அஞ்ச வேண்டியிருக்கும் என்பதற்கு பி.ஜே. உதாரணமாகத் திகழ்கிறார். உயிருக்கு அஞ்சும் இவர் எப்படி சமுதாய போராளியாக முடியம்? எப்படி போராட்ட அமைப்பின் தலைவனாக முடியும்?


நபி [ஸல்] அவர்களைப் பற்றி 'அந்த மாமனிதர் '  எனும் உரையில் குறிப்பிடும் போது அவர்களுக்கு வாயிற்காப்போன் இருந்ததில்லை என்று பேசினீர்களே! எழுதினீர்களே! தனியாக மரத்தடியில் படுத்திருந்த நபிகளாரை கொல்ல வந்த எதிரி கையில் வாளுடன் 'இப்போது என்னிடமிருந்து யார் உன்னை காப்பாற்றுவார்? எனக்கேட்ட போது 'அல்லாஹ் ' என நபிகளாரின் சிம்மக்குரலை கேட்டு கீழே போட்ட கத்தியை  தான் எடுத்துக் கொண்டு 'இப்போது உன்னை காப்பாற்றுவது யார்? என்ற நபிகளாரின் வீரத்தை உரக்க முழங்கிய நீங்கள் இன்றைக்கு முஹ்மீன்களுக்கு மத்தியில், அதுவும் சொந்த இயக்கத்தினர் மத்தியில்  துப்பாக்கி ஏந்திய பாதுகாப்போடு இருப்பது வெட்கக் கெடு இல்லையா?


அல்லாஹ்வே எனக்கு பாதுகாவலன் நீங்கள் வெளியேறுங்கள்! என காவலர்களிடம் ஏன் சொல்லவில்லை?
ஏன்  சொல்லவில்லை ? பாவம் எப்படி சொல்வீர்கள் ? பாதுகாவலனான அந்த அல்லாஹ்வை தொழ பள்ளிவாசல்  வருவதற்கே 'பாதுகாப்பு இல்லை அதனால் தான் தொழ வருவதில்லை' ! என்று கூறியவரயிற்றே நீங்கள்!  உங்களை விட அதிக அச்சுறுத்துதலை  கொண்ட நபி[ஸல்] தன் கடைசிக் காலம் வரை கால் இழுபட தொழுகைக்கு வந்த   ஹதீஸில் உங்களுக்கு படிப்பினை இல்லையா?
அல்லாஹ்வின் பள்ளிக்கு தொழ வருவதால் அந்த உயிர் போகுமென்றால் போகட்டுமே! அதுவும் நீங்கள் சொன்ன ஷஹீத் அந்தஸ்து தானே ! ஆகையால் 
  இனியாவது  அல்லாஹ்வின் பாதுகாவலை நம்பி அவனை தொழ பள்ளி வாருங்கள் ! குறைந்த பட்சம் உங்கள் கூட இருப்பவர்களையாவது நம்புங்கள்!


அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்) அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்;. ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாது காவலர்கள்;. அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன. அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர்.
[அல்-குர் ஆன் 2:257 ]

0 comments to “தொண்டனை நம்பாத பி,ஜே.”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates